Tuesday, November 8, 2022

ரி20யில் சம்பியன்களை சிதறடித்த நெதர்லாந்து


 2024 ஆம் அண்டு நடைபெறும் ரி20 உலகக்கிண்ணப் போட்டியில் நேரடியாக விளையாடுவதற்கு நெதர்லாந்து தகுதி பெற்றுள்ளது.

 அமெரிக்கா , மேற்கு இந்தியத்தீவுகள் ஆகியவை இணைந்து 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் ரி20  உலகக்கிண்ணப் போட்டியை நடத்துகின்றன. அமெரிக்காவும்,  மேற்கு இந்தியாவும்   நேரடியாகத்   தகுதிபெற்றுள்ளன. அதேபோல், இந்தாண்டு நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணத் தொடரில் முதல்  8 இடங்களை பிடித்த அணிகளும் நேரடியாக தகுதி பெற்றன. மேலும், புள்ளிப்பட்டியல் அடிப்படையில், பங்களாதேஷ்,  ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிபெற்றன.

அமெரிக்கா,இந்தியா,இங்கிலாந்து,நியூசிலாந்து,பாகிஸ்தான்,அவுஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா,இலங்கை,நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் ,பங்களாதேஷ் ஆகியன தகுதி பெற்றுள்ளன. இவை தவிர   அமெரிக்க தகுதி சுற்றில் ஒரு அணி, ஆப்பிரிக்க தகுதி சுற்றில் 2 அணிகள், ஆசிய தகுதி சுற்றில் 2 அணிகள், கிழக்கு ஆசிய-பசிபிக் தகுதி சுற்றில் ஒரு அணி, ஐரோப்பிய தகுதி சுற்றில் 2 அணிகள் என மொத்தம் மேலும்  8 அணிகளும் இதில் பங்கேற்க உள்ளன. இதையடுத்து வருகிற 2024 ரி20 உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ளன.

ரி20 உலகக்கிண்ண போட்டியில் அரையிறுதி வாய்ப்பை 99% உறுதி செய்த தென்னாப்பிரிக்காவை அதனுடைய கடைசிப் போட்டியில் எதிர்கொண்ட   நெதர்லாந்து யாருமே எதிர்பாராத வகையில் 13 ஓட்டங்ள் வித்தியாசத்தில் தோற்கடித்து உலகக் கிண்ணத்தில் இருந்து  வெளியேற்றி அதிர்ச்சியை கொடுத்தது. வரலாற்றில் காலம் காலமாக உலகக் கோப்பையில் இது போன்ற முக்கிய தருணங்களில் சொதப்பி வெளியேறும் தென்னாப்பிரிக்கா மீண்டும் ஒருமுறை தன்னைச் சோக்கர் என்பதை நிரூபித்து வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தாலும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது.

ஸிம்பாப்வேவிடம் ஒரு ஓட்டத்தால்  தோற்று அரை இறுதி வாய்ப்பையும் 90% நழுவ விட்டது. ஒரு கட்டத்தில் கதை முடிந்ததாக கருதப்பட்ட  பாகிஸ்தான்  அதற்கடுத்த 2 வெற்றிகளை பதிவு செய்த நிலையில் எதிர்பாராத விதமாக தென் ஆப்பிரிக்கா வெளியேறியதால் கடைசி போட்டியில்  பங்களாதேஷைத் தோற்கடித்து அதிர்ஷ்டத்துடன் அரையிறுதிக்கு தகுதி பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது. மொத்தத்தில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல நெதர்லாந்து மிகப்பெரிய அதிர்ஷ்டத்தையும் வழியையும் ஏற்படுத்தி விட்டு நாடு திரும்பியுள்ளதால் அந்த அணிக்கு பாகிஸ்தான் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

சம்பியன் கிண்ணத்தைத்  கோப்பையை தக்க வைக்கும் அணியாக கருதப்பட்ட நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா ரன் ரேட் அடிப்படையில் நூலிழையில் அரை இறுதிக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறி அதிர்ச்சியை சந்தித்தது.

 

 

No comments: