அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அயர்ர்லாந்துக்கு எதிரான போட்டியில் 9விக்கெட்களால் இலங்கை வெற்றி பெற்றது.
நாணயச்
சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில்
துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து
128 ஓட்டங்கள்
எடுத்தது. இலங்கை 15 ஓவர்களில்
ஒரு விக்கெட்டை இழந்து 133 ஓட்டங்கள்
எடுத்தது
அயர்லாந்தின் பலமான ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி ஆரம்பத்திலேயே பிரிந்தது. ஆண்டி பால்பிரின் 1 (5) , இலங்கை மிடில் ஓவர்களில் டூக்கர் 10 (11), குர்ட்டிஸ் கேம்பர் 2 (4), ஜார்ஜ் டாக்ரெல் 14 (16), கெராத் டிலானி 9 (6) என முக்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அயர்லாந்துக்கு அதிகபட்சமாக ஹேரி டெக்டர் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 45 (42) ஓட்டங்களும் தொடக்க வீரர் பால் ஸ்டெர்லிங் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 34 (25) ஓட்டங்களும் எடுத்தனர். கட்டுக்கோப்பாக பந்து வீசிய இலங்கை சார்பில் வணிந்து ஹசரங்கா மஹீஸ் தீக்சனா ஆகிய சுழல் பந்து வீச்சு ஜோடி தலா 2 விக்கெட்டுகளை எடுத்து.
இலங்கையில் ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி அதிரடியாக விளையாடியது. 63 ஓட்டங்கள் எடுத்தபோது டீ சில்வா 2 பவுண்டரி 1 சிக்சருடன் 31 (25) ஓட்டங்களுடன் வெளியேறினார். தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் 5 பவுண்டரி 3 சிக்சருடன் அரை சதமடித்து 68* (43) ஓட்டங்கள் விளாசினார். அவருடன் பொறுப்பாக துடுப்பெடுத்தாடிய சரித் அஸலங்கா 2 பவுண்டரியுடன் 31* (22) ஓட்டங்கள் எடுத்தார். 15 ஓவரிலேயே 133/1 ஓட்டங்கள் குவித்த இலங்கை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஷால் மென்டிஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment