Thursday, April 25, 2019

ஹைதராபாத்தை விரட்டி வென்ற சென்னை


சென்னை சுப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகியவற்ருக்கிடையே சென்னைய்ல் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்  ஆறு விக்கெற் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி  பெற்ற சென்னை கப்டன் டோனி களத்தடுப்பைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய  ஹைதராபாத் 20 ஓவர்களில் மூன்று விக்கெற்களை இழந்து 175 ஓட்டங்கள் எடுத்தது. 19.5 ஓவர்களில்  நான்கு விக்கெற்களை இழந்த சென்னை 176 ஓட்டங்கள் எடுத்து  வெற்றி பெற்றது. இந்த சீசனில் 11 போட்டிகளில் ஒன்பது முறை நாணயச்சுழற்சியில் சென்னை  வெற்றிபெற்றது.

இந்த சீசனில் ஏமாற்றிய மனிஷ் பாண்டே, வட்சன்,ரெய்னா ஆகியோர் அதிரடியாக விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். சென்னை மைதானத்தின் வெற்றி முகத்தை சுப்பர் கிங்ஸ் மீண்டும் ஒரு முறை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் பிளேஓஃப் தகுதியை சென்னை உறுதி செய்தது. ஹைத்ராபாத் கப்டனின் பாட்டி இரந்ததால் அவர் நியூஸிலாந்துக்குச் சென்று விட்டார். புவனேஸ்குமார் கப்டனாகச் செயற்பட்டார். கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக ஷஹீப் அல் ஹசனும்,  நதீமுக்குப் பதிலாக மணிஷ் பாண்டேயும் விளையாடினார்கள்.
எதிரணி பந்து வீச்சாளர்களை அச்சுறுத்திய வானர், பிறிஸ்டோவ் ஜோடி கலம் இறங்கியது. ஹர்பஜன் வீசிய இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தை  எதிர்கொண்ட பிறிஸ்டோவ் டோனியிடம் பிடிகொடுத்து ஓட்டமெடுக்காமல் ஆட்டமிழந்தார்.  சென்னை ரசிகர்கள் குதூகலித்தனர். மணிஷ் பாண்டே களம் இறங்கினார். மணிஷ் பாண்டே விரைவில் ஆட்டமிழப்பார் என சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 13.3 ஆவது ஓவர்வரை விக்கெற் எதுவும் விழவில்லை. ஹைதராபாத் 200 ஓட்டங்களை எட்டிவிடும் போல் தோன்றியது. வானர், மணிஷ் பாண்டே ஜோடி சென்னையை சோதித்தனர். 39 பந்துகளில் வானர் அரைச்சதம் அடித்தார். தொடர்ச்சியாக ஐந்தாவது அரைச்சதம். இத்தொடரில் எட்டாவது முறை 50 ஓட்டங்களைத் தொட்டார்.

12 ஓவர்களில் 103 ஓட்டங்கள்.  வானரை முந்திக்கொண்டு மணிஷ் பாண்டே அரைச் சதம் அடித்தார். ஹைதராபாத் 120 ஓட்டங்கள் எடுத்தபோது டேவிட் வானர் ஆட்டமிழந்தார். ஹர்பஜனின் பந்தை டோனியிடம் பிடி கொடுத்து 57 ஓட்டங்கள் எடுத்த வானர் வெளியேற விஜய் சங்கர் உள்ளே வந்தார். சென்னை அணியில் சென்னை வீரர்கள் யாரும் இல்லை. சென்னைப்பையனான விஜய் சங்கர்  சென்னைக்கு எதிராகக் களம் இறங்கினார். 26 ஒட்டங்கள் எடுத்த விஜய் சங்கர் தீபக் சாஹரின் பந்தை ஜடேஜாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.  20 ஓவர்களில் ஹைதராபாத் முன்று விக்கெற்களை இழந்து 175 ஓட்டங்கள் எடுத்தது. 49 பந்துகளுக்கு முகம் கொடுத்த மணிஷ் பாண்டே   மூன்று சிக்ஸர் ஏழு பவுண்டரி அடங்கலாக ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்கள் எடுத்தார். யூசுப் பதான் ஐந்து ஓட்டங்கள் எடுத்தார்.

சென்னையின் களத்தடுப்பு மிக மோசம். மின்னல் வேகத்தில் ஒரு ஓட்டம் இரண்டு ஓட்டங்கள் என ஹைதராபாத் ஓட்டங்களைச் சேகரித்தது. ஆரம்பத்தில் தாராளமாக வாரி வழங்கிய சென்னையில்ன் பந்து வீச்சாளர்கள் கடைசி நேரத்தில் இறுக்கிப்பிடித்தனர். கடசி இரண்டு ஓவர்கலில் 15 ஓட்டங்கள் மட்டும் அடிக்கப்பட்டது.

176 என்ற இலக்குடன்  வட்சனும், டுப்ளிசிஸும் கலம் இறங்கினர். வட்சன் மீது நம்பிக்கை இழந்த சென்னையின் ரசிகர்கள் டுப்பிளிசிஸை எதிர்பார்த்தனர். முதல் ஓவரைச் சந்தித்த வட்சன் ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை. இரண்டாவது ஓவரின் முதல் நான்கு பந்துகளையும் டிபிளிசிஸ் தொடவில்லை. சென்னை ரசிகர்கள் டென்சனானார்கள். 2.5 ஆவது ஓவரில் ஒரு ஓட்டம் எடுத்த டுபிளிசிஸ் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்ததும் சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஐபிஎல் ஆரம்பப் போட்டிகளில் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த ரெய்னா, இப்போது  தடுமாறுகிறார். மூன்று ஓவர்களில் எட்டு ஓட்டங்கள். முதலில் ஆட்டமிழக்கப்போவது வட்சனா ரெய்னாவா என ரசிகர்கள் எதிர்பார்த்தபோது இருவரும் அதிரடியாக விளையாடி ஆச்சரியமளித்தனர்.  கலீல் அஹமது, புவனேஷ்வர் குமார்,சந்தீப் சர்மா,,ரஷீத் கான், சாகிப் என ஒருவரையும் விட்டு வைக்காமல் வட்சனும் ரெய்னாவும் விரட்டினார்கள். ரஷீத் கானின் ஓவர்களில் சிக்ஸர் பவுண்டரிகலைப் பறக்கவிட்டு வட்சன் வேடிக்கை காட்டினார்.   முறைத்துக்கொண்ட ராஷீத் கான்,மைதானத்தில் வட்சனின் தோள் பட்டையில் இடித்தார். சிரித்துக்கொண்டே வட்சன் சென்றார். இந்தத் தொடரில் வட்ச்னை வெளியேற்ற முடியாத ரஷ்ஹித் கான் வெறுப்படைந்தார்.

வட்சன், ரெய்னா ஜோடி 45 பந்துகளில் 77 ஓட்டங்கள் எடுத்தது.  38 ஓட்டங்களில் ரெய்னா ஆட்டமிழந்தார். வட்சனுடன் இணைந்த ராயுடுவும் தன் பங்குக்கு அடித்தாடினார்.  53 பந்துகளை எதிர்கொண்ட வட்சன்  ஒன்பது பவுண்டரிகள் ஆறு சிக்ஸர்கள் அடங்கலாக  96 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.  வட்சன்   ஆட்டமிழக்கும் போது சென்னை 160 ஓட்டங்கள் எடுத்தது. 17 பந்துகளில் 16 ஓட்டங்கள் அடித்தால் வெற்ரி பெறலாம் என்ற நிலையில் ராயுடுவுடன் கேதார் ஜாதவ் இணைந்தார். இவர்கள் இருவரும் சென்னை ர்சிகர்களின் பொறுமையைச் சோதித்தனர்.
 19.4  ஆவது ஓவரின் சென்னை 175 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை அவசரப்பட்டு தூக்கி அடித்த ராயுடு 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பிராவோ உள்ளே வந்தார். கேதார் ஜாதவ், ஒரு ஓட்டம் அடித்து சென்னைக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். ஆட்ட நாயகன் விருதை வட்சன்  பெற்றார்.

No comments: