Wednesday, March 4, 2015

துடுப்பாட்டமா?பந்து வீச்சா?

 இந்தியா
இந்தியா, மேற்கு. இந்தியத்தீவுகள் ஆகியவற்றுக்கிடையே நாளை நடைபெறும் போட்டி துடுப்பாட்டத்துக்கும் பந்து வீச்சுக்கும் இடையேயான போட்டியாக  இருக்கும் 

ரோஹித் சர்மா, தவான் கோஹ்லி ரெய்னா, ரஹானே,டோனி,ஜடேஜா என இந்திய துடுபாட்ட வரிசை மிக பலமாக உள்ளது. சிமித்,கைல்ஸ்,பிராவோ,சாமுவல்,ரம்டின்சிமன்ஸ் என் மேற்கு. இந்திய துடுப்பாட்ட வரிசையும் சளைத்தது அல்ல.
பலவீனமான பந்துவீச்சாளர்கள் என விமர்சிக்கப்பட்ட இந்திய வீரர்கள் எழுச்சி பெற்றுள்ளனர்.அஸ்வின் 8, ஷமி 4, மோகித்சர்மா 5, உமேஷ்யாதவ் 4 விக்கெற்களை வீழ்த்தி தமது திறமையை நிரூபித்துள்ளனர். இந்திய வீரர்களின் களத்தடுப்பும் அபரிமிதமாக உள்ளது.

பாகிஸ்தான் தென்.ஆபிரிக்கா,ஐக்கிய அரபுஎமிரேட்ஸ் ஆகியவற்றி வெற்றி கொண்டு முதல் இடத்தில் உள்ளது இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக  300 ஓட்டங்களும் தென்.ஆபிரிக்காவுக்கு எதிராக 307 ஓட்டங்களும் அடித்து வெற்றிபெற்றது இந்தியா. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடி  102 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா வெற்றிபெற்ற மூன்று போட்டிகளிலும் எதிரணியின் சகல விக்கெற்களையும் வீழ்த்தியது.இந்தியா சகல விக்கெற்களையும் இழக்கவில்லை.

மேற்கு இந்தியதீவுகள் 
யர்லாந்துடனான முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்த மேற்கு.இந்தியத்தீவுகள் பாகிஸ்தானையும் சிம்பாப்வேயையும் வீழ்த்து உற்சாகமடைந்தது.தென். ஆபிரிக்காவுடனான தோல்வியால்  துவண்டது.

அயர்லாந்துக்கு எதிராக 304 ஓட்டங்கள் அடித்து மகிழ்ச்சியிலிருந்தபோது அயர்லாந்து 307 ஓட்டங்கள் அடித்து  அதிர்ச்சையளித்தது.பாகிஸ்தானுக்கு எதிராக 310, சிம்பாப்வேக்கு எதிராக 372 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் 300 ஓட்டங்க அடித்து மிரட்டிய மேற்கு. இந்தியத்தீவுகளிக்கு எதிராக தென்.ஆபிரிக்கா  408 ஓட்டங்கள் அடித்துமிரட்டியது.பாகிஸ்தான், சிம்பாப்வேஆகியவற்றின் சகல விக்கெற்களையும் மேற்கு இந்தியதீவுகள் வீழ்த்தியது. தென். ஆபிரிக்காவிடம் சகல விக்கெற்களையும் இழந்தது.அயர்லாந்தின் ஆறு விக்கெற்களை மட்டும்வீழ்த்தியது.

கிரிஸ் கைல்ஸ் இரட்டைச்சதமும்சாமுவல்,சிமன்ஸ் ஆகியோர் சதமும் அடித்தனர். மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிராக இரண்டு வீரர்கள் சத்ம், அடித்தனர்.கோஹ்லி,தவான் ஆகிய இந்திய வீரர்கள் சதம் அடித்தனர். இந்தியாவுக்கு எதிராக யாரும் சதம் அடிக்கவில்லை

No comments: