Monday, April 23, 2018

ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் பரபரப்பான கடைசிப்பந்தில் வென்றது சென்னை


 சென்னை சூப்பர் கிங்ஸ் ஹைதராபாத் சன்ரைர்சஸ் ஆகியவற்றுக்கிடையே  ஹைதராபாதில் நடைபெற்ற போட்டியில் ராயுடு ரைனாஆகியோரின் அசத்தலான துடுப்பாட்டத்தால் சென்னை வெற்றி பெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கேன் வில்லியம்ஸ்சன் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை 20ஓவர்களில் மூன்று  விக்கெற்களை இழந்து  182 ஓட்டங்கள் எடுத்தது.  183 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ஹைதராபாத் ஆறு விக்கெற்களை இழந்து 178 ஓட்டங்கள் எடுத்ததால் நான்கு ஓட்டங்களில் சென்னை வெற்றி பெற்றது.
சென்னை வீரர் இம்ரான் தாஹீருக்குப் பதிலாக டுபிளிசிஸ்  அணியில்  இடம் பிடித்தார். ஹிதராபாத்தில்  தவானுக்குப் பதிலாக ரிக்கி புகியும் ஜோர்டனுக்குப் பதிலாக ஸ்டான்ஸேயும் இடம் பிடித்தனர்.
சிறந்த துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட சின்னைக்கு எதிராக ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்களின் திறமையில் நம்பிக்கை வைத்து கப்டன் வில்லியம்ஸன் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். முதல் பத்து ஓவர்களில் சென்னை இரண்டு விக்கெற்களை இழந்து 53 ஓட்டங்கள் எடுத்ததால் அவரது நம்பிக்கை வீண்போகவில்ல. அடுத்த பத்து ஓவர்களில் சென்னை வீரர்கள் 129 ஓட்டங்கள் அடித்து வில்லியம்சனின் நம்பிக்கையைத் தவிடு  பொடியாக்கினர்.


சென்னை அணி வீரர்களான வட்சனும் டிபிளிஸிஸும் அரம்பத் துடுப்பாட்ட வீரர்களகக் களம் இறங்கினர். பந்தைத் தொடுவதற்கு இருவரும் தடுமாறினர். 13 பந்துகளுக்கு முகம் கொடுத்த வட்சன் மூன்று ஓட்டங்கள் மட்டும் எடுத்தார்புவனேஸ்வரின் பந்தை ஹீடாவிடம் பிடிகொடுத்த வட்சன் ஒன்பது ஓட்டங்களில் வெளியேறினார்.ஆறு ஓவர்களில் ஒரு விக்கெற்றை இழந்த சென்னை 27 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது. டுபிளசிஸுடன் ரெய்னா இணைந்தார்பெரிது  எதிர்பார்க்கப்பட்ட டுபிளிசஸ் 11 ஓட்டங்கள் எடுத்தபோது ரஷீத் கானின் பந்தில் விக்கெற் கீப்பர் சகாவினால் ஸ்டம்பிங்  செய்யப்பட்டார். மூன்றாவது விக்கெற்றில் இணைந்தாடிய ரெய்னாவும் பெங்களூர் மண்ணின் மைந்தன் ராயுடுவும் ஹைதராபாத் வீர்ரர்களின் பந்து வீச்சைத் துவம்சம் செய்து சென்னை ரசிகர்களைக் குஷிப்படுத்தினர்.10 ஓவர்களில் 53 ஓட்டங்கள் மட்டும் எடுத்துத் தடுமாறிய சென்னையை ரெய்னாவும் ராயுடுவும் தூக்கி நிறுத்தினர். ராயுடு 27 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். ரெய்னா 39 பந்துகளி 50 ஒட்டங்கள் எடுத்தார். இந்த ஜோடியைப் பிரிப்பதற்காக வில்லியம்சன்ஸ் செய்த முயற்சிகள் எவையும் கைகொடுக்கவில்லை.

ரெய்னா ராயுடு ஜோடி மூன்றாவது விக்கெற்றுக்கு 112 ஓட்டங்கள் எடுத்தபோது ராயுடு ரன் அவுட் ஆனார். 37 பந்துகளை சந்தித்த ராயுடு நான்கு சிக்ஸ் ஒன்பது பவுண்டரிகள் அடங்கலாக 79 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராயுடு கடைசியாக சந்தித்த 16 பந்துகளில் 48 ஓட்டங்கள் எடுத்தார்ஆறு பவுண்டரி மூன்று சிக்ஸரும் இதில் அடக்கம். ரெய்னாவுட  இணைந்த டோனியும் தன் பங்குக்கு அடித்து நொறுக்கினார். 20 ஓவர்கள் முடிவில் ரெய்னா 54  ஓட்டங்களுடனும் டோனி 25  ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

183 ஓட்டங்கள் என்ற வெற்ரி இலக்குடன் களம் இறங்கிய ஹைதராபாத் வீரர்களால் சென்னை வீரர்களின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. தீபக் சஹாலின் துல்லியமான பந்துவீச்சால் ரிக்கி புய்மணிஷ் பாண்ட ஆகிய இருவரும் ஓட்டம் எதுவும் எடுக்காமலும்    தீப் ஹூடா  ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.
நான்காவது விக்கெற்றில் இணைந்த   கேன் வில்லியம்சன் , ஷாகிப் அல் ஹசன் ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்  71 ஓட்டங்கள் எடுத்தபோது 24 ஓட்டங்கள் எடுத்த  . ஷாகிப் அல் ஹசன்   ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சனுடன் யூசுப் பதான் ஜோடி சேர்ந்தார் இந்த ஜோடி  ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஹைதராபாத் ரசிகர்களின் மனதில் நம்பிக்கை பிறந்தது.35  பந்துகளில் 50ஓட்டங்களை வில்லியம்ஸன் அடிக்க  வெற்றிக்கொடி ஹைதராபாத்தின் பக்கம் திரும்பியது. கடைசி மூன்று ஓவர்களில் 42 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
பரபரப்பான நிலையில் 17 ஆவது ஓவரை பிராவோ வீசினார். அந்த ஓவரில் ஒன்பது ஓட்டங்களை விட்டுக்கொடுத்த பிராவோ, வில்லியம்ஸனை வெளியேற்றினார். ஹைதராபாத் ரசிகர்கள் சோகமாகினர். சென்னை வீரர்கள் உற்சாகமாகினர்.


கடைசி இரண்டு ஓவரில் 33 ஓட்டங்கள் தேவைப்பட்டது, யூசுப் பதான்  அடிப்பர் என ஹைதராபாத் ரசிகர்கள் நம்பி இருந்தனர்.யூசுப் பதானுடன்  சகா ஜோடி சேர்ந்தார். 19 ஆவது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் யூசுப் பதான் சிக்ஸ் அடித்து நம்பிக்கையூட்டினார்.      4-வது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஷித் கான் கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 14 ஓட்டங்கள் கிடைத்தது.இரண்டு அணி ரசிகர்களும் தமது அணியின் வெற்றி பெற வேண்டும் என விரும்பினர்.


கடைசி ஓவரில் 19  ஓட்டங்கள் தேவைப்பட்டது. பிராவோ கடைசி ஓவரை வீசினார். முதல் மூன்று பந்துகளில் மூன்று  ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 4 ஆவது பந்தை ரஷித் கான் சிக்சருக்கு விரட்டினார். இதனால் கடைசி இரண்டு பந்துகளில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை ரஷித் கான் பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அடித்தால் சிக்ஸ் இல்லையேல் அவுட் என்ற மனநிலையில் ரஷீட்கான் இருந்தார்.ப்பிராவோ பதற்றமடைந்தார்.டோனி அருகில் சென்று ஆலோசனை வழங்கினார். ஆனால் பிராவோ ஒரு ஓட்டத்தை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 4ஓட்டங்களில் வெற்றி பெற்றது.  ஆட்ட நாயகன் விருதை ராயுவுக்கு வழங்கப்பட்டது.

No comments: