Monday, April 9, 2018

அதிவேக அரைச்சதம் அடித்து ராகுல் சாதனை

   ஐபிஎல் தொடரின் 2-வது ஆட்டம் சண்டிரில் நடைபெற்றது.. இதில் முதலில் களம் இறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெற் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் சேர்த்தது. பின்னர் 167 ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசி லோகேஷ் ராகுல் எதிர்கொண்டார். 4-வது பநதில் சிக்ஸ் விளாசிய லோகேஷ் ராகுல் ஐந்தாவது மற்றும் 6-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 2-வது ஓவரை முகமது ஷமி வீசினார். 3-வது பந்தில் சிக்சரும், 4-வது பந்தில் பவுண்டரியும் விரட்டினார்.


3-வது ஓவரை அமித் மிஸ்ரா வீசினார். இந்த ஓவரை லோகேஷ் ராகுல் துவம்சம் செய்தார். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ராகுல், 2-வது மற்றும் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். அதோடு மட்டுமல்லாமல் 4-வது மற்றும் ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு விராட்டினார். இத்துடன் 14 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார். அத்துடன் ஐபிஎல் சீசனில் அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார்.

இதற்கு முன் 2014-ல் யூசுப் பதான் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 15 பந்திலும், 2017-ல் சுனில் நரைன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக 15 பந்திலும் அரைசதம் அடித்ததே அதிவேக அரைசதம் சாதனையைாக இருந்தது. தற்போது ராகுல் அதை முறியடித்துள்ளார். ரெய்னா கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 16 பந்தில் அரைசதம் அடித்தது தற்போது 3-வது அதிவேக அரைசதமாக உள்ளது.
வார்னர் 2017ல் 4.1 ஓவரில் அரைசதம் அடித்தார். 4.2 கில்கிறிஸ்ட் 2009 அரைசதம் அடித்தார். 4.6 ஓவரில் கெயில் 2013 அரைசதம் அடித்தார்.

No comments: