உலக க்கிண்ண இரண்டாவது அரை இறுதிப்போட்டியில்
இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் நாளை களமிறங்கப்போகின்றன.துடுப்பாட்டம் பந்து வீச்சு
ஆகியவற்றில் இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் உள்ளன. போட்டிக்கு முன்னதாகவே
சூடுபறக்கும் விவாதங்கள் ஆரம்பமாகி விட்டன. இந்திய அவுஸ்திரேலிய வீரர்களும் தம் பங்குக்கு வாய்வீரம் காட்டத்தொடங்கி விட்டனர்.
பீ பிரிவில் ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்ற
இந்தியா முதல் இடத்தில் உள்ளது. நான்கு வெற்றி
ஒரு தோல்வி மூலம் அவுஸ்திரேலியா ஏ பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.பங்களா தேஷுடனான
போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
உலகக்கிண்ணப் போட்டிகளில்
அவுஸ்திரேலியாவின் சாதனைகள் மிக அதிகம். இப்போது நடைபெறும் உலகக்கிண்ணப் போட்டியில்
அவுஸ்திரேலியாவை விட பல சாதனைகளை இந்தியா
செய்துள்ளது. உலககிண்ண போட்டித்தொடரில் ஆறு
அரை இறுதிப்போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலியா தோல்வியடையவில்லை.டோனிதலைமையிலான இந்தியா
ஐசிசியின் அரை இறுதிப்போட்டிகளில் தோல்வியடையவில்லை.
ஆகையிலால் நாளைய அரை இறுதிப்போட்டி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சாதகமான மைதானம் சிட்னி. 35 வருட கால வரலாற்றில் 2008ஆம் ஆண்டு மட்டும்
அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. சிட்னி மைதானம் சுழல் பந்துக்கு
சாதகமானது என்ற பீதி கிளம்பியுள்ளது.உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் தொடர்ந்து 23 வருடங்களாக
ஆசிய நாடு விளையாடுகிறது.அரை இறுதிப்போட்டியில் விளையாடும் இந்தியா வின் மீது ஆசிய
ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.இந்தியா கடைசியாக விளையாடிய ஏழு போட்டிகளிலும் முதலில்
துடுப்பெடுத்தாடி 300 ஓட்டங்களை கடந்தது. தொடர்ச்சியாக ஏழு போட்டிகளில் எதிரணிகளின் அனைத்து விக்கெட்களையும்
வீழ்த்தியது.ஆனால் சகல் விக்கெட்களையும் இழக்கவில்லை.
தவான்ரோகித் ,கோலி,ரெய்னா.ரஹானே,டோனி ஆகியோர் நல்லநிலையில்
உள்ளனர். ஜடேஜா அஸ்வின் ஆகியோரும் தமது திறமையை நிரூபித்துள்ளனர். அவுஸ்திரேலிய வீரர்க்ளான
பிஞ்ச்,மைக்கல் கிளாக், மக்ஸ்வெல்,வானர்,வட்சன் ஹடின் ஆகியோர் மிரட்டுகின்றனர்.முகமது
ஷமி,உமேஷ் யாதவ்,மோகித் சர்மா, அஸ்வின் ஆகியோர் விக்கெற் வேட்டையில் முன்னணியில் உள்ளனர்.
ஸ்டாக் ஜோன்சன்.ஸ்மித்,மக்ஸ்வெல் ஆகியோரும் எதிரணியை துவம்சம் செய்ய தயாராக உள்ளனர்.
ஸ்டாக் 18 விக்கெற்களும் ஷமி 17 விக்கெற்களும்வீழ்த்திஉள்ளனர்.
உலகக்கிண்ண இறுதிப்போட்டியில்
அவுஸ்திரேலியா விளையாடும் என்ற எதிர்பார்ப்புஇருந்தது.அப்படி ஒரு எதிர்பார்ப்பு இந்திய
அணி அறிவிக்கப்பட்டபோது இருக்கவில்லை. டோனியின் தலைமைத்துவம் இந்தியாவைஇறுதிப்போட்டி
வரையிலான நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. எதிரணி வீரர்களைச் சீண்டி அவர்களின்மன உறுதிய
குலைக்கும் திறமை அவுஸ்திரேலிய வீரர்களிடம் உள்ளது. விளையாட்டில் மட்டுமலல வாய்ப்பேச்சிலும் அனல் பறக்க
உள்ளது
No comments:
Post a Comment