Tuesday, December 30, 2008

அடங்கியதுஅவுஸ்திரேலியா



கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த அவுஸ்திரேலியாவுடனான இரண்டு
டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று
தொடரைக் கைப்பற்றியது தென் ஆபிரிக்கா.
16 வருடங்களாக தாய் மண்ணில் தோல்வியடையாத அவுஸ்திரேலியா அணியை ஸ்மித்
தலைமையிலான தென் ஆபிரிக்க அணி டெஸ்ட் தொடரில்
தோல்வியடையச் செய்து புதிய சரித்திரம் படைத்துள்ளது.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் ஆறு விக்கெட்டினால்
தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றது.
பரபரப்பாக நடந்த இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் கை ஓங்கி இருந்தவேளை டுமினியும் ஸ்டெயினும் பொறுப்புடன் விளையாடி புதிய சரித்திரம் படைக்க அடித்தளமிட்டார்கள்.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில்
துடுப்பெடுத்தாடி முதலாவது இன்னிங்ஸில் 394 ஓட்டங்கள் எடுத்தது.
தென் ஆபிரிக்க அணி முதலாவது இன்னிங்ஸில் 459 ஓட்டங்கள் எடுத்தது.
தென் ஆபிரிக்கா ஏழு விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை ஜோடி சேர்ந்த டுமினியும் ஸ்டெயிஅஸி அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக் கனவைத் தகர்த்தனர். டுமினி 166 ஓட்டங்களும் ஸ்டெயின் 76 ஓட்டங்களும் எடுத்து அவுஸ்திரேலிய அணியை திக்குமுக்காடச் செய்தனர்.
கிரிக்கெட் உலகில் பலம் வாய்ந்த அணியான
அவுஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில்
அதி கூடிய ஓட்டம் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும்
ஸ்டெயினின் பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாத அவுஸ்திரேலிய அணி 247 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. தென் ஆபிரிக்க அணி வெற்றி பெறுவதற்கு 183 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
மிக இலகுவான ஓட்ட எண்ணிக்கையை ஒரு விக்கெட்டை இழந்து பெற்றது தென் ஆபிரிக்க அணி, ஸ்மித் 75 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
மக்கன்சி ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களும் அம்லா ஆட்டமிழக்காது
183 ஓட்டங்களும் எடுத்தனர்.
இரண்டு இன்னிங்ஸ்களிலும் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டெயின் ஆட்ட நாயகனாகத் தெரிவானார்.

டுமினி ஸ்டெயின் ஜோடி 180 ஓட்டங்களை சேர்த்தனர். இது 9 ஆவது விக்கட்டுக்கு எடுக்கப்பட்ட 3 ஆவது அதிக பட்ச ஓட்டங்களாகும். இன்னும் 10 ஓட்டங்கள் எடுத்திருந்தால் இந்த விக்கெட்டுக்கு புதிய சாதனை படைத்திருக்கலாம். தென் ஆபிரிக்காவின் மார்க் பௌச்சரும் சிம் கொக்கும் 1998 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக
9 ஆவது விக்கெட்டுக்கு
95 ஓட்டங்கள் குவித்ததே தற்போது சாதனையாக உள்ளது.
தென் ஆபிரிக்காவின் கடைசி 4 விக்öகட்டுகள் இணைந்து 318 ஓட்டங்கள் குவித்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.
அதே சமயம் கடைசி 4 விக்கெட்டுகள் சேர்ந்து
300 ஓட்டங்களுக்கு மேல் சேர்த்திருப்பது டெஸ்ட் கிரிக்கட்டில் 11 ஆவது முறையாக நிகழ்ந்துள்ளது.
10 ஆவது வரிசையில் அதிக ஓட்டங்கள் விளாசிய 2 ஆவது தென் ஆபிரிக்க வீரர் ஸ்டெயின் (76 ஓட்டங்கள்) ஆவார். இதற்கு முன்பாக இந்த
வரிசையில் தென் ஆபிரிக்காவின் சிம்காக்ஸ்
108 ஓட்டங்கள் (1998 ஆம் ஆண்டு)
பாகிஸ்தானுக்கு எதிராக குவித்து இருக்கிறார்.
இந்த டெஸ்டில் தென் ஆபிரிக்கா 65 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது. மெல்பேர்னில் நடந்த டெஸ்டில் சுற்றுப் பயண அணி முன்னிலை பெறுவது 12 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். கடைசியாக 1996 ஆம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகள் அணி அவுஸ்திரேலியாவை 219 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி 36 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது.

100 ஓட்டங்கள்
பொண்டிங் 101
டும்பினி 166

சதத்தை தவறவிட்டவர்
பொண்டிங் 99

5 விக்கெட்
ஸ்டெயின் 97/5, 67/5

No comments: