Sunday, March 6, 2011

கெமர்ரோச் ஹட்ரிக் ; கெய்ல்ஸ் , போலார்ட் அதிரடி

மேற்கு இந்தியத் தீவுகள், நெதர்லாந்து ஆகியவற்றுக்கிடையே டில்லியில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 215 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 330 ஓட்டங்கள் எடுத்தது.
ஸ்மித், கெய்ல்ஸ் இணைந்து 16.3 ஓவர்களில் 100 ஓட்டங்கள் எடுத்தனர்.
ஸ்மித் 53 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து களம் புகுந்த டெரன்பிராவோ, கெய்ல்ஸுடன் இணைந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 68 ஓட்டங்கள் எடுத்தனர். ஒருநாள் அரங்கில் 43 ஆவது அரைச் சதமடித்த கெய்ல்ஸ் 80 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 110 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர் இரண்டு சிக்ஸர், ஏழு பவுண்டரிகளும் 80 ஓட்டங்கள் எடுத்தார். டெரன் பிராவோ 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
நான்காவது விக்கெட்டில் இணைந்த சர்வான், போலார்ட் ஜோடி 65 ஓட்டங்கள் எடுத்த போது சர்வான் 49 ஆட்டமிழந்தார். சமீ 6 சந்ரபோல் நான்கு ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய போலார்ட் 60 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 27 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர் நான்கு சிக்ஸர், ஐந்து பவுண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்கள் எடுத்தார்.
50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 330 ஓட்டங்களை மே.இந்தியத் தீவுகள் பெற் றது. சீலார் மூன்று விக்கெட்டுகளையும் புகாரி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
331 என்ற பிரமாண்டமான இலக்குடன் களம் புகுந்த நெதர் லாந்து அணி கெமர் ரோச்சின் பந்து வீச்சில் நிலைகுலைந்த 31.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 115 ஓட்டங்கள் எடுத்து 215 ஓட்டங்களில் தோல்வியடைந்தது. கெர்வெஸ்ஸி 4, பெரஸ்ஸி 0, இங்கிலாந்துக்கு எதிராக சதமடித்து மிரட்டிய டஸ்காட்டே 7, கயிடெரண்ட் 1 போன்றோர் ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
ஏழாவது விக்கெட்டில் இணைந்த டொம் கூப்பர், புகாரி ஜோடி போராடியது. டொம் கூப்பர் ஒரு நாள் அரங்கில் 6 ஆவது அரைச் சதம் அடித்தார். புகாரி 24 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மூன்று வீரர்களையும் கெமர்ரோச் ஆட்டமிழக்கச் செய்து ஹட்ரிக் சாதனை புரிந்தார். சீலார் ஒரு ஓட்டத்துடனும் லூட்ஸ், வெஸ்டிஜர் ஆகியோர் ஓட்டமெதுவும் எடுக்காமலும் கெமர் ரோச்சின் பந்து வீச்சில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர்.
31.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து நெதர்லாந்து 115 ஓட்டங்கள் எடுத்து 215 ஓட்டங்களால் ஆட்டமிழந்தது. பென் ஒரு விக்கெட்டுக் களையும், சமி ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர். 8.3 ஓவர்களில் 27 ஓட்டங்களைக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய கெமர் ரோச் ஆட்டநாயகன் விருது பெற்றார்.சூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்

No comments: