கொல்கத்தாவுக்கு
எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த
ஐபிஎல் போட்டியில் எழு விக்கெற்களால் சென்னை
வெற்றி பெற்றது. கொகத்தா,சென்னை ஆகிய இரண்டு அணிகளும் நான்கு வெற்றி ஒரு தோல்வியுடன்
இருந்தமையால் முதலிடத்துக்கான போட்டியாகவே இது கருதப்பட்டது. கடசி ஓவர்களில் அதிரடியாக
ஓட்டங்கள் குவித்து கொல்கத்டாவுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ரஸல் மீது ரசிகர்கள்
அதிக நம்பிக்கை வைத்தனர். டோனியின் வியூகமும் களத்தடுப்பும் சென்னையை வெற்றிப்பாதைக்கு
அழைத்துச்செல்லும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை
சென்னை ரசிகர்கள்கொண்டிருந்தனர்.
சென்னைக்கு
சவால் விட்டு கொல்கத்தா டுவிட்டரில் பதிவு செய்தது போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியது. ரஸலை எப்படி சமாளிக்கப்போகிரீர்கள் என சென்னையில் பயிற்சியாளரிடம் கேட்டபோது,
ரஸலைப்பற்றி நாம் கவலைப்படவில்லை அவர் பாட்டில்
அவர் விளையாடட்டும். மற்றைவர்களைத்தான் நாம்
கட்டுப்படுத்துவோம் என்றார். அதேபோல்தான் ரஸல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் மற்றைய
வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
நாணயச்
ழுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணித்தலைவர் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். முதலில்
துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவர்களில் ஒன்பது விக்கெற்களை இழந்து 108 ஓட்டங்கள்
எடுத்தது. சென்னை 17.2 ஓவர்களில் மூன்று விக்கெற்களை இழந்து 111 ஓட்டங்கள் அடித்து
வெற்றி பெற்றது.
கொல்கத்தாவின்
ஆரம்பத் துடுப்பாட்ட வீரகளான க்ரிஷ் லின், சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர். தீபக்
சஹாரின் ஐந்து பந்துகளில் ஓட்டம் எடுக்காத
லின் ஆறாவது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஹர்பஜனின் இரண்டாவது ஓவரில் ஆறு ஓட்டங்கள் எடுத்த நரேன், சஹாரிடம் பிடிகொடுத்து
ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரில் ஓட்டமெடுக்காத ரானா, சஹாரின் பந்தி ராயுடுவிடம் பிடிகொடுத்து
ஆட்டமிழந்தார். நான்காவது ஓவரில் உத்தப்பா
11 ஓடங்கள் எடுத்த நிலையில் சஹாரின் பந்தை
கேதார் ஜாதவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். பவர் பிளேயில் அதிக விக்கெற்களை எடுத்த இஅணியாக சென்னை
விளங்கிகுறது. கார்த்திக் 19 சுபர் மான்கில்
ஒன்பது ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 10. 1ஓவரில் ஆறு விக்கெற்களை இழந்து 47 ஓட்டங்கள் எடுத்தது. சவ்லா 8 ஓட்டங்களிலும் குல்தீப்
யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஓட்டம் எடுக்காமலும்
ஆட்டமிழந்தனர்.
ரஸல்
ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்கள் எடுத்தார். சஹார் மூன்று விக்கெற்களும், ஹர்பஜன் சிங்,
இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா இரண்டு விக்கெற்களும் ஜடேஜா ஒரு விக்கெற்றும் வீழ்த்தினர்.
சென்னையின்
வீரரான வட்சன் அதிரடியாக விளையாடி 17 ஓட்டங்களும்,
ரெய்னா 14, ஓட்டங்களும் ராயுடு 21 ஓட்டங்களும் எடுத்தனர். ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களம் இறங்கிய டுபிளிசி ஆட்டமிழக்காது 45 ஓட்டங்கள் எடுத்தார் கேதார் யாதவ்
ஆட்டமிழக்காமல் எட்டு ஓட்டங்கள் எடுத்தார்
17.2 ஓவர்களில் சென்னை 11 ஓட்டங்கள் எடுத்து ஏழு விக்கெற்களால் வெற்றி பெற்றது.
No comments:
Post a Comment