Monday, April 23, 2018

ரெய்னா முதலிடம்


ஹைதராபாத்துக்கு எதிராக அபாரமாக ஆடிய சென்னை அணியின் ரெய்னா, அரைசதம் கடந்தார். இதன்மூலம், .பி.எல்., அரங்கில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில், பெங்களூரு அணி கப்டன் விராத் கோஹ்லியை முந்தி, முதலிடம் பிடித்தார். இதுவரை இவர், 165 போட்டியில், ஒரு சதம், 32 அரைசதம் உட்பட 4658 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

  சென்னை அணியின்  வெற்றிக்கு வித்திட்டஅம்பதி ராயுடு, 79 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் .பி.எல்., அரங்கில், ஒரு இன்னிங்சில் தனது 2வது அதிகபட்ச  ஓட்டங்களைப் பெற்றார். இதற்கு முன்,பெங்களூரை எதிர்த்து மும்பை அணிக்காக 2012 ஆம் ஆண்டு விளையாடியபோது 81    ஓட்டங்கள் எடுத்தார்.
ஹைதராபாத்துகு எதிராக முதல் ஓவரை வீசிய சென்னை அணியின் தீபக்சகார்,  ஓட்டம் எதுவும் கொடுக்காமல் ஒரு விக்கெற்றை வீழ்த்தினார்.,  இதன்மூலம், இந்தத் தொடரில் 'மெய்டன்' ஓவர் வீசிய 2வது பந்து வீச்சாளர் என்ற பெருமையைப்  பெற்றார். சமீபத்தில் கோல்கட்டா அணிக்கு எதிராக டில்லி அணியின் பவுல்ட், முதல் 'மெய்டன்' ஓவரை வீசினார்.


ஐதராபாத் அணியின் சாகிப் அல் ஹசனை ஆட்டமிழக்கச் செய்த  கரண் சர்மா, ஒட்டுமொத்த 'டுவென்டி-20' அரங்கில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார். இவர், 115 போட்டியில், இம்மைல்கல்லை எட்டினார்.
 

No comments: