Sunday, March 22, 2015

புதிய சகாப்தம்

உலகக்கிண்ண அரை  இறுதிப்போட்டியில் நியூஸிலாந்தும் தென் ஆபிரிகாவும் மோத உள்ளன.இரணடு நாடுகளும் இதுவரை அரை இறுதியைத்தாண்டவில்லை.நியூஸிலாந்து ஆறு முறையும் தென் ஆபிரிக்கா மூன்று முறையும் அரை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து வெளியேறின.உலகக்கின்ணத்தை  தோழில் சுமக்காத ஒரு நாடு இறுதிப்போட்டியில்  விளையாடுவது உறுதியாகி உள்ளது.



மேற்குஇந்தியத்தீவுகள்{75},இங்கிலாந்து{79},இங்கிலாந்து:92}பாகிஸ்தான்{99},இலங்கை{2007}இலங்கை{2011} ஆகியவற்றிடம் நியூஸிலாந்து அரை இறுதியில் தோல்வீயடைந்தது.
இங்கிலாந்து{92},அவுஸ்திரேலியா{99},அவுஸ்திரேலியா{2007} ஆகியவற்றிடம் தென் ஆபிரிக்கா அரை இறுதியில் தோல்வியடைந்தது.
ஏழுபோட்டிகளிலும் வெற்றி பெற்று  நம்பிக்கையுடன் உள்ளது நியூஸிலாந்து. இரட்டைச்சதம் அடித்து 498 ஓட்டங்களுடன் குப்தில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.541 ஓட்ட ங்களுடன் சங்ககார முதலிடத்தில் உள்ளார்.

சிம்பாப்வே,மேற்கு இந்தியத்தீவுகள்,அயர்லாந்து,ஐக்கிய அரபுஎமிரேட்ஸ்  ஆகியவற்றை வீழ்திய தென் ஆபிரிக்கா இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றிடம் தோல்வியடைந்தது.

No comments: