மகளிர் உலக கிண்ண 9 வது சீசனை அவுஸ்திரேலியாவ் உம் நியூஸிலாந்தும் இணைந்து நடத்துகின்றன. ஜூலை 20 ஆம் திகதி தொடங்கிய போட்டி ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வரை நடைறும் . 1988 முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஆண்கள் உலகக் கிண்ணப் போட்டிகளில் என்ன விதிமுறைகள் பின்பற்ற்றப்பட்டடதொ
அதே விதிமுறைகளை பின்பற்றியே மகளிர்
உலகக் கிண்ணப் போட்டியும் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடந்த உலகக்கிண்ணப் போட்டிகளில் 24 நாடுகள் பங்குபற்ரின ஆனால், இம்முரை முதன் முதலாக 32 நாடுகள் 64 போட்டிகளில் விளையாடுகின்றன. அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஜப்பான், தென் கொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், சுவீடன், ஸ்பெயின், பிரான்ஸ், டென்மார்க், அமெரிக்கா , கனடா, கோஸ்டா ரிக்கா, ஜமேக்கா, சாம்பியா, மொரோக்கோ, நைஜீரியா, தென் ஆப்ரிக்கா, கொலம்பியா, பிறேஸில், ஆர்ஜென்ரீனா, நோர்வே, ஜேர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, ஹைட்டி, போர்ச்சுகல், பனாமா ஆகிய நாடுகள் உகலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றன.
பரிசுத் தொகை
சம்பியனாகும் அணிக்கு 4,290,000 டொலரும், ஒரு வீரருக்கு 270,000 டொலர்
என்று மொத்தம் 10,500,000 டொலர் பரிசாக வழங்கப்படும்.
ரன்னேஸ் அணிக்கு
3,015,000 டொலரும், ஒரு வீரருக்கு 195,000 டொலர் என்று மொத்தம் 7,500,000 டொலர்
பரிசாக வழங்கப்படும்.
மூன்றாவது பரிசை வெல்லும் அணிக்கு 2,610,000 டொலரும், ஒரு வீரருக்கு
180,000 டொலர் என்று மொத்தம் 6,750,000 டொலர் பரிசாக வழங்கப்படும்.
நான்காவது பரிசை வெல்லும் அணிக்கு
2,455,000 டொலரும், ஒரு வீரருக்கு 165,000 டொலர் என்று மொத்தம் 6,250,000 டொலர் பரிசாக வழங்கப்படும்.
5 ஆம் இடத்தை பிடிக்கும் அணிகலூக்கு 2,180,000 டொலரும், ஒரு வீரருக்கு 90,000 டொலர்
என்று மொத்தம் 17,000,000 டொலர் பரிசாக வழங்கப்படும்.
9௧6 ஆம் இடத்தை பிடிக்கும் அணுகளுக்கு 1,870,000 டொலரும், ஒரு வீரருக்கு 60,000 டொலர்
என்று மொத்தம் 26,000,000 டொலர் பரிசாக வழங்கப்படும்.
17௩2 ஆம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு 1,560,000 டொலரும், ஒரு வீரருக்கு 30,000 டொலர் என்று மொத்தம் 36,000,000 டொலர் பரிசாக வழங்கப்படும் .
32 நாடுகளுக்கான மொத்த பரிசுத் தொகை $110 மில்லியன் ஆகும், இது முந்தைய பதிப்பை விட மூன்று மடங்கு அதிகம். கத்தாரில் நடைபெற்ற ஆண்கள் போட்டியில் மொத்த பர்ஸ் $440 மில்லியன் ஆகும். FஈFஆ கோப்பையை வெல்லும் அணிக்கு $10.5 மில்லியன் வழங்கப்படும். அதில் $6.21 மில்லியன் வீரர்களுக்கும், $4.29 மில்லியன் கூட்டமைப்புக்கும் வழங்கப்படும். அவுஸ்திரேலியா , நியூசிலாந்து முழுவதும் உள்ள, ஒன்பது வெவ்வேறு நகரங்களில் அமைந்துள்ள 10 மைதானங்கள் போட்டிகளுக்கான இடங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நகரங்களில், சிட்னியில் மட்டும் இரண்டு இடங்களில் போட்டிகள் நடத்தப் படுகிறது. சிட்னி கால்பந்து ஸ்டேடியம் ,ஸ்டேடியம் அவுஸ்திரேலியா என்ற இரண்டு மைதானங்கள் அங்கு உள்ளன.
No comments:
Post a Comment