Thursday, December 25, 2008

இனியும் வேண்டாம் சுனாமி!

கடலே உனக்கு உள்ளிருக்கப்பிடிக்கவில்லையா?
அதுதான் வெளி உலகைப் பார்க்க வந்தாயோ?
இயற்கையை அழித்த மனிதருக்கு
நீ கொடுக்கும் தண்டனையா இது?
விடையில்லா ஒரு புதிர்
இயற்கையை அழித்தவர்கள் மனிதர்களாயின்
நீ ஏன் ஒன்றும் அறியாத குழந்தைகளை
இரையாக்கினாய்?
இரையாக்குவதற்கு மனிதரா
உனக்குத் தேவைப்பட்டார்கள்... சொல்...
இந்த உலகில் இப்படி ஒரு நிலை
தேவை தானா? சொல் கடலே....
பெற்றோரை இழந்த பிள்ளைகள்
எத்தனை பேரோ?
பிள்ளைகளை இழந்த
பெற்றோர் எத்தனை பேரோ?
எண்ணிக்கையில்லா இழப்பு
ஒரு நாட்டுக்கு மட்டுமா வந்தாய்?
பல நாடுகளில் பல உயிர்களை
எடுத்தாய் அல்லவா?
இறைவன் கொடுத்த அழகு நீ
ஏன் உலகை அலங்கோலமாக்கினாய்
இந்தப் பிஞ்சு உள்ளங்களின்
இலட்சியங்கள் எத்தனையோ
உன்னை அன்னையாய் நினைத்த‌
உள்ளங்களை ஏன் அழித்தாய்
வசதியாகவும், மகிழ்வுடனும்
வாழ்ந்த மனிதர்களை
ஒரு நிமிடத்தில் துன்பக்கடலில்
மூழ்கடித்து விட்டாயே...!
உன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
நாம் முன்னின்று நிவாரணம் கொடுக்கின்றோம்
எம் மக்கள் இத்துன்ப கடலில் இருந்து
மீள்வது எப்போது
இனி மீனவர்களின் கதி என்ன?
ஏற்கெனவே மீனவர்கள் உயிரை
கையில் பிடித்துக் கொண்டு
கடலில் மீன்பிடிக்கச் செல்வார்கள்
இனி அவர்கள் உயிரை
உன்னிடம் ஒப்படைத்துவிட்டு
அல்லவோ செல்வார்கள்
இனியும் வேண்டாம் சுனாமி
இங்கு துடிதுடிக்கும்
உயிர்களின் கோரிக்கை இது!
தாட்ஷா வர்மா
மித்திரன் வாரமலர்
26 01 2005







No comments: