Wednesday, April 3, 2019

முதல் வெற்றியைப் பதிவு செய்த ராஜஸ்தான் ரோயல்ஸ்


ராஜஸ்தான் ரோயல்ஸ்,ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகியவற்றுக்கிடையே ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் ஏழு விக்கெற்களினால் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பெங்களூர், ராஜஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் இதுவரை விளையாடிய  மூன்று போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்தன. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரண்டு அணிகளும் மோதின.

பெங்களூர் அணியில்  ஷிவம் துபே, ராய் பர்மான், கிரான்ட்ஹோம் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அக்ஷ்தீப் நாத், நவ்தீப் சைனி, மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மார்கஸ் ஸ்டோனிஸ் பாகிஸ்தான் தொடரை முடித்துகொண்டு பெங்களூர் அணியுடன் இணைந்த பிறகு இந்த சீசனில் ஆடும் முதல் ஆட்டம் இதுவாகும்.

ராஜஸ்தான் அணியில் காயமடைந்த சஞ்சு சாம்சன்,  ஜெய்தேவ் உனட்கட் ஆகியோருக்கு பதிலாக ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன்  ஆகியோர் இடம் பிடித்தனர். தொடர்ந்து 4-வது முறையாக நாணயச்சுழற்சியில்  ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ரஹானே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் விராட் கோலி - பார்தீவ் பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி. 16 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தனர்.

 மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக பார்தீவ் பட்டேல் - மொயீன் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி 27 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது.   சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான 231 ஓட்டங்கலை விரட்ட பார்தீவ் பட்டேல் - ஹெட்மையர் ஜோடியை களம் இறக்கியது. இந்த ஜோ 13 ஓட்டங்கள்கள் மட்டுமே எடுத்தது.

ராஜஸ்தான் அணிக்கெதிராக பார்தீவ் பட்டேலும், விராட் கோலியும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர்.  ராஜஸ்தானின் ஓட்ட எண்ணிக்கை 49 ஆக இருக்கும்போது கோலி 23 ஓட்டங்கள் எடுத்த கோலி ஆட்டமிழந்தார். கோலியின் பரீட்சார்த்த முயற்சி ஆரம்பத்திலேயே அடிவாங்கியது. ஐபிஎல்லிலும் சர்வதேசப் போட்டிகளிலும் லெக் ஸ்பின்னரிடம் விக்கெற்றை இழப்பது கோலிக்கு வாடிக்கையாகிறது.

டிவில்லியஸ் 13 ஓட்டங்களிலும் ஹெட்மெயர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். ஸ்டொனிஸ், மொயின் அலி ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே  31, 18  ஓட்டங்கள் எடுத்தனர். 20 ஓவர்களில் நான்கு விக்கெற்களை இழந்த பெங்களூர்  158 ஓட்டங்கள் எடுத்தது. கோலி,டிவில்லியஸ், ஹெட்மெயர் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்த ஸ்ரேயாஸ் கோபால்  நான்கு ஓவர்களில் 12 ஓட்டங்களைக் கொடுத்தார்.

ரஹானே,ஜோஸ் பட்லர் ஜோடி 159 என்ற வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கியது. 22 ஓட்டங்கலில் ரஹானே ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர் 59 ஓட்டங்களிலும்  ஸ்மித் 38 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். திரிபாதி ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்ளும், மென் ஸ்ரொக் ஆட்டமிழக்காமல் ஒரு ஓட்டமும் எடுத்தனர். 19.5 ஓவர்களில் 164 ஓட்டங்கள் எடுத்து ந்ந்ழு விக்கெற்களால் வெற்றி பெற்றது.

No comments: