Tuesday, December 23, 2008
டெஸ்ட்தொடரை வென்றது இந்தியா
இங்கிலாந்து அணிக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்ததனால் இந்திய அணி டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றது.
சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றதனால் இரண்டாவது போட்டியில் வெற்றி பெறவேண்டிய சூழ்நிலையில் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 453 ஓட்டங்கள் எடுத்தது.
கம்பீர் துடுப்பெடுத்தாடி 179 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒரு காலத்தில் பிரகாசித்த ராகுல் ட்ராவிட் மிக நீண்ட நாட்களின் பின்னர் 136 ஓட்டங்கள் எடுத்து தனது இடத்தை தக்க வைக்க முயற்சி செய்தார். பெரிதும் எதிர்பார்க்கப்ப்ட்ட ஷேவாக் ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார். டெண்டுல்கர் 11 ஓட்டங்களிலும், லக்ஷ்மன் ஓட்டமெதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். யுவராஜ் சிங் 27, டோனி 29, மிஸ்ரா 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
பிளின்டொப், கொலிங்வூட் ஆகியோர் மூன்று விக்கட்டுகளையும் சுவான் 2 விக்கெட்டுக்களையும் அன்டர்சன், புரோட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணி முதலாவது இன்னிங்ஸில் 302 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி வீரர்கள் எதிர்பார்த்தது போன்று பிரகாசிக்கவில்லை. அணித் தலைவர் பீட்டர்சன் தோல்வியிலிருந்து இங்கிலாந்து அணியைக் காப்பாற்றினார். பீற்றசன் 144 ஒட்டங்கள் எடுத்தார்.
பெல் 50 ஓட்டங்களும், அண்டர்சன் ஆட்டமிழக்காது 62 ஒட்டங்களும் எடுத்தனர். பனேச்சர் ஐந்து ஓட்டங்கள் எடுத்தார். ஏனையோர் அதனை விட குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
ஹர்பஜன் சிங் நான்கு விக்கட்டுகளையும் சஹீர்கான் மூன்று விக்கட்டுகளையும் மிஸ்ரா இரண்டு விக்கட்டுகளையும் இஷாந்த் சர்மா ஒரு விக்கட்டையும் கைப்பற்றினர்.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கட்டுகளை இழந்து 251 ஒட்டங்கள் எடுத்ததுடன் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
நான்கு விக்கட்டுகளை இழந்து 134 ஓட்டங்கள் எடுத்த இந்திய அணி ஐந்தாவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.
சேவாக் 17, டிராவிட்டே 0, டெண்டுல்கர் 5, லக்ஷ்மன் 15 ஒட்டங்களுடன் நான்காம் நாள் ஆட்டமிழந்தனர்.
நான்கு விக்கட்டுகளை இழந்து 80 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை ஜோடி சேர்ந்த கம்பீரும் யுவராஜ் சிங்கும் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இவர்கள் இருவரும் இணைந்து 153 ஓட்டங்கள் எடுத்தனர்.
93 பந்துகளுக்கு முகம் கொடுத்து யுவராஜ் சிங் நான்கு சிக்ஸர் ஆறு பௌண்டரிகள் அடங்கலாக 86 ஓட்டங்கள் எடுத்தார். அணித் தலைவர் டோனி ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார்.
சதத்தை நோக்கிச் சென்ற கம்பீர் 97 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழ ந்து 251 ஓட்டங்களை எடுத்து ஆட்ட த்தை நிறுத்திக் கொண்டது.
இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட்டை இழந்து 64 ஓட்டங்களை எடுத்தது.
ஆட்டநாயகனாக கம்பீரும், தொடர் நாயகனாக சஹீர்கானும் தெரிவுசெய்யப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment