கிரிக்கெட் போட்டி நடக்கும் போது ரசிகர்கள் அத்துமீறி நுழைந்து வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவது,புகைப்படம் எடுப்பது, பேசுவது போன்ற சம்பவங்களைத்தான் இதுவரை கேட்டிருந்தோம். ஆனால், ஒரு நாய் உள்ளே புகுந்து பந்தை எடுத்துச்சென்ற வினோதமான சம்பவம் அயர்லாந்தில் நடந்துள்ளது.
பெல்பாஸ்ட் நகரில் அயர்லாந்து
உள்நாட்டு மகளிர் ரி20 போட்டிகள் நடந்து வருகின்றன. பிரடி , சிஎஸ்என்ஐ அணிகளுக்கு இடையிலான
அரையிறுதிஆட்டத்தின் போதே நாய் உள்ளேபுகுந்தது.
மழை காரணமாக ஆட்டம் தடைபட்டு
டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 12 ஓவர்களில் 74 ஓட்டங்கள் எனும் இலக்கு சிஸ்என்ஐ அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. சிஎஸ்என்ஐ அணி 6 விக்கெட்
இழப்புக்கு 47 ஓட்டங்கள்சேர்த்திருந்தது. 21 பந்துகளில் 27 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி
எனும் இக்கட்டான கட்டத்தில் சிஎஸ்என்எல் அணி இருந்தது.
9 வது ஓவரை பிரெடி அணி பந்துவீச்சாளர்
வீசினார், வீராங்கனை அபி லெக்கி துடுப்பெடுத்தாடினார் செய்தார். 3-வது பந்தை வீசியபோது அபி லெக்கி பந்தை தட்டிவிட்டு
ஓடினார்.
க ளத்
தடுப்பா ளர் பந்தை பிடித்து விக்கெட் கீப்பர் ராச்செல்
ஹெப்பர்னிடம் வீசினார். அப்போது ஒரு நாய்க்குட்டி
அவ்ருடன் சேர்ந்து ஓடியது. பந்தைப் பிடித்து விக்கெட் கீப்பர் ஹெப்பர்ன் ஸ்டெம்பில்
அடிக்க முயன்றபோது பந்து தவறியது.
அந்த நாய் பந்தைக் கவ்விக் கொண்டு மீண்டும் பார்வையாளர் மாடத்தை நோக்கி ஓடியது. இதைப் பார்த்த மைதானத்தில் இருந்த வீராங்கனைகள், பார்வையாளர்கள் அனைவரும் சிரித்தனர். வீராங்கனை ஒருவர் நாயைத் துரத்திச் சென்றார். நாயின் உரிமையாலரும் மைதானத்துக்குள் ஓடினார். இன்னொரு வீராங்கனை நாயைப் பிடித்தார். நாயிடம் இருந்து பந்தை வாங்கி, வீராங்கனை ஒருவர் நாயை உரிமையாளரிடம் கொடுத்தார்.
No comments:
Post a Comment