Sunday, December 14, 2008

வெற்றிபெறுமா இந்திய அணி?


சென்னையில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இங்கிலாந்து அணி 387 ஓட்டங்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.
ஸ்டிரஸ், கொலிங்வூட் ஆகிய இருவரும் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து இந்திய அணிக்கு சவால் விடுத்துள்ளனர்.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 316 ஓட்டங்கள் எடுத்தது. ஸ்டிரஸ் 123 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்திய அணி முதலாவது இன்னிங்ஸில் 241 ஓட்டங்கள் எடுத்தது. டோனி 53 ஓட்டங்களும் ஹர்பஜன் 43 ஓட்டங்களும் எடுத்தனர். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் இந்திய அணிக்கு பெரும் சோதனையாக அமைந்தது.
ஸ்டிரஸ் 73 ஓட்டங்களுடனும் கொலிங்வுட் 60 ஓட்டங்களுடனும் நேற்றைய ஆட்டத்தை ஆரம்பித்தனர். இங்கிலாந்து அணி 43 ஓட்டங்களில் மூன்று விக்கட்டுகளை இழந்தது ஆகையினால் இந்திய அணி வீரர்கள் உற்சாகத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
இங்கிலாந்து அணி வீரர் இருவரையும் பிரிப்பதற்கு இந்தியா அணித் தலைவர் டோனி எடுத்த முயற்சிகள் அனைத்தும் ஸ்டிரஸ், கொலிங்வூட் இருவரும் இணைந்து 214 ஓட்டங்கள் எடுத்து இந்திய அணியை கதிகலங்க வைத்தனர்.
108 ஓட்டங்கள் எடுத்த ஸ்டிரஸ்ட் ஹர்பஜன் சிங்கின் பந்தை லக்ஷ்மனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிளிண்டொப் நான்கு ஓட்டங்களில் நடையைக் கட்டினார்.
இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த கொலிங்வூட் 108 ஓட்டங்களில் சஹீர்கானின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.
ஒன்பது விக்கட்டுகளை இழந்து 311 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது இங்கிலாந்து அணி ஆட்டத்தை நிறுத்தி இந்திய அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஷேவாக், கம்பீரும் அதிரடியாக விளையாடினர். இந்திய அணி 33 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்தது. ஷேவாக் 32 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். இரண்டு சிக்ஸரும் எட்டு பௌண்டரிகளும் அடி த்து ஷேவாக் 50 ஓட்டங்களை நிறைவு செய்தார்.
108 பந்துகளில் இந்திய அணி 100 ஓட்டங்கள் குவித்தது. இந்திய அணி 131 ஓட்டங்கள் எடுத்திருந்த போது 83 ஓட்டங்கள் எடுத்திருந்திருந்த ஷேவாக் ஆட்டமிழந்தார்.
கம்பீர் 41 ஓட்டங்களுடனும் ட்ராவிட் இரண்டு ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

2 comments:

நாகு (Nagu) said...

இந்த போட்டியில் ஜெயிக்காவிட்டால் டெண்டுல்கரும் திராவிடும் விலகவேண்டியதுதான்.

ஒரு நண்பர் சொன்னார் - இந்த மாதிரி பிரச்னையான நேரத்தில் டெண்டுல்கரும், திராவிட லஷ்மணர்களும் கைக்கொடுக்கமாட்டார்கள். கம்பீர், யுவராஜ், தோனி (புது சுவர் - ஹர்பஜன்)கள்தான் காப்பாற்றுவார்கள்.

ஆனால் ஒன்று - ஆட்டத்தின் தலையெழுத்தையே மாற்றியது சேவாக்தான். அவருக்கு ஒரு ஓ!

பீட்டர்சன் ஏதாவது சுவற்றில் தலையை மோதிக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். :-)

வந்தியத்தேவன் said...

நிச்சயம் வெற்றி பெறும் நாளை கம்பீர் தோணி போன்றவர்களின் உதவியினால் வெற்றி பெறும் சேவாக்கின் அவுட் ஜீரணிக்கமுடியவில்லை/