Sunday, September 3, 2023

தமிழக அரசியலில் அநாதையான ஓ.பன்னீர்ச்செல்வம்

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அசைக்க முடியதவராக வலம் வந்தவர்  .பன்னீர்ச்செல்வம். ஜெயலலிதா சிறைக்குச் சென்ற போது முதலமைச்சர் பதவியைப் பொறுப்புடன் ஏற்று திருப்பிக் கொடுத்தவர். எடப்பாடி பழனிச்சாமி இதற்கு நேர் மாறானவர். முதல்வர் பதவியைக் கொடுத்த சசிகலாவைத் தூக்கி எறிந்தவர்.

ஜெயலலிதாவின்  மறைவின்  பின்னர் சசிகலா அரசியலுக்குள் நுழைந்தபோது அவரை அகற்றுவதற்கு  பன்னீரைபாரதீய ஜனதா  பகடையாகப் பயன்படுத்தியது.சசிகலா சிறைக்குச் சென்றது  பாரதீய ஜனதா நிம்மதி அடைந்தது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சின்னம் பன்னீரின் வசம்  இருந்தது. பாரதீய ஜனதாவின் ஆலோசனையால்  அதனை எடப்பாடிக்குத் தாரை வார்த்தார்  பன்னீர்.கட்சிகுள் இருந்து பன்னீரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டினார் எடப்பாடி. பாரதீய ஜனதா தன்னைக் கைவிடாது  என்ற குருட்டு நம்பிக்கையில் கண்ணை மூடிக்கொண்டிருந்தார் பன்னீர்.

பாரதீய ஜனதா  போட்ட தாளம் அனைத்துக்கும் ஆடிய  அன்றைய முதலமைச்சர்  எடப்பாடி கட்சிக்குள் தன்னை  வலுப்படுத்தினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடப்பாடி வசமானதுபன்னீர் நடத்திய சட்டம் போராட்டம் அனைத்தும்  முடிவுகு வந்தன. தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும்  எடப்பாடிக்கு அங்கீகரம் வழங்கின.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்  கூட்டணி தமிழகத்தில் பலமாக  இருக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதீய ஜனதாவும்  ஒரே கூட்டணியில்தான்  இருக்கின்றன. ஆனால், தமிழக  பாரதீய ஜனதாத் தலைவருக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களுக்கும் இடையில் சுமுகமான உறவு இல்லை. வாசன் மட்டும்தான்  இந்தக் கூட்டணிக்கு விசுவாசமாக  இருக்கிறார். ராமதாஸும், விஜயகாந்தும் வெளியில் நிற்கிறார்கள்.

பாரதீய ஜனதாவும்  மெதுமெதுவாக எடப்பாடியின் பக்கம் சாயத் தொடங்கியது. பன்னீர்  இப்பொழுதுதான் கண்ணைத் திறந்துள்ளார். தினகரனுடன் கைகோர்த்துள்ள  பன்னீர்  புதிய அரசியல் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டார். பன்னீர்  புதிய கட்சி ஆரம்பிக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிசம்பர்  வரை பொறுத்திருக்குமாறு அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். பாரதீய ஜனதாவை இனியும் நம்புவதற்கு பன்னீர்ச்செல்வம் தயராக  இல்லை. தனது பலத்தைக் காட்டுவதர்காகத் தனிக் கட்சி ஆரம்பிக்கும்  முடிவை அவர் நெருங்கிவிட்டார்.

பன்னீர்ச்செல்வம், தினகரன், சசிகலா ஆகிய மூவரையும் கடைசி வரை கட்சியில் சேர்க்க மாட்டேன் என்பதில் எடப்பாடி உறுதியாக  இருக்கிறார்.அவரைச் சரிக்காட்ட முடியாமல்  பாரதீய ஜனதா தவிக்கிறது. நிலைமை கை மீறியதால் தனிக் கட்சி என்ற  முடிவை பன்னீர் கையில் எடுத்துள்ளார்.

பன்னீருக்கு  ஆதரவாக நிற்கும்  மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தொலக் காட்சி ஒன்றுக்கு வழங்கிய  பேட்டியில் , "நாங்கள் தனித்து நிற்போம் என்றும், பாஜகவுடன் ஓபிஎஸ் இல்லை என்றும்" அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார். தனிக்கட்சி: அதுமட்டுமல்ல, தங்கள் பலத்தை காட்டுவதற்காக தனிக்கட்சி தொடங்குவதற்கு ஓபிஎஸ்ஸிடம் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆதரவாளர்களின் இந்த எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் வகையில்தான், ஓபிஎஸ்ஸும் விரைவில் தனிக்கட்சியை தொடங்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்பதை  மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் உறுதிபடுத்தியிருக்கிறார்.

பாரதீய ஜனதாக் கட்சியின் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்ற போது பனீருக்கு அழைப்பு விடப்படவில்லை. பாரதீய ஜனதாவின் தயவை எதிர்பர்க்கும் தினகரனும், சசிகலாவும்  புறக்கணிக்கப்பட்டனர். இதனால்  பன்னீர்  பெரிதும்  பாதிக்கப்பட்டார்.

 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்காகபல கள ஆய்வுகளை  பாரதீய ஜனதா செய்துள்ளது. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கூட்டணி பலமாக  இருக்கிறது என்பதை பாரதீய ஜனதா  புரிந்துகொண்டுள்ளது. அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள், மக்களின் அடிப்படை பிரச்சினைகள்நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை பிரச்சாரம் செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என பாரதீய ஜனதா நம்புகிறது.

தமிழகத்தில் 10 தொகுதிகளை பாரதீய ஜனதா  குறிவைத்துள்ளதுஎடப்பாடி,பன்னீர்,தினகரன், சசிகலா ஆகிய நால்வரும்  இணைந்தால் வெற்றி   பெறலாம் என பாரதீய ஜனதா கருதுகிறது. அதற்கு  எடப்பாடி முட்டுக் கட்டையாக  இருக்கிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்கு தினகரன் பிரித்த வாக்குகளே காரணம்.

தென் மாவட்டங்களில் 15 தொகுதிகள் மட்டுமல்ல, தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் நாங்கள்  இருவரும் இல்லாமல்   அதிமுகவால் வெல்ல முடியாதுஎன  திஅகரன் எச்சரித்துள்ளார்டெல்டா மாவட்டங்கள் மற்றும் மத்திய, தென் மாவட்டங்களில் தினகரனுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. இந்த மாவட்டங்களில் தான் ஓபிஎஸ்ஸுக்கும் ஆதரவு வட்டம் இருக்கிறது.

இதையெல்லாம் கணக்குப் போட்டே இருவரும் இணைந்து மூன்றாவது அணியை அமைப்போம். சசிகலாவோடு சேர்த்து இன்னும் சில கட்சிகளையும், அமைப்புகளையும் உள்ளடக்கி அதிமுகவை தோற்கடிக்கும் ஒரே கொள்கையுடன் தேர்தலைச் சந்திப்போம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர்கள் மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிட்டால் அது அதிமுக அணிக்குத்தான் பின்னடைவை ஏற்படும் என்பது உண்மை.

  திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, சிவகங்கை, திருச்சி உள்பட பாரதீய ஜனதா போட்டியிட நினைக்கும் பல தொகுதிகளில் ஓபிஎஸ் க்கும்தினகரனுக்கும் நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே, இவர்கள் மூன்றாவது அணி அமைத்தால் அது தங்களையே பாதிக்கும் என்ற பதறுகிறது பாரதீய ஜனதா.

தமிழகத்தில் இதுவரை பலமுறை மூன்றாவது அணிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை அனைத்துமே யார் வெல்லவேண்டும் என்பதைவிட, யார் தோற்கவேண்டும் என்பதையே தீர்மானித்துள்ளன. இப்போது பன்னீர்  தினகரன் அமைக்கத் திட்டமிடும் மூன்றாவது அணிக்கும்  எடப்பாடியை வீழ்த்தும் முயற்சியே பிரதானமாக இருக்கும்.

தலைவர்கள் ஒன்று பட்டாலும் தொண்டர்கள் ஒன்று சேர்வார்களா என்ற சந்தேகமும்  உள்ளது

வர்மா

No comments: