Thursday, March 31, 2011

இறுதிப்போட்டியில் இலங்கை


இலங்கை நியூஸிலாந்து அணிகளுக்கிடையே கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற முதலõவது அரையிறுதிப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளினால் வெற்றி பெற்ற இலங்கை இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்கள் எடுத்தது. நியூஸிலாந்து அணியில் லூக் உட்கா நீக்கப்பட்டு மக்கே நியூஸிலாந்து அணி திணறலுடன் ஆட்டத்தை ஆரம்பித்தது. குப்திவ், மக்குலம் ஜோடி 43 பந்துகளைச் சந்தித்து 32 ஓட்டங்கள் எடுத்தது. ஹேரத் பத்தில் சிக்ஸர் அடித்து மிரட்டிய பிரன்டன் மக்குலம் அதிக நேரம் நிலைக்கவில்லை. ஹேரத்தின் பந்தில் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த மக்குலம் அடுத்து களமிறங்கிய பிரஸிரைடர் நிதõனமாக விளையாட்டை ஆரம்பித்தார். முரளியின் சுழலில் சிக்கிய ரைடர் சங்கக்காரவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்த ரைடர், குப்தில் ஜோடி 68 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்தது. மலிங்கவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத குப்தில் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 21.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்கள் எடுத்த போது களமிறங்கிய ரோஸ் டெய்லர், ஸ்டைரிஸ் ஜோடி சற்று தெம்பு கொடுத்தது. இவர்கள் இருவரும் 108 பந்துகளுக்கு முகம் கொடுத்து 77 ஓட்டங்கள் எடுத்தனர். டெய்லர் 33 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். வில்லியம்ஸ் 22 ஓட்டங்கள் எடுத்தார். சிக்ஸர் அடித்து நம்பிக்கையூட்டிய நதன் மக்கலம் ஒன்பது ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அரைச் சதம் கடந்த ஸ்டிரைஸ் முரளியின் சுழலில் சிக்கி 57 ஓட் டங்களுடன் ஆட்டமிழந்ததும் நியூஸிலாந்தின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினர். மலிங்க, மென்டிஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் முரளி 2 விக்கெட்டுகளையும் ஹேரத் டில்ஷான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 218 என்ற இலகுவான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இல ங்கை 47.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. டில்ஷான், தரங்க ஜோடி நம்பிக்கையுடன் களமிறங்கியது. கெலத்தியன் பந்து வீச்சில் 30 ஓட்டங்களுடன் தரங்க ஆட்டமிழந்தார். 45 பந்துகளுக்கு முகம் கொடு த்த இவர்கள் 40 ஓட்டங்கள் எடுத்தனர். டில்ஷான், சங்கக்கார ஜோடி நம்பிக்கையளிக்கும் வகையில் துடுப்பெடுத்தாடியது. இவர்களின் பொறுப்பான ஆட்டத்தினால் ரசிகர்கள் உற்சாகமாக இருக்க 73 ஓட்டங்களில் டில்ஷான் ஆட்டமிழந்தார். 154 பந்துகளுக்கு முகம் கொடுத்து 120 ஓட்டங்கள் எடுத்தனர். பெரும் நம்பிக்கையுடன் களமிறங்கிய மஹேல ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். சாமர சில்வா 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 23 ஓட்டங்களில் மூன்று விக்கெட்டுகளை இலங்கை இழந்தது. 42.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்கள் எடுத்தது இலங்கை. ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சமர வீர, மென்டிஸ் ஜோடி நிதானமாகத் துடுப்பெடுத்தாடி இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார். 34 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர்கள் 35 ஓட்டங்கள் எடுத்தனர். சமரவீர ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களும், மத்தியுஸ் ஆட்டமிழக்காது 14 ஓட்டங்களும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக சங்கக்கார தெரிவு செய்யப்பட்டார். இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீரராக முரளிதரன் கடைசியாக தன் மண்ணில் விளையாடிய இப்போட்டியில் கடைசிப் பந்தில் விக்கெட்டை வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தார். காலியில் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியிலும் கடைசிப் பந்தில் விக்கெட்டை வீழ்த்தினார். 1996 ஆம் ஆண்டு சம்பியனான இலங்கை 2007 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. 1975, 79, 92, 99 ஆம் ஆண்டுகளில் அரையிறுதியில் தோல்வியடைந்த நியூஸிலாந்து இம்முறையும் தோல்வியடைந்து வெளியேறியது. ரமணி சூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்

No comments: