பங்களாதேஷ் ஸ்கொட்லாந்து ஆகியவற்றுக் கிடையே நாளை நடைபெறும் போட்டி பங்களாதேஷுக்கு மிக முக்கியமானதாகும்.ஆப்கானிஸ்தானை வென்று இலங்கையிடம் தோல்வியடைந்தது. வர்ணபகவானின் அருளினால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டது. மூன்று புள்ளிகளுடன் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளது. பங்களாதேஷைப்போன்றே மூன்று புள்ளிகளைப் பெற்ற அவுஸ்திரேலியா நான்காம் இடத்தில் உள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடி அதிக ஓட்டங்கள் பெற்றால் மூன்றாவது இடத்திலேயேஇருக்கலாம். அடுத்த போட்டிகள் நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் எதிரானவை இவை எமகண்டமாகவே இருக்கும். இன்றாலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிதான் பங்களாதேஷின் தலை விதியைத் தீர்மானிக்கும்.
நியூஸிலாந்து,இங்கிலாந்து,ஆப்கானிஸ்தான் ஆகியவற்றிடம் தோல்வியடைந்த ஸ்கொட்லாந்து கடைநிலையில் உள்ளது.
No comments:
Post a Comment