2011ம் ஆண்டு ஓரியோ பிஸ்கட் அறிமுகப்படுத்தப்பட்ட போது, உலகக் கிண்ணத்தை இந்தியா வென்றது. இதே போல இந்தாண்டு ஓரியோவின் புதிய வடிவ பிஸ்கட்டை டோனி வெளியிட்டார். அப்போது அவர், இந்தாண்டு சில சுவாரஸ்யங்கள் நடக்கலாம் என சூசகமாக கூறியிருந்தார். அதே போலவே இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்றது.
2011ம் ஆண்டு இங்கிலாந்து அணியை முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் அயர்லாந்து வீழ்த்தியிருந்தது. அப்போது இந்தியா சம்பியனானது. அதே போல இந்தாண்டு இங்கிலாந்து அணியை முதல் முறையாக ரி20 கிரிக்கெட்டில் அயர்லாந்து வீழ்த்தியுள்ளது. இதனால் இந்திய அணியின் பக்கம் கவனம் திரும்பியுள்ளது.
2011ம் ஆண்டு லீக் சுற்றில் இந்திய அணியை தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தியது அந்த தொடரில் இந்தியா பெற்ற ஒரே ஒரு தோல்வி அதுதான். இதே போல தற்போதும், லீக் சுற்றில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிடம் தோற்றுள்ளது. அதுவும் முதல் தோல்வியாகும். இதனால் 2011ம் ஆண்டு நடந்த அதே சம்பவங்கள் மீண்டும் ரிப்பீட் ஆவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
No comments:
Post a Comment