Tuesday, December 30, 2008

வெற்றியை நோக்கி இலங்கை



இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 521ஒட்டங்கள் என்ற எண்ணிக்கையை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. சஹீப் அல் ஹசனின் பந்து வீச்சில் தடுமாறிய இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 293 ஓட்டங்கள் எடுத்தது. மஹேல, சங்கக்கார, சமரவீர ஆகியோரின் துடுப்பாட்டத்தினால் இரண்டாவது இன்னிங்ஸில் 405 ஓட்டங்கள் எடுத்தது.
முரளியின் சுழலில் சிக்கிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 178 ஒட்டங்கள் எடுத்தது. 49 ஓட்டங்களைக் கொடுத்த முரளி ஆறு விக்கட்டுகளை வீழ்த்தினார்.
நான்கு விக்கட்டுகளை இழந்து 291 ஒட்டங்கள் எடுத்த நிலையில் இலங்கை அணி நான்காம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.
ஆறு விக்கட்டுகள் இழந்து 405 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தை நிறுத்திய இலங்கை அணி பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாட பணித்தது.
மஹேல 166, சங்கக்கார 67, சமரவீர 62 ஒட்டங்கள் எடுத்தனர்.
இரண்டாவது இன்னிங்ஸிலும் முரளியின் சுழல் பங்களாதேஷ் வீரர்களை ஆட்டம் இழக்கச் செய்தது.
நான்காவது நாள் ஆட்ட நேர முடிவின் போது பங்களாதேஷ் அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் அஷ்ரபுல் 70 ஓட்டங்களுடனும் சஹீப் அல்ஹசன் 34 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். பங்களாதேஷ் அணி வெற்றிபெறுவதற்கு இன்னமும் 267 ஓட்டங்கள் தேவை.

No comments: