கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற உலகக்கிண குரூப் பி பிரிவு லீக் போட்டியில் பலம்வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸிம்பாப்வே அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு ரி20 உலகக் கிண்ணத்தைல் அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த ஸிம்பாப்வே, மீண்டும் ஒருமுறை அதே சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணிக்கு தொடக்க
ஆட்டக்காரர் பிரையன் பென்னட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் அதிரடியாக
ஆடிய டாடிவானாஷே மருமானி 21 பந்துகளில் 35 , பர்ல்,30 பந்துகளில் 35 ரன்கள் ஓட்டங்கள்
எடுத்தனர்.
இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய
கப்டன் சிக்கந்தர் ராசா, 13 பந்துகளில்
25 ஓட்டங்கள் அடித்தார். பிரையன் பென்னட்
56 பந்துகளில் 64 ஓட்டங்கள் குவித்து இறுதிவரை
ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ஸிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2
விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் என்ற சவாலான
ஸ்கோரை எட்டியது.
170 ரனோட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர் ஜோஷ் இங்கிலிஸ் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேமரூன் கிரீன் , டிம் டேவிட் ஆகியோர் டக் அவுட்டானார்கள். கப்டன் டிராவிஸ் ஹெட்டும் 17 ஓட்டங்களில் ஆஸ்திரேலியா 3.2 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து 29 ஓட்டங்கள் எடுத்தது. 4,3 ஓவர்களில் 5 ஆவது விக்கெற்றைஇழந்து 106 ஓட்டங்கள் எடுத்தது.
மேட் ரென்ஷா,
கிளென் மேக்ஸ்வெல் ஜோடி போராடியது. இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டிற்கு
77 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழ்ந்தா ஓட்டங்களில்
ஆட்டமிழக்க, தனி ஆளாகப் போராடிய மேட் ரென்ஷா 44 பந்துகளில் 65 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மக்ஸ்வெல் 31 ஓட்டங்கள் எடுத்தார் ஏனையோர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். அவுஸ்திரேலிய
அணி 19.3 ஓவர்களில் சகல விக்க்கெற்களையும்
இழந்து 146 ஓட்டங்கள் எடுத்தது.
ஸிம்பாப்வேயின்ல் வேகப்பந்து
வீச்சாளர் பிளெஸ்சிங் முசரபானி 4 ஓவர்கள் வீசி 17 ஓட்டங்கள்
மட்டுமே கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்குத் துணையாக பிராட்
எவன்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஸிம்பாப்வேயின் வெற்றி குரூப்
பி பிரிவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸிம்பாப்வே அணியின் இந்த வரலாற்று
வெற்றி, தொடரை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. அவுஸ்திரேலிய அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு
செல்ல முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கையும், ஸிம்பாப்வேயும் தலா 4 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.


No comments:
Post a Comment