இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றி பெற்று ஆட்சி பீடத்தில் அமர்ந்த பாரதீய ஜனதா, மூன்றாவது முறையும் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது. நேருவுக்கும் பின்னர் மூன்றாவது முறை பிரதமரானவர் மோடி எனும் சரித்திரத்தை எழுத பாரதீய ஜனதா விரும்புகிறது.
கொள்கை,கோட்பாடு, தனித்துவம் போன்றவற்றை ஒரு புறமொதுக்கி வைத்த இந்திய எதிர்க்கட்சிகள்
பாரதீய ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக ஒன்று சேர்ந்துள்ளன. எதிர்க் கட்சிகள் ஒன்றிணைவது சாத்தியமற்றது என பாரதீய ஜனதா பிரசாரம் செய்தது. எதிர்க் கட்சிகளின் முதல் கூட்டம்
கடந்த ஜூன் மாதம் பிஹார் மாநிலத் தலைநகர் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாத மத்தியில் பெங்களூரிலும்
நடைபெற்றன. இரண்டாவது கூட்டத்தில்தான் கூட்டணிக்கு
இந்தியா எனப் பெயர் சூட்டப்பட்டது. மூன்றாவது கூட்டம் மும்பையில் உள்ள கிராண்ட் ஹையத்
ஹோட்டலில் நடைபெற்றது. மூன்ரு கூட்டங்களும் எதுவித சலசலப்பும் இன்ரி சுமுகாஅக நடைபெற்றன. பாரதிய ஜனதா கட்சிக்கு
எதிராக எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ள கூட்டணிக்கு
இந்தியா [ I-N-D-I-A ] எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 28 கட்சிகள்
இந்தியக் கூட்டணியில் இணைந்துள்ளன. எதிர்க் கட்ச்சிகளைச் சேர்ந்த சுமார் 62
தலைவர்கள் கைகோர்த்துள்ளனர். இந்தியா கூட்டணியில்
உள்ள கட்சிகள் மொத்தமாக 11 மாநிலங்களில் ஆட்சியில்
இருக்கின்றன. 2019ஆம் தேர்தலில் மொத்தமாக 134 இடங்களையும் 35 சதவீத வாக்குகளையும் பெற்றிருக்கின்றன.
19 கட்சிகளிடம் 3 அல்லது மூன்றுக்குக் குறைவான இடங்களே இருக்கின்றன. இந்தக் கணக்கு பாரதீய ஜனதாவைப் பதற வைத்துள்ளது.
எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு வைத்துள்ள இந்தியா எனும் சொல்லை உலக அரங்கில் இருந்து அகற்றுவதில் மோடியின் அரசு குறியாக இருக்கிறது. இந்தியாவின் பெயரை "பாரத்" என மாற்ருவதற்கு மோடியின் அரசாங்கள் கால்கோள் இட்டுள்ளது. " இந்தியா" எனக்கூரினால் அது இந்திய நாட்டைக் குரிப்பிடுமா அல்லது எதிர்க்கட்சிகளின் கோட்டணியைக் குரிக்குமா என்ர சந்தேகம் மத்திய அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின்
பெயரை 'பாரத்' என மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
அதன்படி தான் ஜனாதிபதியின் அழைப்பிதழில் Pரெசிடென்ட் ஒf Bகரட் என இருப்பதாக தகவல்கள்
பரவி வருகிறது. மேலும் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்த
மசோதாவை மத்திய பாஜக அரசு வரும் 18ம் திகதி தொடங்கும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில்
தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது.
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றிய பாஜக எம்.பி நரேஷ் பன்சால், "இந்தியா என்பது
காலனித்துவ அடிமைத்தனத்தின் குறியீடு. எனவே அந்த பெயரை அரசியல் அமைப்பில் இருந்து நீக்க
வேண்டும்" என்றார். இந்தியா- பாரத் பெயர் சர்ச்சைக்கு மத்தியில் ஜி 20 மாநாட்டுக்கும்
இந்தியா முழு வீச்சில் தயராகி வருகிறது.
இதில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரெளபதி
முர்மு டின்னர் விருந்து வழங்க உள்ளார். இதற்கான அழைப்பிதழ் தற்போது வெளியாகி உள்ளது.
அதில் பிரசிடென்ற் ஒf இந்தியா என்பதற்கு பதில்
பிரசிடென்ற் ஒf பாரத் என அச்சிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற
மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சியின் முதல் நடவடிக்கை என கூறப்படுகிறது.
இந்தியா எனும் நாட்டை அழைப்பிதழில் "பாரத்" என அச்சடிப்பதன் மூலம் மாற்றிவிடலாம் என பாரதீய ஜனதா
தப்புக் கணக்குப் போடுகிறது. தமிழ் நாடு எனச் சொல்லக்கூடாது தமிழகம் எனச் சொல்ல
வேண்டும் என ஆளுநர் ரவி அறைகூவல் விடுத்துவிட்டு கரணமடித்ததை இந்திய மக்கள்
மறக்கவில்லை. ஒரு நாட்டின் பெயர் மாற்றம் என்பது வெறும் அறிவிப்பால் நடைமுறைப் படுத்த
முடியாது. மோடி, அமித் ஷா கூட்டணிக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரியும்.
இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்வதற்கான
சட்டத்திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு வரும் 18ம் திகதி தொடங்கும் சிறப்பு நாடாளுமன்ற
கூட்டத்தில் தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது.
இந்தியா என்றும் பாரத் என்றும் அழைக்கலாம். ஏனென்றால் இந்த 2 பெயர்களும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இத்தகைய சூழலில் தான் மத்திய அரசு இந்தியா என்ற பெயருக்கு பதில் பாரத் என பெயர் சூட்ட நினைத்தால் முதலில் அதுதொடர்பாக சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தற்போது இந்தியாவின் அரசியலமைப்பு சட்டப்பிரிவு ஒன்று தான் நாட்டை ‛‛இந்தியா, அதுதான் பாரத்'' என்று கூறுகிறது. இதனால் அரசியலமைப்பு சட்டம் ஒன்றில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். இந்த சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்படும் பட்சத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதலுடன் சட்டமாக்கப்படும்.
இதையடுத்து
இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்ற பெயரில் அழைக்க முடியும். மேலும் அரசியலமைப்பு
சட்ட திருத்தத்தையும் வெறுமனே செய்து முடித்து விட முடியாது. ஏனென்றால் அதற்கும் சில
விதிகள் வரையறைக்கப்பட்டுள்ளன. அதாவது இந்திய அரசியலமைப்பின் 368 வது பிரிவு தான் ஒரு
அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும்? என்பதை கூறுகிறது.
அதன்படி அரசியலமைப்பு சட்டத்தை 2 வழிகளில் திருத்தம்
செய்ய முடியும். ஒன்று சிம்பிள் மெஜாரிட்டி திருத்தம் (Simple Majority Amendment
). மற்றொன்று ஸ்பெஷல் மெஜாரிட்டி திருத்தம் ( Special Majority Amendment) என்பதாகும்.
இந்த 2க்கும் சின்ன வித்தியாசம் உள்ளது. அதாவது சிம்பிள் மெஜாரிட்டி திருத்தம் என்பது
சபையில் 50 சதவீத உறுப்பினர்களின் ஆதரவுடன் மேற்கொள்வது.
இது இந்திய
அரசியலமைப்பின் சட்டப்பிரிவின் கீழ் புதிய மாநிலம், மாநிலங்களில் உள்ள தொகுதிகளின்
எண்ணிக்கையில் மாற்றம் செய்வது உள்ளிட்டவற்றை மட்டுமே இதன்படி மேற்கொள்ள முடியும்.
மாறாக பிற சட்ட திருத்தங்களுக்கு ஸ்பெஷல் மெஜாரிட்டி திருத்தம் என்பது தான் பின்பற்றப்பட்டு
வருகிறது. இது சிம்பிள் மெஜாரிட்டி மூலம் நிறைவேற்றப்படுவதில் இருந்து வேறுபாடானது.
அதாவது தற்போது
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 1யை மாற்றம் செய்வது உள்பட பெரும்பாலான சட்ட திருத்தங்கள்
என்பது ஸ்பெஷல் மெஜாரிட்டி திருத்த முறையில் தான் நடக்கும். இந்த ஸ்பெஷல் மெஜாரிட்டி
திருத்தம் என்பது நாடாளுமன்றத்தில் 66 சதவீதம் பேர் அதாவது 3ல் 2 பங்கு உறுப்பினர்கள்
வாக்கெடுப்பில் பங்கெடுத்து ஓட்டளிப்பில் பங்கேற்று மசோதா வெற்றி பெற வேண்டும். இது
நடந்தால் மட்டுமே இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்வதற்கான இந்திய அரசியலமைப்பு
சட்டம் 1ல் திருத்தம் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருடத்துக்குக் குறைவான காலம் இருக்கையில் பெயர் மாற்றம் என்பது சாத்தியப் படாதது.
பாரதீய ஜனதாவின் எதிர்க் கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது. இந்திய எதிர்க்
கட்சியான காங்கிரஸையும் , அதன் தலைவர்களையும் பாரதீய ஜனத கடுமையாக விமர்சிப்பதில்லை. பாரதீய ஜனதாவின்
கோபப்பார்வை திராவிட முன்னேற்றக் கழகம், ஸ்டாலின், உதயநிதி எனத் தொடர்கிறது. மோடியும், அமித் ஷாவும் வடமாநிலங்களில் பேசும் போது ஸ்டாலின், உதயநிதி ஆகியோர்
மீது குற்றம் சுமத்துகின்றனர்.
சனாதனத்தைப் பற்றிய ஸ்டாலினின் பேச்சால் வடமாநிலம் கொதித்துப் போயுள்ளது. உதயநிதியின் தலைக்கு வடமாநில
சாமியார் 10 கோடிரூபா கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
பயங்கரவாதியைப் பிடிபதர்கு அரசங்கம் அறிவித்ததைப் போன்று தமிழக அமைச்சரின் தலைக்கு
விலை பேசிய சாமியாருக்கு எதிராக அந்த மாநிலத்தில் சட்ட நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த சாமியாரிடம் 10 கோடி ரூபா எப்படி வந்ததென்பதை ஆராய அந்த மாநிலப் பொலிஸார்
விசாரிக்க முயற்சிக்கவில்லை. உதயநிதியின் கன்னத்தில் அடித்தால் 10 இலட்சம்
ரூபா கொடுக்கப்படும் என ஒருவர் அறிவித்துள்ளார். இதை எல்லாம் அந்த மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கின்றன.
ஆலுக்கொரு பக்கம் பிரிந்திருந்த இந்திய எதிர்க் கட்சிகளை ஒன்றிணைத்த பெருமைக்குரியவர் ஸ்டாலின். ஆகையால் பாரதீய ஜனதாவின் கோபப் பார்வை தமிழக அரசின் மீது விழுந்துள்ளது.
No comments:
Post a Comment