Thursday, April 19, 2018

ராஜஸ்தானை வென்றது கொல்கட்டா



ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் மைதானத்தில்  நடைபெற்ற போட்டியில்ராஜஸ்தானை எதிர்கொண்ட கொகோல்கட்டா அணி, 7 விக்கெற் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
நாணயச்சுழற்சியில் வெற்றபெற்ற  கொல்கட்டா அணி கப்டன் தினேஷ் கார்த்திக், 'களத்தடுப்பைத்' தேர்வு செய்தார்முதலில் 'துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணிக்கு கப்டன் ரகானே, ஷார்ட் ஜோடி நிதான துவக்கம் தந்தது. சுனில் நரைன் வீசிய 4வது ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரி அடித்த ரகானே, ஷிவம் மாவி பந்தில் ஒரு சிக்சர் அடித்தார்.. முதல் விக்கெட்டுக்கு 54 ஓட்டங்கள் சேர்த்திருந்தது போது, ரகானே 36 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.  . சஞ்சு சாம்சன் 7 ஓட்டங்களுடன் வெளியேறினார்.  . பொறுப்பாக ஆடிய ஷார்ட் (44) ஆறுதல் தந்தார். ராகுல் திரிபாதி (15), பென் ஸ்டோக்ஸ் (14), கவுதம் (12), ஸ்ரேயாஸ் கோபால் (0) நிலைக்கவில்லை.

ராஜஸ்தான் அணி, 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 160 ஓட்டங்கள் எடுத்தது. பட்லர் (24) அவுட்டாகாமல் இருந்தார். கோல்கட்டா அணி சார்பில் நிதிஷ் ராணா, குர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 161
என்ற இலக்குடன் களமிறங்கியது கொல்கட்டா.   கிறிஸ் லின் ஓட்டம் எடுக்காது ஆட்டமிழந்தார்.. குல்கர்னி வீசிய 4வது ஓவரில், 'ஹாட்ரிக்' பவுண்டரி விளாசிய சுனில் நரைன், லாக்லின் பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ராபின் உத்தப்பா, உனத்கட் வீசிய 5வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 69 ஓட்டங்கள் சேர்த்திருந்த போது நரைன் (35),ஆட்டமிழந்தார்.. அபாரமாக ஆடிய உத்தப்பா, 48 ஓட்டங்களில் அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார்.


  
கப்டன் தினேஷ் கார்த்திக், நிதிஷ் ராணா ஜோடி பொறுப்பாக ஆடியது. லாக்லின் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கார்த்திக், வெற்றியை உறுதி செய்தார். கோல்கட்டா அணி, 18.5 ஓவரில், 3 விக்கெட்டுக்கு, 163 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. கார்த்திக் (42), ராணா (35) ஆகியோர் களத்திடில் இருந்தனர். ராஜஸ்தான் சார்பில் கவுதம், 2 விக்கெட் வீழ்த்தினார்.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் அணி, தொடர்ச்சியாக 9 போட்டிகளில் (2013ல் 8 2018ல் ஒரு போட்டி) வெற்றி பெற்றிருந்தது. நேற்று, இந்த வெற்றிநடைக்கு கோல்கட்டா அணி முற்றுப் புள்ளி வைத்தது. கடைசியாக, கடந்த 2012ல் (மே 20) இங்கு நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்திருந்தது.

ஆட்டத்தின் 4வது ஓவரை வீசிய கோல்கட்டா அணியின் சுனில் நரைன், 18 ஓட்டங்கள் வழங்கினார். இதன்மூலம் இவர், .பி.எல்., அரங்கில் 4வது முறையாக, ஒரு ஓவரில், 18 அல்லது அதற்கு மேல் ஓட்டங்கள் வழங்கி உள்ளார். இதற்கு முன், பஞ்சாப் (2013ல் 23 ஓட்டங்கள், 2014ல் 19ஓட்டங்கள்), டில்லி (2015ல் 20 ஓட்டங்கள்) அணிகளுக்கு எதிராக ஒரு ஓவரில் அதிகஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.

கோல்கட்டா அணியின் சுனில் நரைன், 4 ஓவரில், ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல், 48 ஓட்டங்கள் வழங்கினார். இதன்மூலம் .பி.எல்., வரலாற்றில் தனது மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார். இதற்கு முன், 2014ல் பெங்களூருவில் நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான பைனலில், 4 ஓவரில், ஒரு விக்கெட் கைப்பற்றி, 46 ஓட்டங்கள் வழங்கி இருந்தார்.

No comments: