ஜி20 மாநாட்டை வெற்ரிகரமாக நடத்தி முடித்திய பெருமையில் இருக்கும் இந்தியா மீது கனடாப் பிரதமர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அடுக்கடுக்காகப் பல குற்றச் சாட்டுகளித்த் தெரிவித்துள்ளதால் இரு நாடுகளுகுமான உறவில் விரிசல் விழுந்துள்ளது.
காலிஸ்தான்
ஆதரவு இயக்க தலைவர்களில் ஒருவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவின்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே சந்தேகத்திற்கிடமான முறையில்
கொலை செய்யப்பட்டார். அவரது மரணம் அங்கு வாழும் சீக்கிய சமூகத்தவரிடையே கொந்தளிப்பை
ஏற்படுத்திய நிலையில் அவரை சுட்டுக் கொன்ற இரண்டு நபர்கள் யார் என்பது இதுவரை தெரியவில்லை.
இந்தியாவால் தடை செய்யப்பட்ட இயக்கத் தலைவரான நிஜ்ஜாரின் கொலையில்
இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடாப் பிரதமர் ட்ரூடோ பாராளுமன்றத்தில் பகிரங்கமாகத் தெரிவித்ததை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரகசியமாகச் செய்ய வேண்டியவற்றை கனடாப் பிரதமர் போட்டுடைத்தார்.
இந்தியாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் போது இந்தியப் பிரதமர் மோடியிடம் இது பற்றி தெரிவித்ததாகவும் ட்ரூட்டோ தெரிவித்ததை இந்தியாவால் ஜீரணிக்க முடியவில்லை.
இந்திய தூதரக அதிகாரி பவன் குமார் ராயை கனடா வெளியேற்றியது.
பதிலடியாக கனடா இந்தியாவின் வெளியுறவுத்துறை
தூதரக அதிகாரி கேமரூன் மெக்கேயை இந்தியா வெளியேற்றியது.
இந்த்யா ஒருபடி மேலே போய் னடா நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது.இந்தியாவின்
சில இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என தாந்து நாட்டு மக்களுக்கு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனடாவுக்கும்
இந்தியாவுக்கும் இடையேயான பிரச்சினை அதிகரித்துள்ள
நிலையில், கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஒருவர்
அடையாளம் தெரியாத கும்பலால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அமெரிக்கா
வேண்டுகோள் விடுத்துள்ளது. மேற்குலக நாடுகளின் உதவியை கனடா எதிர் பார்க்கிறது.இது இந்தியாவை
எரிச்சலடைய வைத்துள்ளது. ரஷ்யா மீது உலக நாடுகள் தடை விதித்த போது இந்தியா ரஷ்யாவுக்கு
ஆதரவாக இருக்கிறது.
கனடா ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் இந்தியாவிற்கும் கடந்த 10 வருடங்களாகவே ஏழாம் பொருத்தம்தான். ஜி 20 மாநாட்டிலேயே அவருக்கும் இந்தியாவிற்கும் நிறைய மனஸ்தாபங்கள் ஏற்பட்டது. இந்தியா கொடுத்த ஹோட்டல் ரூமை மறுத்தது, இந்தியாவில் அவரின் விமானம் வேலை செய்யாமல் போனது., இந்தியா கொடுத்த விமானத்தை ஏற்க மறுத்தது, ஜி 20 மாநாட்டில் பொதுவான சந்திப்புகளில் ட்ரூடோ ஓரம்கட்டப்பட்டது என்று பல பிரச்சனைகள் ஏற்பட்டன.
ஒருமுறை
இந்தியாவுக்குச் சென்ற ட்ரூடோவை வரவேற்காமல்
இந்தியா அரசு தவிர்த்தது. இந்தியாவில் சாதாரண மனிதர் போல பாதுகாப்பு கூட இல்லாமல் ட்ரூடோ
ஊர் சுற்றிவிட்டு கடைசியில் சர்ச்சையானதால் மரியாதைக்கு பிரதமர் மோடியுடன் சந்திப்பு
நிகழ்த்திய சம்பவங்கள் கூட நடந்தன. காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு கனடா கொடுத்த ஆதரவுதான்
இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு காரணம் ஆகும். இப்படிப்பட்ட நிலையில்தான் இரண்டு நாட்டு
மோதல் அடுத்த கட்டத்தை எட்டி உள்ளது.
சீக்கியர்களுக்கு தனிநாடு கோரும் அமைப்பு காலிஸ்தான்.
1984-ம் ஆண்டே காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் இருந்து துடைத்தெறியப்பட்டுவிட்டனர்.
ஆனால் காலிஸ்தான் சித்தாந்தம் இன்னமும் ஓயவில்லை. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா
என சீக்கியர்கள் தஞ்சம் அடைந்த நாடுகளில் மீண்டும் மீண்டும் காலிஸ்தான் கோரிக்கையை
தீவிரவாதிகள் உயிர்ப்பித்து வருகின்றனர். குறிப்பாக கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள்
இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கனடாவில் உள்ள இந்திய
தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
கனடா அரசிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது.கனடாவில் 1.2 % சீக்கியர்கள் வாழ்கிறார்கள்.
தேர்தலின் போது அவர்களின் வாக்கு வீதம் முக்கியமானது.
காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு கனடா அடைக்கலம் கொடுத்து
வருகிறது. காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜாருக்கு குடியுரிமை தந்தது கனடா. தீவிரவாதி நிஜ்ஜார்
அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார்ர். இதற்கு இந்தியாவே காரணம் என கனடா குற்றம் சாட்டியது.
இதனால் இந்தியா- கனடா இடையேயான உறவில் மோதல் உருவாகி உள்ளது.கனடா வாழ் இந்தியர்கள்
உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சீக்கிய பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்து
வருகின்றனர்.
இந்த பதற்றமான
சூழ்நிலையில் கனடாவுக்கு சென்று காலிஸ்தான் தீவிரவாதி ப்ளஸ் நிழல் உலக தாதாவாக உருவான
கோல்டி பிரார் கோஷ்டிக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் முழுவதும் மாநில போலீசார் அதிரடி
நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பஞ்சாப் மாநில வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பல்வேறு
மாவட்டங்களில் மொத்தம் 1,000 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் இதுவரை எந்த தகவல்களையும் இந்தியாவுக்கு கனடா வழங்கவில்லை. தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் புகலிடமாக கனடா திகழ்கிறது. கனடா தனது நற்பெயரை தற்காத்துக் கொள்ள வேண்டும். நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது குற்றம் சொல்லும் கனடா இதுவரை தகுந்த ஆதாரங்களை கனடா அரசு தரவில்லை என்றும் ஆனால் இந்தியாவில் குற்றம் செய்துவிட்டு கனடாவில் உள்ள நபர்களின் விவரங்களை அந்நாட்டு அரசிடம் அளித்தும் மேற்கொண்டு நடவடிக்கைகளை கனடா அரசு எடுக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.
பஞ்சாப் காவல்துறை ஆவணங்களின்படி, ஜலந்தரின் ஃபில்லூர்
பகுதியில் உள்ள பார்சிங் புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பதை
அறிய முடிகிறது. தனது வாழ்வாதாரத்திற்காக 1996ஆம் ஆண்டு கனடாவுக்குச் சென்ற அவர் அந்நாட்டு
குடியுரிமை பெற்று பிளம்பராக தனது வாழ்கையை தொடங்கினார்.
சீக்கியர்கள் அதிகமாக வாழும் ’பஞ்சாப்’ மாநிலத்தை
தனியாக பிரித்து காலிஸ்தான் நாடு உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் வெளிநாடுகளில்
சில சீக்கிய இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவை தவிர்த்து அதிக சீக்கியர்கள்
வாழும் நாடான கனடாவில் ’காலிஸ்தான்’ தனிநாட்டிற்கான தாக்கம் அதிகமாக அறியப்படுகிறது.
தனிநாடு கோரும் காலிஸ்தான் சார்பு அமைப்புகளில் தன்னை
ஈடுபடுத்திக் கொண்டு நிஜ்ஜார் செயல்படத் தொடங்கினார். இதனால் அவரது செல்வ நிலை உயர்ந்ததாக
கூறப்படுகிறது.
ஜக்தார் சிங் தாரா தலைமையிலான பாபர் கல்சா இன்டர்நேஷனலில்
சேர்ந்தபோது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான அவரது முயற்சி தொடங்கியது. பின்னர் காலிஸ்தான்
புலி என்ற அமைப்பை கட்டி எழுப்பினார்.
இந்தியாவில் காலிஸ்தான் ஆதரவு எண்ணத்தை கொண்டவர்களை
கண்டறிதல், அவர்களுடன் தொடர்பு கொண்டு வலைப்பின்னலை ஏற்படுத்துதல், அவர்களுக்கு பயிற்சி
மற்றும் நிதி உதவி அளித்த ஆகிய செயல்பாடுகளில் நிஜ்ஜார் ஈடுபட்டதாக பஞ்சாப் காவல் அதிகாரிகள்
கூறுகின்றனர்.
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக உறுதியளித்து உள்ளூர்
இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது. டல்லாவுடன்
கைகோர்த்த பிறகு, நிஜ்ஜார் வெடிமருந்துகள், டிஃபின் மற்றும் கைக்குண்டுகளை இந்தியாவுக்கு
அனுப்பி உள்ளார். பிப்ரவரி 2022ஆம் ஆண்டில், நிஜ்ஜார் அனுப்பிய வெடிமருந்துகளுடன் மூன்று
பேரை சோனேபட் போலீசார் பிடித்தனர்.
நிஜ்ஜார் பிரிவினைவாத அமைப்பான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்
என்ற அமைப்புடன் உடன் தொடர்புடையவர், இது இந்த அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஜூலை 1, 2020 அன்று உள்துறை அமைச்சகம் அவரை பயங்கரவாதியாக
அறிவித்ததாகவும் கூறுகிறார். கடந்த ஆண்டு, பஞ்சாப் மாநிலத்தில் பயங்கரவாதத்தை புத்துயிர்
அளிப்பது தொடர்பான வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிஜ்ஜரை நாடு கடத்துமாறு பஞ்சாப் போலீசார்
கோரி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கனடாவுடன் முட்டி மோதுவதற்கு இந்தியா தயாராகிவிட்டது.இந்தியாவைத் தனிமைப்படுத்த கனடா காய் நகர்த்துகிறது.
No comments:
Post a Comment