தனித்து விடப்பட்ட மூத்த அரசியல்வாதி டாக்டர் ராமதாஸ்
மகனை மத்திய அமைச்சராக்க முயற்சி செய்யும் பிரேமலதா
விஜயுடன் கூட்டணி சேர பெரிய கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை.
காங்கிரஸின் முடிவுக்கு காத்திருக்கும் திமுக
உயர் நீதிமன்றத் தீர்ப்பு அரசியல் ரீதியாக விஜய்க்கு மிகப்பெரிய
பின்னடைவு
தமிழக தேர்தல்களம் நாளுக்கு
நாள் மாறிக்கொண்டே செல்கிறது. திமுகவுடனும், அதிமுகவுடனும் பேரம்
பேசுகிறார் பிரேமலதா. தமிழக அரசியலில் கிங் மேக்கராக வலம் வந்த டாக்டர் ராமதாஸை சேர்க்க
பெரிய கட்சிகள் எவையும் விரும்பவில்லை. திமுகவுடன் மிக நெருக்கமாக ஒட்டி உறவாடிய காங்கிரஸ்
பதவி ஆசையால் தடுமாறுகிறது.
தமிழகத்தில் நான்கு முனைப்
போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக ஆகியவை களத்தில்
உள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட்,
மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள்
தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
அதிமுக கூட்டணியில்
பாஜக, பாமக (அன்புமணி), அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்,
புரட்சி பாரதம், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை உள்ளன.
பிரேமலதாவும், ராமதாஸும்
தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை இன்னமும் அறிவிக்கவில்லை. இதில் பாமக ராமதாஸை பொருத்தமட்டில்
கட்சியே யாரிடம் இருக்கிறது என்பதில் வழக்கு நடந்து வருகிறது. மாம்பழச்சின்னம் யாருக்கு
இருக்கிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. அதற்கிடையில் அன்புமணியை , அடப்பாடி
அரவணைத்துள்ளார். ஒற்றுமையாக இருந்த போதே வ்ற்றி பெறாத அன்புமணி கட்சி இரண்டானபின்னர்
வெற்ற்றியடைவார் என எஅடப்பாடி நம்புகிறார்.
அன்புமணி அதிமுகவுக்குச் சென்றதால்
ராமதாஸ் திமுகவுக்குத் தூது விட்டார். அங்கு அவரது பரம வைரியான திருமாவளவன் சிம்மாசனம்
போட்டு உட்கார்ந்து இருக்கிறார். விஜயின் பனையூரையும் எட்டிப்பார்த்தார் ராமதாஸ். பனையூர்
கதவும் திறக்கப்படவில்லை.
விஜயகாந்தின் தலைமையில் பலமாக
இருந்த கட்சி ஜெயலலைதாவினால் சின்னாபின்னமாக்கப்பட்டது. வாக்கு வங்கி சொல்லும்படியாக
இல்லை.கடந்த கால தேர்தக்ல்களில் மிக மோசமாகத் தோல்வியடைந்ததால் முரசு சின்னம் பறிபோய்விட்டது.
தமிழகத்தேர்தலில் ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே மீண்டும் முரசு
சின்னம் கிடைக்கும். இதை எல்லாம் கணக்குப் பார்த்து 14 தொகுதிகளையும் ஒரு ரஜ்யசபா பதவியையும்
கேட்கிறார் பிரேமலதா. மகனை அமைச்சரக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். ஐந்து தொகுதிதான்
என எடப்பாடி அடித்துச் சொல்லி விட்டார். ஏழு தொகுதிகளுக்கும் ஒரு எம்பி பதவிக்கும்
திமுக ஒப்புக் கொண்டுள்ளது. அதிகமான தொகுதிகளும், அட்சியில் பங்கும் என விஜய்
சொல்லியுள்ளார். விஜயின் பக்கம் செல்வதற்கு பிரேமலதா விரும்பவிரும்பவில்லை.
குறைந்தபட்சம் 10 தொகுதிகளையாவது கேட்டு பெறலாம் என தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துகிறதாம். பிரேமலதா, விஜய பிரபாகரன், சுதீஷ், பார்த்தசாரதி, மோகன்ராஜ், வெங்கடேசன், நல்லதம்பி, சுபா, இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 10 பேர் கட்டாயம் போட்டியிடுகிறார்களாம். இந்த 10 பேரில் விஜயகாந்த் குடும்பத்தில் இருந்து 3 பேர் போட்டியிடுகிறார்கள். மற்ற 7 பேரில் யாரையும் விட்டுக் கொடுக்க முடியாத நிலையில் தேமுதிக உள்ளது. விஜயகாந்த் இருந்த போதே அவருக்கு சிலர் துரோகம் செய்துவிட்டு தங்களுக்கு தோதுபட்ட கட்சிகளில் இணைந்துவிட்டார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் இன்னமும் விஜயகாந்த் விசுவாசிகளாக தேமுதிகவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பதால் அவர்கள் அனைவருக்கும் சீட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக இருப்பதால்தான் சீட் எண்ணிக்கை விஷயத்தில் பிரேமலதாவால் இறங்கி வர முடியவில்லை என்கிறார்கள்.
விஜயின் பக்கத்துக்குப் போகலாம்
என ராகுலுக்கு நெருக்கமான டில்லிப் பிரமுகர்கள் விரும்புகிறார்கள்.தமிழக காங்கிரஸ்
தலைவர்கள் சிலர் இதற்கு தலை ஆட்டுகிறார்கள். திமுகவுடன் கூட்டணி இருப்பதால் நாடாளுமன்றத்திலும்
ராகுலைப் பாதுகாக்க முடிகிறது. காங்கிரஸின் முடிவுக்காக ஸ்டாலின் பொறுமையாக இருக்கிறார்.
வெளியேறினால் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கும் முடிவில் ஸ்டாலின்
இருக்கிறார்.
இதேவேளை தீயசக்தி, தூயசக்தி என சவால் விட்ட விஜய்க்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.வருமான வரித்துறை விதித்த 1.5 கோடி ரூபா அபராதம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசியல் ரீதியாக விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது .புலி படத்தில் நடித்ததற்கு வாங்கிய 1.5 கோடி ரூபா சம்பளத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வரி ஏய்ப்பு செய்ததாக விஜய்க்கு வருமான வரித்துறை தரப்பில் 1.5 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. 2022 ஜூன் 30ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார்.
ஆவணங்களை வருமான வரித்துறையினர்
ஆய்வு செய்த போது 1.5 கோடி ரூபா வருமானத்தை கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்பின் விஜய் தொடர்ந்து வழக்கின் விசாரணையின் போது வருமான வரித்துறை தரப்பில் பதில்
மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது விஜய் தரப்பில் கால தாமதமாக அபராதம் விதிக்கப்பட்டதாக
வாதிடப்பட்டது. இறுதியாக விஜய்க்கு விதிக்கப்பட்ட 1.5 கோடி ரூபா அபராதம் செல்லும்
என்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றன், விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இது அரசியல் தளத்தில் விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது.
அரசியலுக்கு வந்த பின் சினிமாவின்
உச்சத்தை விட்டுவிட்டு வந்துள்ளேன் என்ற ஒரு பில்டப் இருந்தது. தற்போது நீதிமன்றம்
அளித்துள்ள தீர்ப்பு அரசியல் கட்சித் தலைவருக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பாகவே கருதப்படும்.
இதனால் விஜய் கூறி வந்த தூயசக்தி என்ற பிம்பம் உடைக்கப்பட்டு, விஜய் ஒரு மாயசக்தி என்று
விமர்சனங்கள் வைக்கப்படும்.
இது அரசியல்வாதி விஜய்க்கு
மிகப்பெரிய பின்னடைவு. பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர் தங்களை தூய்மையானவர்களாக வைத்துக்
கொள்ள வேண்டும். தூய சக்தி என்றால் நாம் அதனை நிரூபிக்க வேண்டும். விஜய் மீது அரசை
ஏமாற்றிய குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் விஜய்யின் வீட்டில் நடந்த ரெய்டு அடிப்படையில், வருமானத்தை மறைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தனால் கறுப்புப் பணம் என்ற
விமர்சனத்தை முன் வைத்து வரும் அதிமுக இன்னும் அதிகமாக தாக்கும். அதேபோல் விஜய் வெறும்
வாய் சொல் வீரர் என்ற திமுகவின் வாதம் எடுபட தொடங்கும். அரசியலுக்கு வந்த பின் விஜய்
இந்த வழக்கை வாபஸ் பெற்றிருக்க வேண்டும். இந்த விவகாரத்தை திமுக கையில் எடுக்கும் இதனை
எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட
அரசியல்வாதி என்ற பிம்பம் விஜய் மீது படிந்துள்ளது.
ரமணி
8/2/26


No comments:
Post a Comment