உலகக்கிண்ண
கிரிக்கெற்போட்டியின் கால் இறுதியில் விளையாடும் வாய்ப்பை நியூஸிலாந்தும்
இந்தியாவும் உறுதிப்படுத்தி உள்ளன. அவுஸ்திரேலியாவும் தென். ஆபிரிக்காவும் தமது பிரிவில்
இரண்டாவது இடத்தை எட்டிப்பிடித்துள்ளன. மூன்றாவது நான்காவது
இடங்களுக்கான போட்டி மிககடுமையாக உ ள்ளது. இங்கிலாந்தைப்பின்னுக்குத்தள்ளி
பங்களாதேஷும்,
மேற்கு இந்தியத்தீவுகளை
விரட்டிவிட்டு அயர்லாந்தும் ஐந்தாவது இடத்தில் உள்ளன. அயர்லாந்திடம்
தோல்வியடைந்த மேற்கு இந்தியத்தீவுகள் மீளமுடியாத நிலையில் உள்ளது.
பங்களாதேஸும்
இங்கிலாந்தும் தலா நான்கு போட்டிகளில் விளையாடின. ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து ஆகியவற்றை வென்று இலங்கையிடம்
தோல்வியடைந்தது பங்களாதேஸ் புயல் காரணமாக அவுஸ்திரேலியாவுடனான போட்டி
கைவிடப்பட்டதால் ஒருபுள்ளி கிடைத்தது. ஐந்து புள்ளிகளுடன் நான்காவது
இடத்தில் உள்ளது
நியூஸிலாந்து அவுஸ்திரேலியா,இலங்கை ஆகியவற்ரிடம் தோல்வியடைந்து ஸ்கொட்லாந்தை
மட்டும் வென்று இரண்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது இங்கிலாந்து. பலமான
நாடுகளீடம் தோல்வியடைந்து பலம் குறைந்த நாட்டை மட்டும் வென்றுள்ளது இங்கிலாந்து.
பங்களாட்தேஷ் இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையே இன்று
நடைபெறும் போடியில் வெற்றிபெறும் நாடு கால் இறுதியில் விளையாடும்
வாய்ப்பைப்பெறும். பங்களாதேஸ் வெற்றி பெற்றால் ஏழு புள்ளிகளுடன் முன்னேறிவிடும். அடுத்து
நியூஸிலாந்துடனான போட்டி தோல்வியடைந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. இங்கிலாந்து
இன்றைய போட்டியில்
வெற் றி பெற்றால்
கால் இறுதியில் விளையாடும் வாய்பபைப்பெறும். ஆப்கானிஸ்தானுடனான அடுத்தபோட்டியில்
இலகுவாக வெற்ரிபெற்று ஆறு புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறிவிடும்.
பாகிஸ்தான்,அயர்லாந்து ஆகியன தலா ஆறு புள்ளிகளுடனுன்
முறையே மூன்றாம் நான்காம் இடங்களில் உள்ளன. நான்கு புள்ளிகளுடன் மேற்று
இந்தியத்தீவுகள் ஐந்தாவது இடத்திலுள்ளது. நாளைமறுநாள்
செவ்வாய்க்கிழமை இந்தியா அயர்லாந்து ஆகியன மோத உள்ளன. அயர்லாந்து வெற்றிபெற்றால்
கால் இறுதி நம்பிக்கை பிரகாசமாக இருக்கும். இந்தப்போட்டியில் அயர்லாந்து
தோல்வியடைந்தாலும் 15 ஆம்திகதி பாகிஸ்தானுடனான போட்டியில்
கண்டிப்பாக வெல்ல வேன்டும் பாகிஸ்தான் அயர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இறுதிச்சந்தர்ப்பம்
தோல்வியடைந்தால் வெளியேற வேண்டி இருக்கும். இரண்டு
நாடுகளுக்கும் இதுவே இறுதிச்சந்தர்ப்பம்.
நான்கு
புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் மேற்கு இந்தியத்தீவுகள் உள்ளது. அடுத்த போட்டியில்
ஐக்கிய அரபு எமிரேட்ஸை சந்திக்கிறது. வெற்றி நிச்சயம் என்றாலும்
பாகிஸ்தான் அயர்லாந்து ஆகியவற்றின் தோல்வியை எதிர்பார்க்கிறது.
No comments:
Post a Comment