Sunday, April 9, 2023

வெளிநாட்டு மண்ணில் சதம் அடித்த முதல் அயர்லாந்து வீரர்



பங்களாதேஷுக்குச் சென்ற அயர்லாந்து  அணி,   ஒருநாள், ரி20 , டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் மற்றும் ரி20 தொடரை வங்காளதேச அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளும் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி   டாக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த அயர்லாந்து அணி சகல விக்கெற்களையும் இழந்து 214 ஓட்டங்கள் எடுத்தது.  முதல் இன்னிங்சை ஆடியபங்களாதேஷ்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ஓட்டங்கள் எடுத்தது.

இரண்டாவது 2வது இன்னிங்சில் ஆடி வரும் அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் கோம்மின்ஸ், மெக்கொல்லம்,க‌ப்டன் பால்பிரைன் ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினாலும் ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர் கூட்டணி சிறப்பாக ஆடியது. ஹாரி டெக்டர் 56 ஓட்டங்களில் வெளியேறினார்.

 லோர்கன் டக்கர் அபாரமாக ஆடினார்.தனி ஆளாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 108 ஓட்டங்கள் அடித்தார்.  அயர்லாந்து அணிக்காக வெளிநாட்டு மண்ணில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை லோர்கன் டக்கர் படைத்துள்ளார்.  அயர்லாந்து அணி டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த பிறகு தங்களால் முடிந்த அளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது

அயர்லாந்து அணிக்காக 2வது டெஸ்ட் போட்டியில் ஆடும் ஆடும் லோர்கன் இதற்கு முன்பு ஆடிய டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்து அசத்தியிருந்தார். 26 வயதே ஆன லோர்கன் டக்கர் தற்போது தான் ஆடிய 2வது டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார். அயர்லாந்து அணிக்காக முதன்முதலாக சதம் அடித்த வீரர்  என்ற பெருமையை கெவின் ஓ ப்ரையன் தன்வசம் வைத்துள்ளார்.

 

No comments: