சன்
ரைசர்ஸ் ஹைதராபாத் டெல்லி கெப்பிற்றல் ஆகியவற்றுக்கிடையேடெல்லியில்
நடைபெற்ற 16 ஆவது ஐபிஎல் போட்டியில் ஐந்து விக்கெற்களினால் ஹைதராபாத் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஹைதரபாத் அணித் தலைவர் களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி எட்டு விக்கெற்களை
இழந்து129 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத்
துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் ஐந்து விக்கெற்களை
இழந்து 131 ஓட்டங்கள் எடுத்து ஐந்து விக்கெற்களால் வெற்றி பெற்றது.
ஆரம்பத்
துடுப்பாட்ட வீரர்களான பிருத்விஷா 11 ஓட்டங்களுடனும் தவான் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
கடந்த போட்டிகளில் கைகொடுத்த ரிஷாப் பண்ட்,
ராகுல் திவேரியா, இங்க்ராம் ஆகியோர் ஐந்து
ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 13.3 ஓவர்களில் ஐந்து விக்கெற்களை இழந்த டெல்லி 75 ஓட்டங்கள்
எடுத்தது. ஸ்ரேயாஸ் அய்யர் அதிகபட்சமாக 43 ஓட்டங்கள் எடுத்தார். கிறிஸ் மொரிஸ் 17 ஓட்டங்களும், அக்ஷர் படேல் அதிக பட்சமாக 13 பந்துகளில் 23 ஓட்டங்கள்
அடித்தனர்.
புவனேஷ்வர்
குமார்,மொஹமட் நபி,சித்திக் கெளவுல் ஆகியோர் தலா இரண்டு விக்கெற்களை வீழ்த்தினர். முதல்
மூன்று போட்டிகளில் விக்கெற் வீழ்த்தாத இந்திய நட்சத்திர பந்து வீச்சாளரான புவனேச்வர்
குமார் இந்த ஐபிஎல் சீசனில் தனது முதலாவது விக்கெற்றை வீழ்த்தினார்.
ஹைதராபாத்
அணிவீரர்களான வானர், பேஸ்ரோவ் ஜோடி சிறந்த ஆரம்பத்தைக் கொடுட்தது. 6.5 ஓவர்களில் 64
ஓட்டங்கள் எடுத்தபோது அதிரடியாக விளையாடிய பேஸ்ரோவ் 28பந்துகளில் 48 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வானர் 10 ,விஜய் சங்கர் 16 மனிஷ் பாண்டே 10, தீபக்கோடா
10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். யூசுப் பதான்
மொஹமட் நபி ஜோடி ஹைதராபாத்துக்கு வெற்றியைத் தேடிகொடுத்தது. 20 ஓவர்களில் ஐந்து விக்கெற்களை
இழந்த ஹைதராபாத் 131 ஓட்டங்கள் எடுத்து ஐந்து
விக்கெற்களால் வெற்றி பெற்றது.
No comments:
Post a Comment