Monday, March 21, 2011

யுவராஜ் சதம்: இந்தியா வெற்றி

இந்தியா மே.இந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா 80 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இந்தியா, மே. இந்தியத் தீவு ஆகிய இரண்டு அணிகளும் கால் இறுதிக்குத் தெரிவான நிலையில் குழு பியில் இரண்டாம் இடத்தினைத் தக்கவைத்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா இரண்டாம் இடத்தை தக்க வைத்தது. மே.இந்தியத்தீவுகள் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
இந்திய அணியில் செவாக் ,நெஹ்ரா விளையாடவில்லை. அஸ்வின், ரெய்னா ஆகியோர் களமிறங்கினர். மே.இந்தியத்தீவு அணியில் கிறிஸ் கெயில், கெமர் ரோச் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.
எட்வர்ட்ஸ், ரவிராம்போல் ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர். ரவிராம் போல் அசத்தலான பந்து வீச்சை இந்திய வீரர்களைத் தடுமாற வைத்தது. இரண்டு ஒட்டங்கள் எடுத்தபோது ரவிராம்போலின் பந்தை எதிர் கொண்ட டெண்டுல்கர் தோமஸிடம் பிடிகொடுத்தார். மே. இந்திய வீரர்கள் ஆர்ப்பரிக்க நடுவர் சைகை காட்டாமல் நின்ற போது டெண்டுல்கர் வெளியேறினார். கம்பீர் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஹோக்லி, யுவராஜ் ஜோடி 122 ஓட்டங்கள் சேர்த்தது. கோஹ்லி கை கொடுக்க யுவராஜ் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்.
ரம்÷பாலின் பந்தில் 59 ஓட்டங்கள் எடுத்து கோஹ்லி ஆட்டமிழந்தார். டோனி 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்
தõர். ரெய்னா நான்கு ஓட்டங்களுடன் வெளியேறினார். உலகக் கிண்ண அரங்கில் யுவராஜ் முதலாவது சதமடித்தார். ஒரு நாள் போட்டியில் இது 13 ஆவது சதமாகும். 123 பந்துகளுக்கு முகம் கொடுத்த யுவராஜ் இரண்டு சிக்சர் 10 பவுண்டரிகள் அடங்கலாக 113 ஓட்டங்களில் யுவராஜ் வெளியேறியதும் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையில் வீழ்ச்சியடையத் தொடங்கியது. கடைசி 7.4 ஓவர்களில் 50 ஓட்டங்கள் எடுத்த இந்தியா ஏழு விக்கட்டுக்களைப் பறி கொடுத்தது.
ரவி ரம்போல் 5 விக்கெட்டுகளை யும், ரஸல் இரண்டு விக்கெட்டுகளை யும், சமி,பிஹு ஆகியோர் தலா ஒரு விக்கெட் டையும் வீழ்த்தினர்.
269 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மே.இந்தியதீவுகள் 43 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 188 ஒட்டங்களை எடுத்தது.
ஸ்மித், எட்வர்ட் ஆரம்ப வீரர்களாகக் களமிறங்கினர். அஸ்வினின் பந்தில் எட்வர்ட் 17 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார். பிராவோ 22 ஓட்டங்களில் வெளியேறினார்.
சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய ஸ்மித் 81 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சர்வான் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த மே.இந்திய வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் வெளியேறினர்.
மே.இந்தியதீவுகள் மூன்று 30.3 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கையுடன் இருந்த வேளையில் ஸ்மித் 81 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அத்துடன் மே. இந்தியத் தீவுகளின் ஆட்டமும் முடிவுக்கு வந்தது.
சஹீர்கான் மூன்று, அஸ்வின், யுவராஜ் ஆகியோர் தலா இரண்டு ஹர்பஜயன், ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
ஆட்டநாயகனாக யுவராஜ் சிங் தெரிவு செய்யப்பட்டார்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்

No comments: