Tuesday, December 16, 2008

விஜயகாந்துடன் அணி சேரமுற்சிக்கும் தமிழகக் கட்சிகள்



காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்குக்குறைந்துள்ளதாகவும் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து தேர்தலுக்கு முகம் கொடுத்தால்வெற்றி பெற முடியாது என்றும்தெரிவிக்கப்பட்ட கருத்தை வட இந்தியாவின்மாநிலத் தேர்தல் முடிவுகள் தகர்த்துள்ளதால்தமிழக முதல்வர் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியுள்ளார்.
கூட்டணிக்குள் ஏற்பட்ட குழப்பத்தாலும்குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிளவினாலும் தடுமாறிய தமிழக முதல்வர் கருணாநிதி, சகல
பிரச்சினைகளுக்கும் சுமுகமான தீர்வைக் கண்டுள்ளார். ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும்இடையேயான பனிப்போர், மாறன் குடும்பத்துடன் ஏற்பட்ட பிணக்கு ஆகிய இரண்டு பிரச்சினைகளுக்கும் சுமுகமான தீர்வைக் கண்டுள்ளார் முதல்வர்.
பாட்டாளி மக்கள் கட்சியை மீண்டும் கூட்டணி
யில் சேர்ப்பதற்கு முதல்வர் தயாராகிவிட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்வதைத் தவிர பாட்டாளி மக்கள் கட்சிக்குவேறு மார்க்கம் இல்லை.மத்திய அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட மார்க்ஸிஸ்ட் கட்சி,
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன்இணைந்துள்ளது.
மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் இருக்கும் மார்க்ஸிஸ்ட் கட்சி ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தனதுமுடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.திராவிட முன்னேற்றக் கழகத்தால் வெளியேற்றப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியைமார்க்ஸிஸ்ட் கட்சி கண்டுகொள்ளவில்லை.திராவிட முன்னேற்றக் கழகத்தினால் வெளியேற்றப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்அழைப்பை எதிர்பார்த்து ஏமாந்தது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும்
மார்க்ஸிஸ்டும் இணைவது உறுதியான போதிலும் கம்யூனிஸ்ட் கட்சி யாருடன் கூட்டணிசேர்வது என இன்னமும் அறிவிக்கவில்லை.காங்கிரஸ், பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைப்பதில்லை என்ற உறுதியில் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. ஆகையினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி சேரும்சூழ்நிலை உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன்கூட்டணி சேரும் கனவில் இருந்த பாரதீய ஜனதாக் கட்சி தனித்துப் போயுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்கும் கனவுடன் இருக்கும் பாரதீய ஜனதாக் கட்சி தமிழகத்தில் பலமிழந்த நிலையில் இருப்பது அதற்கு பெரும்பின்னடைவாகும். தமிழகத்தின் எந்த ஒருதொகுதியிலாவது தனித்து நின்று வெற்றிபெறுவதற்கான செல்வாக்கு அற்ற நிலையில்பாரதீய ஜனதாக் கட்சி உள்ளது.திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகமும் தமக்குரியகூட்டணிக் கட்சிகளைத்தேர்வு செய்து விட்டன.தனித்து விடப்பட்டுள்ள பாரதீய ஜனதாக்கட்சி விஜயகாந்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டுகட்சிகளுக்கும் சவால் விடும் வகையில்வளர்ந்துள்ள விஜயகாந்தை தமது அணியில்சேர்ப்பதற்கு பாரதீய ஜனதாக் கட்சி முயற்சிசெய்து வருகிறது.
பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணிஅமைத்தால் முஸ்லிம்களின் வாக்குகளையும்கிறிஸ்தவர்களின் வாக்குகளையும் இழக்க
வேண்டிய சூழ்நிலை விஜயகாந்துக்கு ஏற்படலாம்.விஜயகாந்தை தமதுஅணிக்குள்கொண்டு வருவதற்கு ஜெயல
லிதாவும் முதல்வர் கருணாநிதியும் பெரும்முயற்சி செய்கின்றனர். விஜயகாந்தைஅண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்தில்சேர்ப்பதற்குமார்க்ஸிட் கட்சி முயற்சி செய்து வருகிறது.திராவிட முன்னேற்றக் கழகமும் விஜயகாந்
துக்கு தூது விட்டுள்ளது.நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போதுதனித்து நின்று வெற்றி பெற முடியாது
என்பதை விஜயகாந்த் உணர்ந்துள்ளார். தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத நிலையில் இருக்கு
ம் பாரதீய ஜனதாக் கட்சியுடன் சேர்வதற்குவிஜகாந்த் முன்வர மாட்டார். பாரதீய ஜனதாக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் வெற்றிக் கனிøயப் பறிக்க முடியாது என்பதனால் பாரதீயஜனதாக் கட்சியை விஜயகாந்த் தவிர்த்து
விடக்கூடும்.திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றில்ஏதாவது ஒன்றுடன் கூட்டணி அமைத்தால்ஒரு சில தொகுதிகளில் விஜயகாந்தின் கட்சிவெற்றி பெறும். இந்த இரண்டு கட்சிகளில்ஏதாவது ஒன்றுடன் விஜயகாந்த் கூட்டணிசேர்ந்தால் அங்கே கட்சிக் கொள்கை பின்தள்ளப்பட்டு விடும். கூடுதலான தொகுதிகளை விட்டுக் கொடுக்கும் கட்சிக்கே முக்கியத்துவம் வழங்கப்படும்.விஜயகாந்தும் கம்யூனிஸ்ட் கட்சியும்இணைந்து போட்டியிட்டால் ஒன்று அல்லதுஇரண்டு தொகுதிகளில் வெற்றி கிடைக்கும்.ஏதாவது, ஒரு அணியில் இணைய வேண்டியகட்டாயத்துக்கு விஜயகாந்த் தள்ளப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த முதல்வர் கனவில் தமிழக அரசியல்வாதிகள் மிதந்து கொண்டிருக்கபிரதமர் நாற்காலியை குறி வைத்து ஜெயலலிதா காய்நகர்த்தி வருகிறார்.நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்று ஆயிரத்துக்கும் அதிகமான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மனு அனுப்பியுள்ளனர்.
மூன்றாவது அணி ஆட்சி அமைத்தால்ஜெயலலிதாவுக்கு அதிக முக்கியத்துவம்வழங்கப் படப்போவது உறுதியாகியுள்ளது.மூன்றாவது அணிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது விட்டால் மத்தியில்ஆட்சி அமைக்கும் கட்சியுடன் கூட்டணிக்கேஜெயலலிதா முயற்சி செய்வார்.இந்நிலையில், பொருளாதாரப் பிரச்சினைஅத்தியாவசிய பொருட்களின் விலைஉயர்வு, மும்பைத் தாக்குதல் போன்றவற்றின்பாதிப்புகள் இருந்தும் மாநிலங்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றமைஎதிரணிகளை கதிகலங்க வைத்துள்ளது.
வர்மா
வீரசேசரி வாரவெளியீடு 14 12 2008

No comments: