Friday, March 20, 2015

நியூஸிலாந்தை வீழ்த்துமா மேற்கு இந்தியத்தீவுகள்?

உலகக்கிண்ன கால் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்தும் மேற்கு  இந்தியத்தீவுகளும் பலப்பரீட்சை செய்ய களமிறங்குகின்றன. ஏ பிரிவில் ஆறு போட்டிகளிலும்  வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது நியூஸிலாந்து. பீ பிரிவில் மூன்று தோல்வி  மூன்று  வெற்றிபெற்று ஆறு புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது மேற்கு  இந்தியத்தீவுகள்.

இலங்கை ஸ்கொட்லாந்,இங்கிலாந்து,அவுஸ்திரேலியா ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் ஆகியவற்றை மிக இலகுவாக  வெற்றிபெற்றது நியூஸிலாந்து.


அயர்லாந்துடனான‌ முதல் போட்டியிலே அதிர்ச்சி தோல்வியடந்தது மேற்கு இந்தியா. பலம் மிக்க இந்தியா, தென் ஆபிரிக்கா ஆகியவற்றை வென்று கால்  இறுதியை உறுதி செய்தது. நியூஸிலாந்து ச‌க‌ல‌ விக்கெற்க‌ளையும் இழ‌க்க‌வில்லை.ப‌ங்க‌ளாதேஷைத்த‌விர‌ ம‌ற்றைய‌ அனைத்து நாடுக‌ளும்  நியூஸிலாந்திடம் அனித்து விக்கெற்களையும் இழந்தன.சிம்பாப்வே,ஐக்கிய அரபு ஆகியன் மேற்கு இந்தியாவிடம் சகல விக்கெற்களையும் இழந்தன. இந்தியாவிடம் மேற்கு இந்தியா சகலவிக்கெற்களையும் இழந்தது.
இலங்கைக்கு எதிராக நியூஸிலாந்து 331 ஓட்டங்கள் அடித்தது. பங்களாதேஷ்  288 ஓட்டங்கள் எடுத்ததே அதிகமாகும். அயர்லாந்துக்கு ந்திராக மேற்கு இந்தியா 304 ஓட்டங்கள் அடித்து மிரட்டியது, அயர்லாந்து 307 ஓட்டங்க அடித்து அதிர்ச்சியளித்தது.பாகிஸ்தான் 301 ஓட்டங்கள் சிம்பாப்வேக்கு எதிராக  372 ஓட்டங்கள் அடித்து மிரட்டிய மேற்கு இந்தியாவுக்கு எதிரா தென் ஆபிரிக்கா 408 ஓட்டங்கள் அடித்து அடக்கியது. 



நியூஸிலாந்துக்கு எதிராக பங்களாதேஷ் வீரர் மகம்துல்லா சதம் அடித்தார். நியூஸிலாந்துக்காக குப்தில் ஒரே ஒரு சதம் அடித்தார். கைல்ஸ் இரட்டை சதம் அடித்தார். சிமன்ஸ்,சாமுவல், ஏடி பி வில்லியம்க் ஆகியோர் சதம் அடித்தனர்.தோல்வியடையாத நியூஸிலாந்தும் தோல்வியிலிருந்து மீண்ட‌ மேற்கு இந்தியாவும் ப‌ல‌ப்ப‌ரீட்சையைக்காட்ட‌ த‌யாராக‌ உள்ள‌ன‌.

No comments: