Tuesday, April 2, 2019

பஞ்சாப்பிடம் வீழ்ந்த மும்பை


கிங்ஸ் லெவன் பஞ்சாப்,மும்பை இந்தியன் ஆகியவற்றுக்கிடையே மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் எட்டு விக்கெற்களினால் பஞ்சாப் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்ற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை ஏழு விக்கெற்களை இழந்து 176 ஓட்டங்கள் எடுத்தது. 18.4 ஓவர்களில் இரண்டு விக்கெற்களை இழந்து 177 ஓட்டங்கள் எடுத்தது.

ரோஹித், டிகொக் ஜோடி போட்டியை ஆரம்பித்தது. 32 ஓட்டங்களில் ரோஹித் வெளியேற களம் புகுந்த சூரியகுமார் யாதவ் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய டிகொக் மொஹமட் ஷமியின் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 39 பந்துகளுக்கு முகம் கொடுத்த டிகொக் ஆறு பவுண்டரி இரண்டு சிக்ஸர்கள் அடங்கலாக 60 ஓட்டங்கள் எடுத்தார். யுவராஜ் 18 ஓட்டங்களிலு, பொலட் 7 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 19 பந்துகளை மட்டும் எதிர்கொண்ட ஹர்த்திக் பண்டையா  31 ஓட்டங்கள் எடுத்தார்.20 ஓவர்களில்  ஏழு விக்கெற்களை இழந்த பஞ்சாப் 176 ஓட்டங்கள் எடுத்தது.

ராகுல், கைல்ஸ் ஆகியோர் பஞ்சாப்பின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் புகுந்தனர். கைல்ஸின் அதிரடியில் பஞ்சாப்பின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. 7.2 ஓவர்களில் பஞ்சாப் 53 ஓட்டங்கள் எடுத்தபோது 24 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்த கைல் ஆட்டமிழந்தார். கல்ஸ் வெளியேற உள்ளே வந்த மயங் அகர்வால்தன் பங்குக்கு பஞ்சாப்பின் பந்து வீச்சாளர்களை சோதித்தார். 21 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்த பயங் அகர்வாலை குருனால் பண்டையா வெளியேற்றியதால் மும்பை ஆறுதலடைந்தது.

18.4 ஓவர்களில் 177 ஓட்டங்கள் எடுத்து பஞ்சாப் வெற்றி பெற்றது. 57 பந்துகளில் ராகுல் 70 ஓட்டங்களும் 10 பந்துகளில் டேவிட் மில்லர் 15 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காது இருந்தனர்.

No comments: