புயல், மழை, வெள்ளம், பூகம்பம், காட்டித்தீ போன்ரவற்றாஇல்
நடைபெரும் அழிவுகளும், உயிரிழப்புகளும் அண்மையில்
முக்கிய செய்தியாக இடம் பிடிக்கின்றன.மொராக்கோவைத்
தாக்கிய புகம்ப அழிவுகள் பற்றிய இழப்புகள்
முழுமையாக வெளிவரமுன்பு லிபியாவில்
வெள்ளம் ஏற்படுத்திய சேதம் கவனத்தை ஈர்ந்தது.
பாலைவன நாடான
லிபியாவை வெள்ளம் புரட்டிப் போட்ட செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. லிபியாவின்
கிழக்கு நகரமான டெர்னாவில் மிகப்பெரிய அளவிலான இறப்பு ,அழிவுக்கு ஏற்பட்டுள்ளது. நகரின்கால்வாசிப்பகுதி வெள்ளத்தால் உருக்குலைந்தது. வாடி டெர்னா நதியே வெள்ளப் பெருக்குக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
மலைகளில் இருந்து நகரத்தின் வழியாக கடலுக்குள் ஓடும் வாடி டெர்னா நதி, மழை பெய்யும்
போது வெள்ளம் வந்தாலும், ஆண்டின் பெரும்பாலும் வறண்டு
இருக்கும். அருகிலுள்ள நகரமான பைடாவில் இல்
சுமார் 414மி.மீ மழை பெய்தது இது மிகப் பெரிய மழை என பதியப்பட்டுள்ளது.
இரண்டு
நதி பள்ளத்தாக்குகள் சங்கமிக்கும் நகரத்திலிருந்து சுமார் 12 கிமீ தொலைவில் முதல் அனை உள்ளது. அது முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக செய்மதிக்
காட்சிகள் வெளிப்படுத்தின. காட்சிகள் காட்டுகின்றன. முதல் அணையை உடைத்த பிறகு, வெள்ளம் நகரின் தெற்கு
விளிம்பில் அமர்ந்திருக்கும் இரண்டாவது பள்ளத்தாக்கு வழியாக கீழ்நோக்கித் தொடர்ந்தது.
இரண்டாவது அணையின் கீழ்புறத்தில், நகரின் மையப்பகுதி வழியாக ஒரு பரந்த நீரோடை, இருபுறமும்
உள்ள கட்டிடங்களை உடைத்தது.
ஆற்றில் இருந்து வெகு தொலைவில் இருந்த பல மாடி அடுக்குமாடி குடியிருப்புகள் அவற்றின் முகப்புகள் அழிக்கப்பட்டன,கொங்கிரீட் தளங்கள் இடிந்து விழுந்தன, டெர்னாவில் மட்டும் 2,000 பேர் இறந்திருக்கலாம் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. புயலுக்குப் பிறகு லிபியா சர்வதேச உதவியைக் கோருகிறது.
2011 ஆம் ஆண்டு
ல் எதேச்சதிகாரத்
தலைவர் முயம்மர் கடாபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட
பின்னர், பல வருடகால யுத்தம்
மற்றும் மத்திய அரசாங்கம் இல்லாததால் லிபியா சிதைந்து கிடக்கிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில், லிபியாவின் உமர் அல் முக்தார் பல்கலைக்கழகத்தின் நீர்வியலாளர் அப்தெல்வானீஸ் ஏஆர் ஆஷூர், 1942 முதல் ஐந்து வெள்ளங்களை மேற்கோள் காட்டி, பருவகால ஆற்றுப்படுகை அல்லது வாடி மீண்டும் மீண்டும் வெள்ளப்பெருக்கு டெர்னாவுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக எச்சரித்தார்.
அணைகளை
முறையாக பராமரிப்பதை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். : "ஒரு
பெரிய வெள்ளம் ஏற்பட்டால் அதன் விளைவு வாடி மற்றும் நகர மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும்"என்று அவரது கட்டுரை கூறியது
இந்த
வெள்ளம் லிபியாவின் நவீன வரலாற்றில் மிகவும் ஆபத்தான சுற்றுச்சூழல் பேரழிவாகும், இழப்புகளைச் சந்தித்த பைடா நகரம் உட்பட மற்ற பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்து, பெங்காசி மற்றும் கிழக்கு லிபியாவின் பிற இடங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் பிற அரசாங்க கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளன.
லிபியாவில் 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.குறைந்தது 10,000 பேர் காணாமல் போயுள்ளனர், இது ஒரு பெரிய மத்திய தரைக்கடல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் லிபியாவில் அணைகளை உடைத்து, கட்டிடங்களை அடித்துச் சென்றது.சுமார் 125,000 மக்கள் வசிக்கும் நகரமான டெர்னாவில், கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.கார்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நகரின் இரண்டு மாவட்டங்களில் ஒன்றில் 1,700 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய மாவட்டத்தில் 500 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வாடா மருத்துவமனையின் இயக்குநர் முகமட் அல்-காபிசி தெரிவித்தார். போதிய இட வசதி இல்ல்லாமையினா. மருத்துவ மனையின் தாழ்வாரங்களில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.
லிபியாவின்
இரண்டாவது பெரிய நகரமான பெங்காசி உட்பட மற்ற கிழக்கு நகரங்களும் புயலால் பாதிக்கப்பட்டன.
சர்வதேச செஞ்சிலுவை சங்கம், செஞ்சிலுவை சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் டேமர்
ரமலான் தன் குழுவுடன் ப்[அனியாற்றுகிறார்.
இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும்,
காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 10,000 த்தைத் தாண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
லிபியாவை
தாக்கிய வெள்ளத்தில் 5,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.டானியல்
புயல் நாட்டைத் தாக்கியதால் அணைகள் உடைந்ததால் கிழக்கு நகரமான டெர்னாவின் கால் பகுதி
வெள்ளநீரால் அழிக்கப்பட்டது, இதுவரை 1,500க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
பேரிடர் மண்டலமாக டெர்னா அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ
முயன்றபோது அதன் லிபியா பிரிவைச் சேர்ந்த மூன்று தன்னார்வத் தொண்டர்கள் செவ்வாயன்று
இறந்ததாக செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தலைமைச் செயலாளருமான ஜெகன் சபாகைன்
,கூறினார்
லிபியா அரசியல் ரீதியாக கிழக்கு மற்றும் மேற்கு என பிளவுபட்டுள்ளது மற்றும் 2011 நேட்டோ ஆதரவு எழுச்சிக்கு பின்னர் பொது சேவைகள் வீழ்ச்சியடைந்துள்ளன, இது பல ஆண்டுகளாக பிரிவு மோதல்களைத் தூண்டியது.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட திரிப்போலி அரசாங்கம் கிழக்குப் பகுதிகளைக் கட்டுப்படுத்தவில்லை, ஆனால் டெர்னாவுக்கு உதவிகளை அனுப்பியுள்ளது. செவ்வாயன்று மேற்கு நகரமான மிஸ்ரட்டாவிலிருந்து ஒரு நிவாரண விமானம் புறப்பட்டது.
No comments:
Post a Comment