Monday, December 22, 2008

தி.மு.கவின் தலை விதியை நிர்ணயிக்கும் இடைத்தேர்தல்


தமிழக அரசாங்கத்தின் செயற்பாடுகளைமக்கள் அங்கீகரிக்கிறார்களா என்பதை அறிவதற்குஒரு சந்தர்ப்பமாக திருமங்கலம் தொகுதியின் இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமங்கலம் தொகுதியில் உறுப்பினரான இளவரசன் மரணமானதால் திருமங்கலம்தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறஉள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்தலைமையில் மறுமலர்ச்சித் திராவிட முன்
னேற்றக் கழகத்தின் உறுப்பினரான இளவரசன்சட்டசபைத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.திருமங்கலம் தொகுதியின் இடைத்தேர்த
லிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தவேளையில் அத்தொகுதியின் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்போட்டியிடும் என்று வைகோ அறிவித்தது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் தொகுதி வைகோவால் மறக்கமுடியாத தொகுதியாகும். திருமங்கலம் தொகுதியில் வைகோ பேசிய பேச்சின் காரணமாகதான்அன்றைய முதல்வர் ஜெயலலிதா
வைகோவை பொடா சட்டத்தில் சிறையில் தள்ளினார். வைகோவுடன் பொடா சட்டத்தில்
சிறைவாசம் அனுபவித்தவர்தான் இளவரசன்.இளவரசனின் இடத்துக்கு அழகு சுந்தரத்தை
வைகோ நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. வைகோவுடன் பொடா சட்டத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்களில் அழகு சுந்தரமும்ஒருவர். திருமங்கலம் இடைத்தேர்தலின்மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துடன்நேருக்கு நேர் மோதுவதற்கு ஜெயலலிதா தயாராகி விட்டார்.திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணாதிராவிட
முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் கூட்டணிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் திருமங்க
லம் தொகுதியின் இடைத் தேர்தல் விறுவிறுப்பாக அமையும்.



திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில்இருந்த மார்க்ஸிஸ்ட் கட்சியும், கம்யூனிஸ்ட்கட்சியும் வெளியேறி விட்டன. மார்க்ஸிஸ்ட்கட்சி அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்துடன்இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில்போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.ஆயினும் திருமங்கலத்தில் அக்கட்சி அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காகப் பிரசாரம் செய்யும்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில்இருந்து வெளியேறிய கம்யூனிஸ்ட் கட்சி எந்தக் கட்சியுடன் இணையும் என்று இதுவரைஅதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் அல்லதுவிஜயகாந்தின் தேசிய முன்னேற்றத் திராவிடக்கட்சி ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றில் கம்யூனிஸ்ட் கட்சி இணையும் சாத்தியக் கூறுஉள்ளது.யாருடனும் கூட்டணி இல்லை. தனித்தேபோட்டியிடுவேன் என்ற விஜயகாந்தின் கொள்கையினால் கம்யூனிஸ்ட் கட்சி அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்துடன் இணையும்சாத்தியமும் உள்ளது. தமிழக அரசாங்கத்தைதோல்வியடையச் செய்ய வேண்டுமானால்அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன்
இணைவதைத் தவிர வேறு மார்க்கம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்துவெளியேற்றப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி
தனியாகவே உள்ளது. அக்கட்சியுடன் கூட்டணிசேர எந்த ஒரு கட்சியும் தயாராக
இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தால்ஒதுக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் பாட்டாளி மக்கள்கட்சியை கண்டுகொள்ளாததனால்இணைப்பு சாத்தியப்படவில்லை.பாட்டாளி மக்கள் கட்சியை நோக்கி முதல்வர் கருணாநிதி நேசக்கரம் நீட்டியுள்ளார்.செயற்குழு கூடி முடிவெடுக்கப்படும் என்றுபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சித் திரõவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியனவற்றின்செயற்குழுவின் முடிவு கட்சித் தலைவரின்விருப்பத்துக்கு மாறான முடிவுகளை எடுத்ததில்லை.திராவிட முன்னேற்றக் கழகத்தை மிக மோசமாக விமர்சித்த பாட்டாளி மக்கள் கட்சி இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது. பாட்டாளிமக்கள் கட்சியின் பிரசாரப் பீரங்கியானகாடு வெட்டி குரு சிறை வைக்கப்பட்டதும்பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டது
கூட்டணி பற்றிய ரகசியப் பேச்சுவார்த்தையின் பிரதிபலன் என்றே எண்ணத் தோன்றுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காகப் பாடுபடப் போவதாக காங்கிரஸ் கட்சிஅறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் டில்லித்தலைவர்களின் விருப்பதை பூர்த்தி செய்யவேண்டிய நிலையில் உள்ள பாட்டாளி மக்கள்
கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணிசேரும் சாத்தியக் கூறுகள் அதிகமாக
உள்ளன.

திருமங்கலம் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பாரதிய ஜனதாக்
கட்சி அறிவித்துள்ளது. திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முன்னேற்ற திராவிடக் கழகம் ஆகியவற்றுடன் சமமாகப் போட்டியிடும் வல்லமைஇல்லாததனால் பாரதீய ஜனதாக் கட்சி இடைத்தேர்தலில் இருந்து ஒதுங்கி உள்ளது.திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலம் சற்றுகுறைந்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பலம் கொஞ்சம் கூடி உள்ளது.அத்தியாவசியப் பொருட்களின் விலை, மின்வெட்டுஆகியன திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்கு எதிரான முக்கிய பிரசாரமாகஅமைய உள்ளது.இலவசப் பொருட்களின் பட்டியலினால்
ஆட்சியை பிடித்த திராவிட முன்னேற்றக் கழகம், பொங்கலுக்காக பொருட்களை இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதுதவிர மாறன் குடும்பத்துடனான சமரசமும்திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியைத்தீர்மானிக்கும் காரணியாக அமைய உள்ளது.சன் தொலைக்காட்சியின் பிரசாரம் திராவிடமுன்னேற்றக் கழகத்துக்கு சாதகமானதாகஉள்ளது.
முதல்வர் கருணாநிதியின் மகனான மு. க.அழகிரியின் கோட்டையாக மதுரை விளங்குவதால்தனது கௌரவத்தை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு அழகிரி தள்ளப்பட்டுள்ளார்.அவர் மீது அதிகளவு நம்பிக்கை வைத்துள்ள
முதல்வர் பிரசாரக் குழுத் தலைவராக அவரைநியமித்துள்ளார்.
தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தாலும் மதுரை முதல்வர் மு.க.அழகிரி என்றே
அங்குள்ளவர்கள் கூறுவார்கள். அழகிரியின்பலத்தினால் திராவிட முன்னேற்றக் கழகம்
வெற்றி பெறும் நம்பிக்கையில் உள்ளது.திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்
பாளராக லதா அதியமான் நியமிக்கப்பட்டுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின்
சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டப் பேரவைஉறுப்பினராக வெற்றி பெற்ற அதியமான்
இறந்த பின்னர் அவரது மனைவியாரான லதாகழகப் பணியைச் செய்கிறார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்வேட்பாளராக முத்துராமலிங்கம் போட்டியிடுகிறார். 1996ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் இப்போது அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்தில் ஐக்கியமாக உள்ளார்.திருமலங்கலம் தொகுதியில் போட்டியிட்டுதோல்வியடைந்த தனப்பாண்டியனை தேசியமுன்னேற்ற திராவிடக் கட்சி மீண்டும் தெரிவுசெய்துள்ளது.இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முன்னோடியாக திருமங்கலம் இடைத் தேர்தல்அமைய உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்களா? இல்லையா? என்பதை திருமங்கலம் இடைத் தேர்தல் முடிவு வெளிப்படுத்தஉள்ளது.
வர்மா வீரகேசரி வாரமலர் 21 12 2008

1 comment:

deendayalnatarajan said...

idhanal thaan thimukaving thalai vidhi nirnayikka paduvadhaaga solvadhai yerka mudiyaadhu, incase,thimuka thotral, adharkum kalainiar yedhavadhu yerpadu seidhiruppar.