உலகக்கிண்ண
இரண்டாவது காலிறுதிப்போட்டியில் இந்தியாவும் பங்களாதேஷும் மோத உள்ளன.ஆசியாவைச்சேர்ந்த
ஒரு நாடு வெளியேறப்போகின்றது. பீ
பிரிவில் பாகிஸ்தான்,தென் ஆபிரிக்கா, மேற்கு
இந்தியத்தீவுகள் ஆகிய பலமான நாடுகளையும்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து,சிம்பாப்வே ஆகிய பலம் குன்றிய
நாடுகளையும் வென்று
12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இந்தியா.உள்ளது அயர்லாந்தும்
சிம்பாப்வேயும் பலம் குறைந்த நாடுகள்
என்றாலும் பலமான
நாடுகளுக்கு சவால்விட்டு தோல்வியடைந்தன.
ஏ பிரிவில் இடம் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான்,ஸ்கொட்லாந்து, இங்கிலாந்து ஆகியவற்றுடனான போட்டியில் வெற்றிபெற்றது. இலங்கை,நியூஸிலாந்து
ஆகியவற்றிடம் தோல்வியடைந்தது. மழைகாரணமாக அவுஸ்திரேலியாவுடனான போட்டி கைவிடப்பட்டு இரண்டு
நாடுகளுக்கும் தலா ஒரு புள்ளி
வழங்கப்பட்டது. ஏழு புள்ளிகளுடன் நான்காவ
து இடம் பிடித்தது பங்களாதேஷ்
இந்தியாவுக்கு எதிராக விளையாடிய விளையாடிய
ஆறு நாடுகளும் சகல விக்கெட்களையும் இழந்தன
இந்திய பந்து வீச்சும் களத்தடுப்பும்
மற்றைய நாடுகளை விட
அதி உச்சத்தில் உள்ளன.இந்தியா ஒரு
போட்டியிலும் சகல விக்கெட்களையும்
இழக்கவில்லை.
ஆப்கானிஸ்தானும்
இங்கிலாந்தும் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் சகலவிக்கெற்களையும்
இழந்தன. ஆப்கானிடம் மட்டும் பங்களாதேஷ் சகல
விக்கெற்களயும் இழந்தது. இலங்கை ஒடு
விக்கெற்றை இழந்து 300 ஓட்டங்கள் அடித்தது. ஸ்கொட்லாந்து 318 ஓட்டங்கள்
அடிக்க பங்களாதேஷ் 322 ஓட்டங்கள் அடித்து வென்றது.
பாகிஸ்தானுக்கு
எதிராக 300 ஓட்டங்களும் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக
307 ஓட்டங்களும் இந்தியா அடித்தது. கடை
நான்கு போட்டிகளையும் விரட்டிச்சென்று வெற்றி பெற்றது.தவன்
இரண்டு செஞ்சரிகளும் கோஹ்லி ரெய்னா ஆகியோர்
தலா ஒரு செஞ்சரியும் அடித்தனர்.
ஷமி,மோகித்சர்மா, அஸ்வின் ஆகியோர் பந்திவீச்சில்
நம்பிக்கை யளிக்கின்றனர்.சிம்பாப்வே வீரர் ரெய்லர் இந்தியாவுக்கு
எதிராக ஒரு செஞ்சரி அசித்துள்ளார்.
பங்களாதேஷ் வீரரானமகமதுல்லா இரண்டு செஞ்சரிகள் அடித்துள்ளார்தமீம்
இக்பால் 95 ஓட்டங்கள் அடித்து செஞ்சரியை தவறவிட்டார். மிகப்பலமான
நிலையில் இந்தியா உள்ளது.
No comments:
Post a Comment