இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களை வெளிக்கொண்டுவர சர்வதேச விசாரணை தேவை என விடுக்கப்பட்ட கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் கடுமையாக மறுத்தது. உள்ளகப் பொறிமுறையில் விசாரணை செய்யப்போவதாக அறிவித்த இலங்கை இன்றுவரை ஒரு அடி கூட முன்னுக்கு நகரவில்லை.
ஈஸ்டர் தின தொடர் தாக்குதல்கள்
தொடர்பாக சனல்4 வெளிஒயிட்ட காணொளி இலங்கை அரசியலில் அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது.
சனல் 4 வெளியிட்ட ஆவணப் படம் பொய் என அன்றைய
ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். அதேவேளை சர்வதேச விசாரணைதேவை என்ற குலலும்
ஓங்கி ஒலிக்கிறது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்
தொடர்பான சதித்திட்டம் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்,
தங்கள் கடமையை புறக்கணித்த உயர் போலீஸ் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும்
இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் கர்தினால் மல்கம் ரஞ்சித், ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏப்ரல் 21, 2019 அன்று ஈஸ்டர்
ஞாயிறு தாக்குதல், தற்போதைய உளவுத்துறை தலைவர் சுரேஷ் சல்லே சம்பந்தப்பட்ட சதி என்று
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சேனல் 4 ஆவணப்படம் விசில் புளோயர்களின் குற்றச்சாட்டுகளுடன்
வெளிப்படுத்தியதை அடுத்து கார்டினலின் புதிய கோரிக்கைகள் வந்துள்ளன.
2019 தேர்தலில் ராஜபக்சேவை
ஆதரித்த கார்டினல் மால்கம் ரஞ்சித், தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு
நீதியையும் கோரி வருகிறார். ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகளின் போது மூன்று சொகுசு ஹோட்டல்கள்
மற்றும் மூன்று தேவாலயங்களை குறிவைத்து இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலைக்
குண்டுத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உட்பட குறைந்தது 269 பேர் கொல்லப்பட்டனர்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு 310 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய உளவுத்துறை தலைவர் நிலந்த ஜயவர்தன உள்ளிட்ட 4 அதிகாரிகளுக்கு இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தினால் அபராதம்
விதிக்கப்பட்ட ஜயவர்தன மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் தொழில்முறை அலட்சியம்
காரணமாக பெயரிடப்பட்ட மற்றொரு சிரேஷ்ட அதிகாரி தேசபந்து தென்னகோன் ஆகியோரை புதிய விசாரணை
முடியும் வரை சேவையில் இருந்து இடைநிறுத்துமாறு கர்தினால் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
தாக்குதல்கள் தொடர்பான பல
விசாரணைகளின்படி, ஒருங்கிணைந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு 17 நாட்களுக்கு
முன்னர், அண்டை நாடான இந்தியாவில் உள்ள புலனாய்வு அமைப்பு விடுத்த எச்சரிக்கைகளுக்கு
இலங்கை அதிகாரிகள் செயல்படத் தவறிவிட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்லார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர்
செயித் அல் ஹுசைன் இலங்கையின் மனித
உரிமை நிலைமைகள் குறித்து வ்ர்ளியிட்ட அரிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன்
சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத
தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதி, சிறைச்சாலை
விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி
விஜயதாச ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். அதேவேளை
ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக சனல் 4 அம்பலப்படுத்தியமை தொடர்பில் அவர் சந்தேகம்
வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக அப்போதைய காதினால் உட்பட பெரும்பான்மையானவர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வந்தனர் என்றும், தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியிலுள்ள சூத்திரதாரிகளை வெளிநாட்டு விசாரணை மூலம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் உண்மையைக் கண்டறிய இந்நாட்டு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காமைக்கு வருந்துவதாகவும், இதற்குக் காரணமான சூத்திரதாரிகளை கண்டறிவதை இந்நாட்டில் செய்ய முடியாது என்றும், இது குறித்து சர்வதேச விசாரணை தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
காதினால் அவர்கள் அந்நேரத்தில் தனக்கு எதிராக வாக்களிக்கச் சொன்னதற்கு தாம் வருத்தப்படவில்லை என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் ஏற்பட்ட வலிதான் அதற்கு காரணம் என்றும், அதே வலி இன்றும் கத்தோலிக்க சமூகத்தில் இருப்பதாக தெரிவித்த எதிர்கட்சித் தலைவர், காதினால் மற்றும் கத்தோலிக்க சமூகத்தை அவமதிக்காமல், இது தொடர்பாக முறையான சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆட்சிக்கு வருவதற்கு உயிர்த்த
ஞாயிறு தாக்குதல் பயன்படுத்தப்பட்டது என்றும் சபாநாயகர் உட்பட மொட்டின் அனைவரும் அப்போது
தேர்தல் மேடைகளில் இதையே பேசினார்கள் என்றும், இன்றும் நீதி கிடைக்காததால், காதினால்
மற்றும் கத்தோலிக்க சமூகத்தை மேலும் அவமதிக்காமல், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்
என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச விசாரனைக்கு தமிழ்
மக்கள் அழைப்பு விடுத்தபோது அதனைத் தட்டிக்
கழித்தச்வர்கள், இன்ரு சர்வதேச விசாரனை
தேவை என
முழக்கமிடுகின்றனர்.சர்வதேசத்தின் தலையீடு இல்லாம எதனியும் செய்ய முடியாது என்பதை சில அரசியல்வாதிகளும், ஏனையவர்களும் இப்போதுத்சான்
புரிந்துகொண்டார்கள்.
No comments:
Post a Comment