2023 ஆம் ஆண்டிற்கான ஆண்கள் பலோன் டி'ஆர், பெண்கள் பலோன் டி'ஆர், யாஷின் டிராபி, கோபா டிராபி ஆகியவற்றிற்கான பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை பிரான்ஸ் கால்பந்து புதன்கிழமை வெளியிட்டது.
2022 ஆம் ஆன்டு உலகக்
கிண சம்பியனான ஆர்ஜென்ரீனாவின் கப்டனும், ஏழு
முறை பலோன் டி'ஓர்
வென்றவருமான லியோனல் மெஸ்ஸி ,கடந்த
சீசனில் மான்செஸ்டர் சிட்டியுடன் மும்முனை வெற்றி பெற்ற எர்லிங்
ஹாலண்ட் ,. 2022 வெற்றியாளர் கரீம் பென்சிமா ஆகியோரின் பெயர்
பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது பலோன்
டி'ஆர் விருதுக்காக மெஸ்ஸியின் பெயர்
16 ஆவது வருடமகச் சேர்க்கப்பட்டது சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
பெண்கள்
உலகக் கோப்பை வென்ற ஸ்பெயினின்
அய்டானா பொன்மதி, கோல்டன் பூட் வென்ற
ஜப்பானின் ஹினாட்டா மியாசாவா ,கொலம்பிய வெளிப்பாட்டாளர் லிண்டா கைசெடோ ஆகியோர்
பலோன் டி'ஓர் பெண்
பரிந்துரைக்கப்பட்டவர்களில்
அடங்குவர்.
யாஷின்
விருதுக்கு (சிறந்த கோல்கீப்பர்), உலகக்
கோப்பை வென்ற ஆர்ஜென்ரீனாவின் எமிலியானோ
மார்டினெஸ், மான்செஸ்டர் சிட்டியின் ட்ரெபிள்-வினர் எடர்சன் மற்றும்
லா லிகா கோல்டன் க்ளோவ்
மார்க் ஆண்ட்ரே டெர் ஸ்டெகன்
ஆகியோரின் பெயர்
பட்டியலிடப்பட்டுள்ளது.
கோபா
விருதுக்கு பார்சிலோனாவைச் சேர்ந்த 2022 வெற்றியாளர் கவி , 2021 வெற்றியாளர் பெட்ரி ஆகியோர் மீண்டும்
சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் ரியல் மாட்ரிட்டின் ஜூட்
பெல்லிங்ஹாம், பேயர்ன் முனிச்சின் ஜமால்
முசியாலா மற்றும் மான்செஸ்டர் யுனைடெட்டின்
ராஸ்மஸ் ஹோஜ்லண்ட் ஆகியோர் இணைந்துள்ளனர்.
2023 பலோன் டி'ஆர் 2023 பட்டியலிலிருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயர் இலாத்தால் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பிளவுபட்டுள்ளனர்.அல்-நாசருக்காக 33 ஆட்டங்களில் 26 கோல்கள் அடித்த போதிலும் , 38 வயதான அவர் 2023 Bஅல்லொன் ட்'ஓர் விருதுக்கான 30 பேர் தேர்வுப் பட்டியலில் இருந்து வ்ர்ளியேற்றப்பட்டுள்ளார்ன். 2003 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவர் பட்டியலில் இருந்து வெளியேறுவது இதுவே முதல் முறை என்பதால், சில ரசிகர்கள் இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment