Sunday, April 7, 2019

ரொம்ப தெளிவா இருக்காங்க


இந்திய நாடாளுமன்றத் தேர்தல், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான பரப்புரை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. யாருக்காகப் பிரசாரம் செய்கிறோம். யாருக்காக வாக்குக் கேட்கிறோம் எனத்தெரியாமல் பல தலைவர்கள் தடுமாறுகிறார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணித் தலைவர்களின் நாக்கில் சனி வாசம் செய்கிறான்.

விஜயகாந்தின் மனைவி பிரேமலதா: புஸ்வாமா தாக்குதலை நடத்தி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தவர் பிரதமர் மோடி.
[பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்கம் புஸ்வாமா தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது. அதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.]
ராமதாஸ்:  அதிமுகவுக்கும் திமுகவுக்கும் வாக்களிக்காதீர்கள். {சுதாகரித்துக்கொண்டு] திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள்.

[ராமதாஸ் அதிமுக கூட்டணியில் இருக்கிறார். உலகுள்ளவரை கடலுள்ள வரை அதிமுகவுடனும் திமுகவுடனும் கூட்டணி சேரமாட்டேன் என சபதம் செய்தவர்.]

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்: பாமகவின் ஆபிள் சின்னத்துக்கு வாக்களித்து  [மக்கள் முறுக்கிட்டு மாம்பழம் என சத்தம் போட்டனர். தலையில் அடித்துக்கொண்டு } மாம்பழ சின்னத்துக்கு வாக்களியுங்கள்.
முதலமைச்சர் எடப்பாடி தேனியில் பிரசாரம் செய்யும் போது ரவிச்சந்திரகுமாருக்கு வாக்களியுங்கள் என்றார்.தானி வேட்பாளரின் பெயர் ரவீந்திரநாத் குமார்.ராஜ்நாத்குமார் என அமைச்சர் ஜெயக்குமார் சொன்னார்.
பாரதப்பிரதமர் அப்துல் கலாம் என அமைச்சர் சரோஜா பிரசாரம் செய்தார்.


No comments: