தென் ஆபிரிக்க அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே மெல்பேர்னில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெறுவதற்கு 185 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்குடன் களத்தில் உள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலி அணி முதலாவது இன்னிங்ஸில் 394 ஓட்டங்கள் எடுத்தது. டுமினி, ஸ்டெயின் ஆகியோரின் ஒத்துழைப்புடன் தென் ஆபிரிக்க அணி அவுஸ்திரேலியாவின் வெற்றிநடையை தடை செய்தது.
டுமினி, முதல் சதத்தையும் ஸ்டெயின் முதலாவது அரை சதத்தையும் அடித்தனர்.
விக்கெட் இழப்பின்றி நான்கு ஓட்டங்களுடன் அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. தென் ஆபிரிக்க அணி 65 ஓட்டங்களைக் கூடுதலாக எடுத்தது.
12 வருடங்களின் பின்னர் வெளிநாட்டு அணி ஒன்று முதலாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணியை விட அதிக ஓட்டங்களை மெல்பேர்னில் எடுத்த சாதனையை தென் ஆபிரிக்கா தனதாக்கிக் கொண்டது.
தென் ஆபிரிக்க அணி வீரர்களின் பந்து வீச்சுக்கு முகங் கொடுக்க முடியாது அவுஸ்திரேலிய வீரர்கள் ஆட்டம் இழந்தனர். ஹைடன் 23 ஓட்டங்களுடனும் கட்டிச் 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். முதலாவது இன்னிங்ஸில் 101 ஓட்டங்கள் எடுத்த அணித் தலைவர் பொண்டிங் 99 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
ஜோன்ஸன் ஆட்டம் இழக்காது 43 ஓட்டங்கள் எடுத்தார். ஏனைய வீரர்கள் அனைவரும் குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.
ஸ்டெய் ஐந்து விக்கட்டுகளையும் கலிஸ், மாக்கஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் நிட்னி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின்போது தென் ஆபிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 30 ஓட்டங்கள் எடுத்தது. ஸ்மித் ஆட்டம் இழக்காமல் 25 ஓட்டங்களுடனும் மக்கன்சி மூன்று ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment