நட்சத்திர உதைபந்தாட்ட வீரர்களைப் பாதுகாப்பது மிகவும் சிரமமான காரியம். மைத்கானப் பாதுகாவலரும், பொலிஸாரும் கடுமையான பாதுகாப்பை உறுதிப் படுத்தினாலும், ஒரு சிலர் அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்து விடுவார்கள். மைதானத்தில் இருக்கும் கமராக்கள் அவர்களை நோக்கித் திரும்பிவிடும்.
மெஸ்ஸி விளையாடும்போது மைதானத்துக்கு வெளியே அஜானுபாகுவான கோட் போட்டு, ரை கட்டிய மொட்டை மனிதர்
மெஸ்ஸிக்கு சமாந்தரமாக ஓடுவார்.மைதானத்தின் கமராக்கள் பிரத்தியேகமானாவரின் நடமாட்டத்தியும் படம் பிடிக்கும். யாசின் சூகோ என்று அழைக்கப்படும் அவர் லியோனல் மெஸ்ஸியின் மெய்க்காப்பாளர்க் கடமையாற்றுகிறார். அமெரிக்க இராணுவத்தின் முன்னாள் சிப்பாயான அவர் ஈராக்
ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ல் கடற்படை
அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
லியோனல் மெஸ்ஸியின் மெய்க்காப்பாளர் (வலது) அமெரிக்க இராணுவத்தின் முன்னாள் சிப்பாய் என்றும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் கடற்படை அதிகாரியாகப் பணியாற்றியவர் என்றும் கூறப்படுகிறது. இங்கிலாந்து உதைபந்தாட்ட அணியின் முன்னாள் கப்டனும், இன்டர் மியாமியின் இணை உரிமையாளருமான டேவிட் பெக்காம் அவரைப் பரிந்துரைத்ததாக நேஷன் உட்பட பல உள்ளூர் ஊடக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், மெசிஸை பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு அவருக்கு மட்டும் இல்லை. மெஸ்ஸிமற்றும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைனில் அவரது முன்னாள் அணி வீரர் செர்ஜியோ ராமோஸ் உட்படஅவருக்கு ஒரு லட்சத்து இருபத்தி ஒன்பதாயிரத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்,
No comments:
Post a Comment