டெல்லி
கேப்பிடல்,கொல்கத்தா நைற் ரைடேர்ஸ் ஆகியவற்றுக்கிடையேடெல்லியில் நடைபெற்ற போட்டியில்
சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி பெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணித்தலைவர்
கார்த்திக் பந்து வீச முடிவு செய்தார். காயம் காரணமாக நரேன் கொல்கத்தா அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.
அவருக்குப் பதிலாக நாயக் அணியில் சேர்க்கப்பட்டார்.
முதலில்
துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவர்களில் எட்டு விக்கெற்களை இழந்து 185 ஓட்டங்கள்
எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய டெல்லி 20 ஓவர்களில் ஆறு விக்கெற்களை இழந்து
185 ஓட்டங்கள் எடுத்தது. சூப்பர் ஓவரில் ரபாடாவின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் டெல்லி
நான்கு ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
கொல்கத்தா
வீரர்களான நாயக் 7, உத்தப்பா20, லின்11 ,
நிதிஷ் ரானா1 , கில் 4 ஓட்டங்களில் ஆட்டமிழக்க
9.1 ஓவரில் ஆறு விக்கெற்களை இழந்து 61 ஓட்டங்கலை டெல்லி எடுத்தது. ஆறாவது விக்கெற்றில்
இணைந்த கார்த்திக், ரஸல் ஜோடி 95 ஓட்டங்கள் அடித்து அணியை மீட்டது. 28 பந்துகலில் 62 ஓட்டங்கள் எடுத்த ரஸல் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து 36 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்த கார்த்திக் ஆட்டமிழந்தார். 20
ஓவர்களில் எட்டு விக்கெற்களை இழந்து 185 ஓட்டங்கள் எடுத்தது கொல்கத்தா.
186
என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய டெல்லி அணி வீரர்களான தவான், 16 ஓட்டங்களிலும் ரிஷாப்
பண்ட் 11 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். மூன்றாவது விக்கெற்றில் பிரித்விஷாவுடன் இணைந்த அணித்தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். இவர்கள் இருவரும்
இணைந்து 99 ஓட்டங்கள் அடித்தனர். வெற்றியை
நோக்கி டேல்லியை அழைத்துச்சென்ற பிரித்விஷா ஃபேர்குசனின் பந்தை கார்த்திக்கிடம் பிடிகொடுத்து
ஆட்டமிழந்தார்.18.3 ஓவர்களில் 55 பந்துகளில்
99 ஓட்டங்கள் எடுத்த பிருத்விஷா ஆட்டமிழக்கும்போது டெல்லி அணி 174 ஓட்டங்கள் எடுத்தது.
கடைசி
ஓவரில் ஆறு ஓட்டங்கள் எடுத்தால் கொல்கத்தா வெற்ரி பெற்று விடும். 20 ஆவது ஓவரை குல்தீப் வீசினார். முதல் பந்தில் வஹாரி ஒரு ஓட்டமும், இரண்டாவது பந்தில்
இங்ராம் இரண்டு ஈட்டங்களும் எடுத்தனர். மூன்றாவது பந்தில் ஓட்டம் இல்லை. நான்காவது
பந்தில் இங்ராம் ஒரு ஓட்டம் எடுத்தார். ஐந்தாவது பந்தை தூக்கி அடித்த வஹாரி, சாவ்லாவிடம்
பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசிப் பந்தில்
ஒரு ஓட்டம் எடுக்க வேண்டும். இங்ராம் அடித்துவிட்டு ஒரு இலகுவாக எடுத்துவிட்டு இரண்டாவது
ஓட்டத்துக்கு ஓடும் போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
சூப்பர்
ஓவரில் டெல்லி அணி சார்பில் ஸ்ரேயாஸ் அய்யரும்
ரிஷப் பண்டும் களம் இறங்கினர்.பிரசித் கிருஷ்ஆ வந்து வீசினார். முதல் பந்தில் ரிஷப்
பண்ட் ஒரு ஓட்டமும் இரண்டாவது பந்தில் ச்ய்யர்
பவுண்டரியும் அடித்தனர்.மூன்றாவது பந்தை தூக்கி அடித்த அய்யர், சாவ்லாவிடம் பிடிகொடுத்து
ஆட்டமிழந்தார். சூப்பர் ஓவரில் டெல்லி 10 ஓட்டங்கள் சேர்த்தது.
கொல்கத்தாவின்
சார்பில் ரஸல், கார்த்திக் ஆகியோர் களம் இறங்கினர்.
முதல் பந்தில் பவுண்டரி அடித்த ரஸல் இரண்டாவது பந்தில் ஓட்டம் எடுக்கவில்லை. மூன்றாவது
பந்தில் விக்கெற்றை இழந்து வெளியேறினார். அடுத்து வந்த உத்தப்பா ஒரு ஓட்டம் எடுத்தார். கடைசி இரண்டு பந்துகளிலும் கார்த்திக்கால் ஓட்டம்
எதுவும் எடுக்க முடியவில்லை. சூப்பர் ஹீரோ
ரபாடா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
No comments:
Post a Comment