Sunday, June 14, 2026

பிறேஸில் மொராக்கோ போட்டி சமநிலையில் முடிந்தது

அமெரிக்காவின் மெட்லைஃப் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற   மொராக்கோ அணிக்கு எதிரான குரூப் சி பிரிவு ஆட்டத்தில், நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியரின் அதிரடி கோலால் பிறேஸில் அணி 1-1 என்ற கணக்கில் டிரா செய்த‌து.

 ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் ஆப்பிரிக்க சம்பியனான மொராக்கோ அணியின் இஸ்மாயில் சைபாரி ஒரு லாவகமான கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். பிறேஸில்  கோல்கீப்பர் அலிசன் பெக்கரின் தலைக்கு 

மொராக்கோ முன்னிலை பெற்ற 11 நிமிடங்களிலேயே ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் புருனோ குய்மரைஸ் கொடுத்த பாஸை பெற்றுக்கொண்ட வினிசியஸ் ஜூனியர், மொராக்கோ கோல்கீப்பர் யாசின் போனோவை ஏமாற்றி பந்தை அற்புதமாக கோல் போஸ்ட்டிற்குள் அனுப்பினார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. இது சர்வதேச போட்டிகளில் வினிசியஸின் 10வது கோலாகும்.

உலகத் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள பிறேஸில் மற்றும் 7வது இடத்தில் உள்ள மொராக்கோ அணிகள் மோதிய இப்போட்டியை மைதானத்தில் 80,663 ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர். வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிறேஸில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் இப்போட்டியில் விளையாடவில்லை. மேலும், பிரேசில் அணியின் முதல் வெளிநாட்டு பயிற்சியாளரான இத்தாலியின் கார்லோ அன்செலோட்டிக்கு இது உலகக் கோப்பையில் முதல் ஆட்டமாகும்.

இந்த டிராவின் மூலம், உலகக் கோப்பை தொடக்க ஆட்டங்களில் கடந்த 21 போட்டிகளாக பிரேசில் அணி தோல்வியே சந்திக்கவில்லை (17 வெற்றிகள்) என்ற பெருமையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.  1934ல் ஸ்பெயினிடம் பிறேஸில் தோற்றிருந்தது.   உலகக்  கிண்ண  தொடக்க ஆட்டங்களில் மொராக்கோ அணி  இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை என்ற சோகம் நீடிக்கிறது.

  

Saturday, June 13, 2026

கனடாவைக் காப்பாற்றிய மாற்று வீரர் கைல் லாரின்

கனடாவின் டொராண்டோ மைதானத்தில் நடைபெற்ற   குரூப் பி பிரிவு லீக் போட்டியில் விளையாடிய  பொஸ்னியா, கனடா ஆகியவை தலா ஒரு கோல்  அடித்தன.  பொஸ்னியாவுக்கு  எதிரான போட்டியில் பின் தங்கியிருந்த கனடா அணி, மாற்று வீரராக களம் கண்ட கைல் லாரினின் அதிரடி கோலால் 1-1 என்ற கணக்கில்   டிரா செய்தது.

  இப்போட்டியில், தொடக்கம் முதலே சொந்த நாட்டு ரசிகர்களின் பேராதரவுடன் கனடா அணி ஆதிக்கம் செலுத்தியது. எனினும், ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் பொஸ்னியா அணி முதல் கோலை அடித்தது. இவான் பாசிக் வீசிய கார்னர் பந்தை சீட் கொலாசினாக் தட்டிவிட, அதைப் பயன்படுத்திய ஜோவோ லுகிக் பந்தை கோலாக மாற்றினார். இது அவரது சர்வதேச கால்பந்து வாழ்க்கையின் முதல் கோலாகும். இதனால் முதல் பாதி முடிவில் போஸ்னியா 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் கனடா அணி ஆக்ரோஷமாக விளையாடி பல கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் கனடாவின் ரிச்சி லாரியா அடித்த பந்து கோல் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொஸ்னியா வீரர் கொலாசினாக் அதனை கோல் கோட்டிற்குள் இருந்து தடுத்து கிராஸ்பாரில் படச் செய்து அற்புதமாகக் காப்பாற்றினார். காயமடைந்த கப்டன் அல்போன்சோ டேவிஸ் இல்லாத நிலையிலும் கனடா வீரர்கள் தொடர்ந்து போராடினர்.

தோல்வியின் விளிம்பில் இருந்த கனடா அணிக்கு மீட்பராக நட்சத்திர வீரர் கைல் லாரின் உருவெடுத்தார். ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய அவர், அடுத்த 2 நிமிடங்களிலேயே (78வது நிமிடத்தில்) ஒரு அபாரமான கோலை அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். பிராமிஸ் டேவிட் கொடுத்த பாஸை லாரின் லாவகமாக கோலாக மாற்றினார். கூடுதல் நேரத்தில் அவர் அடித்த மற்றொரு கோல் வாய்ப்பை பொஸ்னியாவின் தாரிக் முஹாரெமோவிக் தடுத்துக் காப்பாற்றினார்.

 2014ஆம் ஆண்டுக்கு பிறகு   உலகக்  கிண்ணப் போட்டியில்  களம் காணும் பொஸ்னியா அணி, இந்த கடினமான ஆட்டத்தின் மூலம் 1 புள்ளியை பெற்றது. கனடா அணிக்கும் 1 புள்ளி வழங்கப்பட்டது.

  

அமெரிக்கா அதிரடி வீழ்ந்தது பரகுவே

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் 'டி' (Group D) பிரிவின் முதல் போட்டியில், பராகுவே அணிக்கு எதிராக அமெரிக்க அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கம் முதலே அமெரிக்க வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்

ஆட்டத்தின் 7-வது நிமிடத்திலேயே அமெரிக்காவின் தீவிரமான தாக்குதலுக்கு பலன் கிடைத்தது. புலிசிக் ,வெஸ்டன் மெக்கின்னி ஆகியோரின் சிறந்த ஒருங்கிணைப்பு காரணமாக, பராகுவே அணியின் மிட்ஃபீல்டர் டேமியன் போபாடிலாவின் காலில் பட்டு 'ஓன் கோல்' (Own goal) ஆனது. இதனால் அமெரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது.

  31-வது நிமிடத்தில் ஃபோலாரின் பாலோகுன் மூலம் இரண்டாவது கோல் கிடைத்தது. லெஃப்ட்-பேக் ஆன்டோனி ராபின்சன் கொடுத்த பாஸை புலிசிக் பெற்று, அதனை பாலோகுனிடம் தள்ள, அவர் மிக நேர்த்தியாக கோல் வலையை நோக்கி உதைத்து கோலாக்கினார்.

முதலாவது பாதி முடிவடைவதற்கு சற்று முன்பாக, டில்மேன் கொடுத்த அருமையான த்ரூ பாஸைப் பெற்ற பாலோகுன், பரகுவே டிஃபெண்டரை ஏமாற்றி தனது   இடது காலால் பந்தை உதைத்து மீண்டும் ஒரு அற்புதமான கோலை அடித்தார். இதனால் முதல் பாதியில் அமெரிக்கா 3-0 என வலுவான முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் அமெரிக்க அணியின் கப்டன் புலிசிகிற்கு ஓய்வளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக செபாஸ்டியன் பெர்ஹால்டர் களம் இறக்கப்பட்டார். இதனால் அமெரிக்காவின் ஆட்டம் சற்று நிதானமடைந்தது. இதை சாதகமாக்கிக் கொண்ட பராகுவே அணி 73-வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்தது. கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில் உதைத்த லாங் கிக்கை அமெரிக்க வீரர் கிறிஸ் ரிச்சர்ட்ஸ் தடுக்கத் தவறியதால், பராகுவேயின் இளம் வீரர் ஜூலியோ என்சிசோ பந்தைப் பெற்று மொரிசியோவிடம் கொடுத்தார். அவர் அதனை எளிதாக அமெரிக்க கோல்கீப்பர் மேட் ஃப்ரீஸைக் கடந்து கோலாக மாற்றினார்.

ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் களம் புகுந்த ஜியோ ரெய்னாவுக்கு, கடந்த கால சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாகப் பயன்படுத்திய அவர், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் அலெக்ஸ் ஃப்ரீமேனின் அசிஸ்ட்டைப் பெற்று, ஒரு நேர்த்தியான ஷாட் மூலம் கோல் அடித்தார். இதன் மூலம் அமெரிக்க அணி 4-1 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தது.

உலகக்  கிண்ண வரலாற்றில் அமெரிக்க அணி ஒரே போட்டியில் பதிவு செய்த அதிகபட்ச கோல் எண்ணிக்கை இதுவாகும். இப்போட்டியில் அமெரிக்கா, பராகுவேயின் பெனால்டி பகுதிக்குள் 53 முறை பந்துடன் நுழைந்து ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் பரகுவே அணி ஒன்பது முறை மட்டுமே இந்த வாய்ப்பை பெற்றது.

FIFA உலகக்  கிண்ணத்தில்   அமெரிக்காவின் மிகப்பெரிய வெற்றிகள்

அமெரிக்கா 3 - 0 பெல்ஜியம் (1930)

அமெரிக்கா 3 - 0 பரகுவே (1930)

அமெரிக்கா 4 - 1 பரகுவே (2026)

அமெரிக்கா 2 - 0 மெக்சிகோ (2002)