உலகக்கிண்ண வரலாற்றில் பெரிய அணிகளை நிலைதடுமாறச்செய்யும் ஜப்பான் இம்முறை நெதர்லாந்தை அதிர்ச்சியடைய அவைத்துள்ளது. இரண்டு முறை முன்னிலை பெற்று வெற்றியின் விளிம்பில் இருந்த நெதர்லாந்தை 2-2 என்ற கோல் கணக்கில் ட்ரா செய்தது.
இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல்
அடிக்க எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை. ஆனால், இரண்டாவது பாதியில் ஆட்டம் முற்றிலும்
சூடுபிடித்தது. ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் நெதர்லாந்து கப்டன் விர்ஜில் வான் டைக்
தலையால் முட்டி ஒரு கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். சர்வதேச அரங்கில்
வான் டைக் அடிக்கும் முதல் முக்கிய கோல் இதுவாகும்
ஆனால்,
நெதர்லாந்தின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஆட்டத்தின் 57வது நிமிடத்தில்
ஜப்பானின் கெய்டோ நகமுரா பந்தை லாவகமாக கோலாக மாற்றி 1-1 என சமநிலையை ஏற்படுத்தினார். ஆக்ரோஷமாக ஆடிய நெதர்லாந்து அணி 64வது நிமிடத்தில்
தனது 2வது கோலை அடித்தது. கிறிசென்சியோ சம்மர்வில் மைதானத்திற்கு வெளியிலிருந்து இடது
காலால் உதைத்த பந்து மின்னல் வேகத்தில் கோல் போஸ்ட்டிற்குள் சென்றது. இதனால் நெதர்லாந்து
2-1 என முன்னிலை பெற்றது. இதனால் நெதர்லாந்து எளிதில் வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஜப்பானுக்கு கோனர்
வாய்ப்பு கிடைத்தது. கோகி ஒகாவா தலையால் முட்டிய பந்தை நெதர்லாந்து கோல்கீப்பர் தற்காக்க
முயன்ற போதும், அருகில் நின்ற டெய்ச்சி காமடா அதை கோலாக மாற்றி ட்ரா செய்தார்.

No comments:
Post a Comment