தென்.ஆபிரிக்கா |
தென்.ஆபிரிக்காவுடன் நாளை மோத உள்ள பாகிஸ்தான் மிகப்பெரிய தடையைத்தாணட வேண்டிய நிலை உள்ளது.தென்.ஆபிரிக்கா வெற்றிபெற்றால் கால் இறுதியில் விளையாடுவது உறுதியாகி விடும் இந்தியா கால் இறுதிக்கு தகுதிபெற்றுவிட்டது. பாகிஸ்தான் வெற்றிபெற்றால் கால் இறுதி வாய்ப்பு பிரகாசமாகும்.
சிம்பாப்வே,மேற்கு,இந்தியத்தீவுகள் .அயர்லாந்து ஆகியவற்றை வீழ்த்திய தென்.ஆபிரிக்கா இந்தியாவிடம் தோல்வியடைந்தது.இந்தியாவிடமும் மேற்கு.இந்தியத்தீவுகளிடமும் தோல்வியடைந்த பாகிஸ்தான்சிம்பாவ்வே,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றை வெற்றி கொண்டு நம்பிக்கையுடன் இருக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென் ஆபிரிக்காஅனைத்து விக்கெற்களையும் இழந்தது.மேற்கு இந்தியத்தீவுகள்,சிம்பாப்வே,அயர்லாந்து ஆகியவற்றின் அனைத்து விக்கெற்களையும் வீழ்த்தியது, இந்தியா,மேற்கு இந்தியத்தீவுகள் ஆகியவற்றுடனான போட்டியில் அனைத்து விக்கெற்களையும் இழந்த பாகிஸ்தான் ஐக்க்கிய அரபு இராச்சியத்தின் அனைத்து விக்கெற்களையும் வீழ்த்தியது.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவும் மேற்கு இந்தியத்தீவுகளும் 300 ஓட்டங்கள் அடித்தன. பகிஸ்தான் ஐக்கிய அரபு ராச்சியத்துக்கு எதிராக 339 ஓட்டங்கள் அடித்தது. தென்,ஆபிரிக்காவுக்கு எதிராக இந்தியா 300 ஓட்டங்கள் அடித்தது மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிராக 417 ஓட்டங்கள் அடித்து சாதனை செய்தது.
மில்லர்,டுமினி,அம்லா ,டுபிளசி டிவில்லியஸ் ஆகியோர் சதமடித்துள்ளனர். பாகிஸ்தான் வீரர் அஹமட் சிஷாட் அதிக பட்சமாக 93 ஓட்டங்கள் அடித்தார். தன் ஆபிரிக்கா அடுத்த போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை சந்திக்கிறது. தை மிக எளிதாக வென்று விடும். பாகிஸ்தான் அடுத்த போட்டியில் அயர்லாந்தை எதிர்நோக்குகிறது. கால் இறுதிக்கு தெரிவாகும் கடுமையான போட்டியாக இது இருக்கும்
No comments:
Post a Comment