Saturday, March 28, 2015

திட்டமிட்ட வெற்றி

அவுஸ்திரேலியாவும்நியூஸிலாந்தும் இணைந்து உலகக்கிண்ண கிரிக்கெற் போட்டியை நடத்த திட்டமிட்டபோதே இரண்டு நாடுகளும் இறுதிப்போட்டியில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை  தயாரிக்கப்பட்டது. இதிர் பார்த்தது போலவே இரண்டு நாடுகளும் இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.

நான்கு முறை சம்பியனான அவுஸ்திரேலியா ஐந்தாவதுமுறை சம்பியனாக களம் காண்கிறது. ஆறுமுறை அரை இறுதிவரை முன்னேறி வெளியேறிய நியூஸிலாந்து முதன் முதலாக  சம்பியன் கிண்ணத்தை சுமக்கப்போவதாக சபதமெடுத்துள்ளது.துடுப்பாட்டம் ப்ந்து வீச்சு களத்தடுப்பு என சகல துறையிலும் பிரகாசிக்கும் இரண்டு நாடுகளும் சமபலத்துடன் உள்ளன. கூட்டாக உலகக்கிண்ணப்போட்டியை நடத்தினாலும் இரண்டு நாடுகளும் பரம வைரிகளே. அவுஸ்திரேலிய வீரர்களின் சீண்டல்களும் நக்கல் களும் நியூஸிலாந்த்சி எழுச்சி பெற வைத்துள்ளன.

தோல்வியடையாது தொடர் வெற்றிகளுடன் இறுதிப்போட்டிவரை முனேறியுள்ளது நியூஸிலாந்து. நியூஸிலாந்திடன் மட்டும் தோல்வியடைந்து இறுதிப்போட்டியில் கால் வைத்துள்ளது அவுஸ்திரேலியா.நியூஸிலாந்தின் போல்டுக்கும் அவுஸ்திரேலியாவின்ஸ்ரக்குக்கும் இடையிலேயான போட்டியாகவும் இந்த இறுதிப்போட்டி அமைய உள்ளது. 

போல்ட் 21 விக்கெற்களையும் ஸ்ரக் 20 விக்கெற்களையும் வீழ்த்தி உள்ளனர்.
இருவரும் தலா இரண்டுமுறை நான்கு விக்கெற்களை வீழ்த்தி உள்ளனர்.நியூஸிலாந்து வீரரான சவுதி 33 ஓட்டங்களைக்கொடுத்து ஏழு விக்கெற்களை வீழ்த்தி முதல் இசத்தில் உள்ளார். அவுஸ்திரேலியாவின் ஸ்டாக் 28 ஓச்சங்களுக்கு ஆறு விக்கெற்களை வீழ்த்தி இரண்டாம் இடத்திலுள்ளார். போல்ட் {நியூஸிலாந்து}ஐந்தி விக்கெற் 27 ஓட்டங்கள், மாஸ் [அவுஸ்திரேலியா}ஐந்து விக்கெற் 33 ஓட்டங்கள்  என ப்க்கபலமாக உள்ளனர்.
போல்ட் 14 ஓட்டமற்ற ஓவர்கலையும் அவுதி ந்ந்ழு ஓட்டமற்ற ஓவர்களையும் வீசி அவுஸ்திரேலியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். மாஸும் பக்னரும் தலா ஒரு ஓட்டமற்ற ஓவரக்ளை வீசி உள்ளார் 

கப்தில் ஆட்டமிழக்காது 237 ஓட்டங்கள்   அடித்துள்ளார்.குப்தில் இரன்டு செஞ்சர்கள் அடித்துள்ளாஎ. அவுஸ்திரேலிய வீரர்கள் செஞ்சரியில் முன்ன்னிலையில் உள்ளனர்.சிமித்,டேவிட் வானர், பிஞ்ச், மக்ஸ்வெல் ஆகியோர் செஞ்சரி அடித்துள்ளனர்.  அரைச்சதம் அடித்த வீரர்களில் மக்குலம் நான்கு, சிமித் மூன்று மக்ஸ்வெல் இரண்டு, மக்குலம் 17 குப்தில் 14 மக்ஸ்வெல் 14, டேவிட் வானர் 9 சிக்ஸஎகள் அட்த்துள்ளனர்.குப்த்ல் 58,மக்குலம் 44,மக்ஸ்வெல் 35, சிமித் 34  பவுண்டரிகள் அடித்துள்ளனர்

.  டோனி 15 பேரை ஆட்டமிழக்கச்செய்துள்ளார். நியூஸிலாந்து விக்கெற் கீப்பரான ரோஞ்சி 13 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளளார்.சங்ககார 541 ஓட்டங்கள் அடித்து முன்னிலையில் உள்ளார் குப்தில் 532 ஓட்டங்களுடன்முன்னிலை பெற காத்திருக்கிறார். இந்த சாதனைகள் முரியடிக்கப்படலாம்.

சச்சின் 2278,பொண்டிங் 1743, சங்ககார 1532, லாரா 1225,ஏடிபி வில்லியம்ஸ் 1207 ஓட்டங்களடித்த உலகக்கிண்ண த்தொடர் சாதனை அப்படியேதானிருக்கப்போகிறது. மக்ராத் 71, முரளி 68, அக்ரம் 55,சமிந்த வாஸ் 49 ஸ்ரீநாத் 44 விக்கெட்கள உலகக்கிண்ணத் தொடரில்  வீழ்த்தி உள்ளனர்.
  இந்தச்சாதனைகளையும் யாரும் நெருங்க முடியாது.

உலகக்கிண்ணப் போட்டித்தொடரில் அவுஸ்திரேலியா ஆறு முறை வென்றுள்ளது நியூஸிலாந்து மூன்று  முறை வென்றுள்ளது .   நியூஸிலாந்தின் முன்னாள் தலைவர் வெட்டோரியும் அவுஸ்திரேலியாவின் தலைவர் மைக்கல் கிளாக்கும்  இறுதிப்போட்டியின் பின் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளதால் இரண்டு நாடுகளுக்கும் முக்கியமான  போட்டி.

நியூஸிலாந்து சற்றுபலமான அணிபோல் தென்பட்டாலும் அவுஸ்திரேலியாவின்  களவியூகம் போட்டியுன் முடிவை மாற்ரிவிடும் திறன் மிக்கது.

2 comments:

பிரசன்னா கண்ணன் said...

Last year, India & SriLanka hosted the world cup & they both played all their matches in their home grounds - so as to ensure their entry into the KnockOuts.
As expected, they both met in the finals.
Same is the case now for AUZ & NZ ;-)

வர்மா said...

பிரசன்னா கண்ணன்

தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தாங்கள் கருத்து உண்மையானது.