வடமராட்சி செவிப்புலனற்றோர் சங்கத்தின் 10 ஆவது விளையாட்டு விழா கடந்த வாரம் வதிரி டைமன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.வடமராட்சி, முல்லைத்தீவு,வவுனியா,திருகோணமலை,மட்டக்களப்பு ஆகிய வற்றின் செவிப்புலனற்ற சுமார் 75 வீர, வீராங்கனைகள் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றினர்.
உதைபந்தாட்டம், கிறிக்கெற்,வலைப்பந்தாட்டம் ஆகிய
போட்டிகள் மூன்று நாட்களாக நடைபெற்றன. வெற்றியடைந்தவர்கள் தமது இரண்டு கைகளையும் உயர்த்தி
மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.எதிரணியை
அவமானப்படுத்தும் ஆக்ரோஷம் எவையும் எவையும்
அங்கு இருக்கவில்லை. மிக அமைதியாகவும் நேர்த்தியாகவும்
அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.
பரிசளிப்புவிழா
மிகவும் நேர்த்தியாக நடத்தப்பட்டது. பரிசுக்குரியவரின் பெயர் அறிவிக்கப்பட்டதும், தாமதமின்ரி மேடைக்குச் சென்று பரிசைப் பெற்றுக்கொண்டனர்.
பரிசளிப்பு விழா சர்வதேச தரத்துக்கு அமைவாக நடத்தப்பட்டது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் அதிக கோல் அடித்தவர், சிறந்த கோல் கீப்பர், அதிக ஓட்டங்கள் அடித்தவர், அதிக சிக்ஸர்கள் அடித்தவர்,
அதிக பவுண்டரிகள் அடித்தவர் என உதைபந்தாட்ட, கிரிக்கெற் போட்டிகளின் விருதுகள் வழங்கப்பட்டன.
உதைபந்தாட்டத்தில் வடமராட்சியை எதிர்த்து விளையாடிய மட்டக்களப்பு சம்பியனானது. வடமராட்சிய எதிர்த்து விளையாடிய வவுனியா கிறிக்கெற்றில் சம்பியனாகியது. வலைப்பந்தாட்ட சம்பியனானது வடமராட்சி மகளிர் அணி.
செவிப்புலனற்றவர்களின் பேச்சையும்,
பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர்களின் உரைகளையும் மொழிபெயர்ப்பதற்கு
செவிப்புலனற்றவர்களின் சைகை தெரிந்த மூவர் வந்திருந்தனர்.
இங்கிலாந்து, ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளில் வசிக்கும்
செவிப்புலனற்றவர்கள் இந்த விளையாட்டுப் போட்டிக்கான அனுசரணையை வழங்கினர். சுவிட்ஸர்லாந்தில்
வசிக்கும் முல்லைத்தீவைச் செர்ந்தசெவிப்புலனற்ற ஒருவர் விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மூன்று நாட்களும் உடனுக்குடன் குப்பைகளையும், கழிவுகளையும் அப்புறப்படுத்தினார்கள்.
No comments:
Post a Comment