Saturday, April 28, 2018

முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் வெற்றி


 

                      ஸ்ரேயாஸ் ஐயர்
 டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில்    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில்டெல்லி டேர்டெலில்ஸ்  55 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற   கொல்கத்தா அணி   பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவர்களில்  4 விக்கெற்களை இழந்து 219  ஓட்டங்கள் எடுத்தது.  இந்த ஐபிஎல் சீசனில் ஒரு அணி அடித்த அதிக பட்ச ஓட்டங்கள் இதுவாகும். 220  ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கி நோகித் துடுப்பெடுத்தாடிய டெல்லி 20  ஓவர்களில் விக்கெற்களை இழந்து  164 ஓட்டங்கள் எடுத்தது.
டெல்லி விளையாடிய போட்டிகளில் மும்பைக்கு எதிராக மட்டுமே வெற்றி பெற்றது. மற்றைய அனைத்துப்  போட்டிகளிலும் தோல்வியடைந்ததால் கம்பீர் தலமைப் பொறுப்பில் இருந்து விலகினார்இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் களம் இறங்கிய முதல் போட்டியிலேயே வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

டெல்லி அணியின் ப்ரித்வி ஷா, கொலின் மன்ரோ தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிஓட்டங்களிக்  குவித்தனர். இதனால் டெல்லி அணி  5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்கள்  எடுத்தது
 

                            ரசல்

 . இளம் வீரர் பிரித்வி ஷா, 38 வது பந்தில் .பி.எல்., அரங்கில் முதல் அரைசதம் எட்டினார். இவர், 62 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.. ரிஷாப் பன்ட் 'டக்' அவுட்டாக,  27 ஓட்டங்களில் வெளியேறினார்..

முதன் முதலாக கப்டனாக களமிறங்கிய ஸ்ரேயாஸ், அரைசதம் கடந்தார். ஷிவம் மாவி வீசிய கடைசி ஓவரில் ஸ்ரேயாஸ் 4 சிக்சர், 1 பவுண்டரி விளாச, மொத்தம் 29 ஓட்டங்கள் கிடைத்தன.  40 பந்துகளைச் சந்தித்த. ஸ்ரேயாஸ்  10 பவுண்டரி 3 சிக்ஸர் அடங்கலாக ஆட்டமிழக்காது 93 ஒட்டங்கள் எடுத்தார்.

கடின இலக்கைத் துரத்திய கொல்கட்டா அணியின் முன்னிலை வீரர்கள் நிலைக்கவில்லை.  கிறிஸ் லின் 5  உத்தப்பா , 9 பந்துகளில்  நரைன் 26,ராணா 8  .. தினேஷ் கார்த்திக் நீடிக்கவில்லை. ஷுப்மன் 37, ஷிவம் 0 என, வரிசையாக வெளியேறினர் 30 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸர் அடங்கலாக 44 ஓட்டங்கள் எடுத்த ரசல் ஆட்டமிழக்ககொல்கட்டாவின்
தோல்வி உறுதியானது

                  டெல்லி வீரர்களின் மகிழ்ச்சி
கொல்கட்டா அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 164 ரன்கள் மட்டும் எடுத்து, வீழ்ந்தது. டில்லி அணி, 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குல்தீப் 7 ஓட்டங்களுடனும்.மிட்சல் ஜான்சன் 12 ஓட்டங்களுடனும்  ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஸ்ரேயாஸ், தனது 23 வயது, 142 வது நாளில், டெல்லி அணி கப்டனாக   களமிறங்கினார். இதையடுத்து, கோஹ்லி (22 வயது, 187 நாள்), ஸ்மித் (22 வயது, 344 நாள்), ரெய்னா (23 வயது, 112 நாள்) அடுத்து, .பி.எல்., அரங்கில் குறைந்த வயதில் கப்டனாக களமிறங்கிய, நான்காவது வீரர் ஆனார்.


கடந்த 2010, மார்ச் 25ல் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கம்பிர் பங்கேற்கவில்லை. தற்போது 8 ஆண்டுகள் கழித்து .பி.எல்., போட்டியில்  காம்பிர்.விளைய்ட்டவில்லை.

                    கொல்கட்டாவின் வியூகம்

டில்லி அணிக்காக ரூ. 11 கோடிக்கு வாங்கப்பட்டவர் 'ஆல் ரவுண்டர்' கிறிஸ் மோரிஸ். இதுவரை 4 போட்டிகளில், 46 ஓட்டங்கள் மட்டும் எடுத்து, 3 விக்கெட் வீழ்த்திய இவர், முதுகு வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து, கிறிஸ் மோரிஸ் தொடரில் இருந்து விலகிக் கொள்ள, மற்றொரு தென் ஆப்ரிக்க வீரர் ஜூனியர் டலா, 28, டெல்லி அணியில் சேர்க்கப்பட்டார்.
    


No comments: